Saturday, August 22, 2015

பொசுக்கு, பொசுக்கென பூமிக்கு வந்து போகும் ஏலியன்கள்! ஆவணம் வெளியிட்ட எப்.பி.ஐ

13-1434189819
வாஷிங்டன்: வேற்று கிரகவாசிகள் என்று அழைக்கப்படும் ஏலியன்களின் பரிணாம வடிவங்கள் பூமியில் இறங்கியதாக அமெரிக்க உளவுத்துறை தனது இணையதளத்தில் ஆவணங்களை வெளியிட்டு உள்ளது.
அமெரிக்க உளவுத்துறை எப்.பி.ஐ தற்போது ஏலியன்கள் குறித்து வெளியிட்ட சில ஆவணங்கள் உலக விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்துவதாக அமைந்துள்ளது.
எப்.பி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கை மற்றும் ஆவணங்களின் படி பூமிக்கு எண்ணற்ற வேற்று கிரக உயிரினங்கள் வருகின்றன.
இதில் சில வகை பரிணாம வளர்ச்சி பெற்று, முந்தைய ஏலியன் படங்களில் இருந்து மாறுபட்டவையாக உள்ளன. நவீன விமானங்கள் மூலமும் வந்து உள்ளன என்று கூறி ஆச்சரியம் ஏற்படுத்துகிறது அந்த அறிக்கை.
13-1434189788-aliens-600
மனிதர்களை போன்ற ஏலியன் அறிக்கையிலுள்ள சில சுவாரசிய விவரங்களை பாருங்கள்: ஏலியன்கள் வருகை தரும் பறக்கும் தட்டுக்கள் குழுவாகவே வந்திறங்குகின்றன. அவர்களின் நோக்கம் யாருக்கும் தொந்தரவு தருவதாக இல்லை. தங்களது பறக்கும் தட்டை (விமானத்தை) எங்கு தரையிறக்க வேண்டும் என்பதை ஆழ்ந்து சிந்தித்துதான் முடிவெடுக்கின்றனர். ஏலியன்கள் மனிதர்களைப் போல் உள்ளனர். ஆனால் மிகப்பெரிய வடிவில் உள்ளனர்.https://www.google.lk/?gws_rd=ssl#q=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
13-1434189819-aliens-1-600
பறக்கும் தட்டுகள் அவர்கள் வந்த பறக்கும் தட்டுகள் கதிரியக்க ஆற்றல் அல்லது ஒருவகை கதிர் வீச்சை பெற்றிருக்கின்றன. அவர்கள் தங்கள் விருப்பபடி உள் நுழைவதற்கு மற்றும் சுவடே இல்லாமல் சாதாரணமாக நம் பார்வையில் இருந்து மறைந்து விடுவர். அவர்களை ரேடியோ மூலமாகவோ ராடார் மூலமாகவோ அவர்கள் இயந்திரத்தை அடைய முடிய வில்லை.
13-1434189868-ufo-alien-document-from-600
வெப்பம் தாங்கும் பறக்கும் தட்டில் வெப்பத்தை தாங்கி கொள்ளும் உலோக குழல் உள்ளது. நடுவில் பரிசோதனைகூடம் உள்ளது. பின்புறம் போர் தளவாடங்களை கொண்டு உள்ளது. அவை அடிப்படையில் ஒரு சக்தி வாய்ந்த ஆற்றல் இயந்திரத்தை கொண்டுள்ளது. இவ்வாறு விரிவடைகிறது அறிக்கை.
oneindia

இந்தியாவில் வேற்றுக்கிரகவாசிகள் - அதிர்ச்சியூட்டும் ஆய்வுகள்!...


அமெரிக்காவின் கலிப்போர்னியா மாகாணத்தில், மனிதனுக்கு அப்பாற்ப்பட்ட சக்தியுடனும், உடல் மொழியுடனும், மனிதர்களோடு மனிதனாக வாழ்வதாக ஹாலிவுட் சினிமாக்களால் வர்ணிக்கப்பட்ட ஏலியன்ஸ், இந்தியாவில் இருந்ததாகச் சொல்கிறது மேலை நாட்டு மீடியாக்கள்.
ஆனால், அவர்கள் ஏலியன்ஸ் என்று கைகாட்டுவது குப்பனையோ, சுப்பனையோ அல்ல.. நாம் வணங்கும் கடவுள்களை. அதற்கு ஆதாரமாக அவர்கள் சமர்பிப்பது நமது புராணங்களை... அதாவது, இந்து புராணங்களின்படி, கடவுள் என்பவர் மனித ரூபத்திலேயே இருந்ததில்லை. ஆறு முகங்கள், நாலைந்து கைகள், நீல நிற உடல் என மனிதர்களிடம் இருந்து வேறுபட்டே காணப்பட்டனர். அவர்கள் மந்திரங்கள் சொல்லி சாதாரண வில்லை எடுத்துவிட்டால் கூட வானில் மின்னல்கள் எழும்பின.
இன்று நாசா எந்த எரிபொருளும் இல்லாமல் பறக்கும் இயந்திரம் கண்டுப்பிடிக்க, அது விமானங்கள் என்ற பெயரில் இந்து கடவுள்களிடம் அப்போதே இருந்தது. அதைத்தான், ‘ஏலியன்ஸின் பறக்கும்தட்டு’ என்கிறோம்.
இப்படி, இன்றைய அறிவியலின் மூலம் மனிதன் கண்டுப்பிடித்த சாதனங்கள் பல ஆயிரம் வருடங்கள் முன்பே அவர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். அவர்கள் மழையை வர வைத்தார்கள், மலையைக் கையால் தூக்கினார்கள், தூர தேசத்தில் நடப்பவற்றை, இருந்த இடத்திலேயே பார்த்தார்கள். என்பவர்கள் ஒரு படி மேலே போய், அவர்கள் அணு ஆயுதத்தைவிட மேம்பட்ட ஆயுதத்தைப் பயன்படுத்தினார்கள் என்கிறார்கள்.
ராமாயணத்தில், ராவணன் வாழ்ந்ததாகச் சொல்லப்படுவது, கடல் மட்டத்தில் இருந்து 600-அடிக்கு மேல் இருக்கும் சிஜிரியா மலையில். இதை இலங்கை அரசு சுற்றுலாத் தளமாக அறிவித்துள்ளது. இந்த மலையில் உள்ள ஒவியங்களில் பெண்கள் சிலர் அரை நிர்வாணத்துடன், மேகங்களிடையே பறப்பது போல் உள்ளன. இதை, பத்துத் தலைக்கொண்ட ராவணன் விண்ணுலகத்துக்கும், பூவுலகத்துக்கும் பிறர் வந்து செல்ல துறைமுகமாக இருக்க நினைத்து எழுப்பியதாகச் சொல்கிறார்கள்.
மகாபாரதத்துக்குப் பல யுகங்களுக்கு முன்னால் நடந்த ராமயணத்தில் சீதையைக் கடத்த, ராவணன் பறக்கும் விமானத்தையே பயண்படுத்தியாகப் புராணங்கள் எடுத்துரைக்கிறது. தமிழகத்தில் உள்ள பல கோவில்கள், ‘அரசரின் கனவில் இறைவன் கோயில் எழுப்பச் சொன்னார், அரசர் வைத்த போட்டிகளில் பங்கேற்றார்’ என்பது போன்ற குறிப்புகள் உள்ளன.
பழங்கால அரசருடன் கடவுள்கள் தொடர்பு வைத்தாகவே நம்பப்படுகிறது. அந்த வகையில் தமிழகக் கோயில்கள் கடவுளின் வழிகாட்டுதலின் பெயரிலேயே கட்டப்பட்டுள்ளதாகக் கருதுக்கின்றனர்.
இந்து கடவுள்களை மட்டுமல்லாமல்... இயேசு, புத்தர், டாவின்சி, போப் எனச் சகலரையும் இந்த விஷயத்தில் இழுக்கிறார்கள். இயேசுவை சித்தரிக்கும் பல பழமைவாய்ந்த ஒவியங்களில் பறக்கும் தட்டுக் காட்சியளிக்கிறது. ‘வாடிகன் சிட்டியில் ஏலியன்ஸின் பிணங்கள் உள்ளன, புத்தர் ஆற்றின் மேல் நடந்தது ஏலியன்ஸூடன் வைத்த தொடர்பால்தான், டாவின்சி வரைந்த ஒவியங்கள் நாம் இன்று உபயோகிக்கும் ஆயுதங்களைப் பற்றியுள்ளன’ என்று ஒவ்வொன்றும் இருக்கிறது.
ஆனால் இவர்களை எல்லாம் ஏலியன்ஸுடன் தொடர்பு வைத்துள்ளவர்கள் லிஸ்டில் சேர்த்து, இந்து கடவுள்களை மட்டும் ஏலியன்ஸ் என்கிறார்கள். இப்படிக் கடவுள்களை ஏலியன்ஸாக வரையறுப்பதை இந்தியாவில் பலர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
‘அவர்களிடம் பறக்கும் தட்டு இருந்தும் அவர்கள் ஏன் இந்தியாவைவிட்டு மற்ற நாட்டுக்கு செல்லவில்லை? அவர்கள், இப்போது எங்கு இருக்கிறார்கள்? எங்கிருந்து வந்தார்கள்? மீண்டும் வருவார்களா? வந்தால் எப்போது வருவார்கள்? இப்போது அவர்களிடம் இன்னும் மேம்பட்ட அதி நவீன ஆயுதங்கள் இருக்கக்கூடுமா, அவர்கள் வேறு எதையாவது விட்டு சென்றிருக்கிறார்களா, அவர்களுக்கு என்று ஒரு கிரகம் இருக்கிறதா, அவர்கள் ஏன் நம்முடன் தொடர்பு வைத்துக்கொள்ள ஆசைப்பட்டார்கள்’ இப்படிப் பல கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் நம்மால் எந்தச் சார்ப்பு நிலைக்கும் வர முடியாது.
இப்போதே இந்துக்களின் புராணங்களான வேதங்களை அமெரிக்காவின் நாசா ரகசியமாக ஆராய்ச்சி செய்வதாகச் சிலர் இணையதளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர். எது எப்படியோ இன்னும் சில வருடங்களில் ஏலியனை தான் கடவுள் என்கிறோம் என்று சைன்ஸ் ஃபிக்‌ஷன் படங்கள் வெளிவர தொடங்கிவிடும்.
நியூயார்க்கில் ஏலியன்ஸுடன் சண்டைப்போட்டுக் கொண்டிருந்த ‘வில் ஸ்மித்தும், டாம் க்ரூஸும்’, இந்தியாவில் உள்ள ஏலியன்ஸுக்கு எதிராகத் துப்பாக்கி தூக்குவார்கள் என்பது மட்டும் நிச்சயம்!.
‘‘2001-ல் ‘கல்ப் ஆப் கம்பாட்’ பகுதியில் அகழ்வாராய்ச்சியில் ஈடுப்பட்டபோது கடலுக்குள் ஒரு பெரிய நகரத்தைக் ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்தனர். கண்டுப்பிடிக்கப்பட்ட அந்த நகரமானது, பெரிய துறைமுகமாகச் செயல்பட்டிருக்க வேண்டும். சிதைந்து கிடக்கும் அந்த நகரத்தின் மீது பல வான் வழி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அங்குச் சிதைக்கப்பட்டிருக்கும் கட்டடங்கள், நம்மைவிட டெக்னாலஜியில் மேம்பட்டவர்களால் கட்டப்பட்டுள்ளது. அந்த டெக்னாலஜியை, மனிதன் கண்டுப்பிடிக்க இன்னும் பல ஆயிரம் வருடங்கள் பிடிக்கும்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த அந்த நகரம்.. துவாரகை மைந்தன் கிருஷ்ணன் ஆண்ட துவாரகா! இன்று நாம் துவாரகை என்று அழைக்கும் நகரத்துக்கும் கிருஷ்ணர் ஆண்ட தூவாரகைக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்பது கூடுதல் செய்தி.
உலகப்போரில் தான் மனிதன் வான் வழி தாக்குதலில் ஈடுபட்டான். ஆனால், அதற்குப் பல கோடி வருடங்கள் முன்னரே, இது நடந்தது என்றால் அது ஏலியன் டெக்னாலஜி மூலமே சாத்தியமாகும் என்றும் சொல்கின்றனர்.

6 இஞ்ச் உயரத்தில் பூமிக்கு வந்த வேற்றுக்கிரகவாசி!...

Published:Monday, 04 May 2015, 09:52 GMTUnder:Invention
வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான கதைகள் இதுவரை நிரூபிக்கபடவில்லை என்றாலும், அவைகள் எப்போதும் ஆச்சர்யத்தையும், ஆர்வத்தையும் தூண்டும் விதமாகவே இருக்கின்றன.
வேற்றுக்கிரக வாசிகள் உண்மையில் இருந்தாலும், அவர்கள் பூமிக்கு வந்துள்ளார்களா என்ற கேள்விக்கும் இதுவரை உறுதியான பதில் இல்லை.
ஆனால் பல ஆண்டுகளாகவே ஏலியன் (Alien) என்றழைக்கப்படும் வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு பலவிதமான வாகனங்களில் வந்து செல்வதாக பல கதைகள் வெளிவந்தவாறு உள்ளது.
இந்நிலையில், இந்த கதைகளுக்கு வலு சேர்க்கும் சம்பவம் ஒன்றினை பற்றி விளக்கமாக பார்ப்போம்.
சிலியில் கடந்த 2003ம் ஆண்டு Oscar Munoz, என்பவர் Atacama Desert என்ற இடத்தில் ஒரு வினோத தோற்றத்தில் ஒரு எலும்பு கூடை கைப்பற்றியுள்ளார்.
ஒரு தடை செய்யப்பட்ட தேவாலயத்தின் அருகே ஒரு வெள்ளை துணியால் சுற்றப்பட்டு அந்த எலும்பு கூடு கிடைத்ததாக Munoz தெரிவித்துள்ளார்.
சுமார் 6 இஞ்ச் உயரம் மட்டுமே இருந்த அந்த எலும்புக் கூடு, சற்று பெரிய தலையுடன் மனித ரூபத்திலேயே இருந்தது தான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த எலும்புக் கூடு பற்றி பல கதைகள் வெளிவர தொடங்கியது.
அது ஒரு கலைக்கப்பட்ட கரு என்றும், ஒரு சிறிய குரங்கின் எலும்பு கூடு என்றும், அல்லது பூமிக்கு பாதை மாறி வந்த வேற்றுக்கிரகவாசி என்றும் கதைகள் கூறப்பட்டன.
Atacama humanoid என பெயரிடப்பட்டு அழைக்கப்பட்ட அந்த எலும்புக்கூடு பற்றி Stanford பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் முடிவில், வெறும் 15 சென்டிமீற்றர் மட்டுமே உயரத்தை கொண்ட அந்த எலும்பு கூடு, உடம்பை விட பெரிய தலையினை கொண்டு விளங்கியதாகவும், அதன் பற்கள் மிகவும் கூர்மையாக இருந்தது என்றும் கூறினர்.
மேலும் அதில் மனிதர்களை போல் அல்லாமல் 9 விலா எலும்புகள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். சுமார் 6 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அந்த எலும்பு கூடு பற்றிய உண்மை ரகசியமாகவே திகழ்ந்ததாக நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர்கள் எடுத்த Sirius என்ற ஆவண படத்தில், அனைத்தையும் முறையாக பதிவு செய்துள்ளனர்.
நிபுணர் ஒருவர் சோதனை முறைகளை பற்றி கூறுகையில், கடந்த 2012ம் ஆண்டு நாங்கள் அந்த எலும்பு கூட்டின் மாதிரிகளை கொண்டு வந்தோம்.
அதனை X Rays, CAT scans என சோதனைக்குட்படுத்திய போதும், அந்த எலும்பினை முறையாக பிரித்து பார்த்தபோது அவற்றில் எலும்பு மஜ்ஜை பொருட்கள் முறையாக அமைந்திருந்தது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
மற்றொரு ஆய்வின் முடிவில் அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகையில், இந்த எலும்புக்கூடு 'interesting mutation' எனப்படும் சுவாரஸ்யமான மரபணு திடீர் மாற்றத்தின் விளைவாக தோன்றியிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
மேலும், இது ஒரு ஆண் என்று கூறிய அவர்கள், இந்த உயிரினம் பிறந்து 6 முதல் 8 ஆண்டுகள் வரை வாழ்ந்திருக்கலாம் என்று கூறி ஆச்சர்யத்தை தூண்டினர்.
ஸ்டெம் செல் உயிரியல் இயக்குனர் Garry Nolan என்பவர் கூறுகையில், இது கண்டிப்பாக குரங்கு இல்லை. இது மனிதன் அல்லது மனிதனுக்கு தொடர்புடைய சிம்பன்ஸி வகை குரங்காக இருக்கலாம்.
அது 6 முதல் 8 வயது வரை வாழ்ந்துள்ளது. அது சுவாசித்துள்ளது, உணவருந்தியுள்ளது. இந்த வினோத உயிரினம் பிறக்கும் போது எந்த அளவில் இருந்திருக்கும் என்பது தான் தனக்கு பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆய்வு படத்தின் முடிவில், அந்த எலும்பு கூட்டில், மனிதனின் DNA உள்ளதாக தெரியவந்துள்ளதாக Garry Nolan தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sirius என்ற அந்த ஆய்வு படம், 2013ம் ஆண்டு புவி நாளான ஏப்ரல் 22ம் திகதி லாஸ் ஏஞ்சல்ஸில் திரையிடப்பட்டுள்ளது.

வேற்றுக் கிரகவாசிகள் (ஏலியன்கள்) பூமியை ஆக்கிரமிப்பார்களா? ஆய்வுக் கண்ணோட்டம்

E-mailPrintPDF
உயிரினங்கள் ஜீவிக்கும் அதிசய கோளாக நாம் வாழும் பூமி மாத்திரமே அண்டவெளியில் உள்ளது என இதுவரை நம்பியிருந்த எமக்கு அண்மையில் வெளியான கண்டுபிடிப்புகள் அதிர்ச்சியைத் தருகின்றது. அண்டவெளியில் லட்சக்கணக்கான நட்சத்திரங்களும், கோள்களும், துணைக்கோள்களும் இருந்போதிலும் மனித சக்திக்கு எட்டியவரையில் எந்தக் கோளிலும் இது வரை உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆனால், தற்போது வானவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகளால் புதிய புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டிருகிறது.  இதுவரை வானியல் ஆய்வாளர்களால் சுமார் 50 கிரகங்கள் வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவற்றில் கிட்டத்தட்ட 16 கிரகங்கள் பூமியினை ஒத்ததாகவும், அவைபூமியை விட அளவில் பெரியதாகவும் காணப்படுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். இவற்றில் ஒரு கிரகத்தில் வேற்றுக்கிரக வாசிகள் வசிப்பதாகவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
இக்கிரகங்கள் பூமியில் இருந்து 36 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாகவும் டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. விஞ்ஞானிகளின் இந்தக்கண்டுபிடிப்புக்கள் என்றோ ஒரு நாள் மனிதர்களை வேற்றுக்கிரகங்களுக்கு அழைத்து சென்று குடியமர்த்த முடியும் என நம்பப்படுகிறது
தற்போது முதல் முறையாக வேற்றுக் கிரகத்தில் உயிரினங்கள் வசிக்கும் சாத்தியம் இருப்பதற்கான சந்தேகம் அதிகரித்துள்ளது. எஸ்.ஈ.டி.ஐ. என்பது விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முறை. பிற கோள்களில் இருந்து வரும் கதிர்வீச்சு, மற்றும் இங்கிருந்து கதிர்களை அனுப்பி ஆராயும் முறையாகும்.
சமீபத்தில் இந்த முறையில் ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகளுக்கு, ஒரு புதுமையான தடயம் கிடைத்திருக்கிறது. அது வேற்றுக்கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான அறிகுறிகள் போல தோன்றுவதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
கலிபோர்னியாவின் மவுன்டைன் விவில் உள்ள எஸ்.ஈ.டி.ஐ. மைய ஆய்வாளர் டாகால்ஸ் வாகோச் கூறியதாவது:-
விண்மீன்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்தில் சமீபத்தில் ஒரு முக்கியமான நிகழ்வை கவனித்தோம். அது ஒரு ஒழுங்கற்ற நட்சத்திரக் கூட்டத்தால் கிடைத்த மாறுபட்ட தகவலாகவோ அல்லது தவறான அலை மாற்றத்தால் ஏற்பட்ட பதிவாகவோ இருக்கலாம். வேற்றுக்கிரக உயிரினங்களுக்கான சமிக்ஞையாகவும் இருக்க வாய்ப்புண்டு.
அது வேற்றுக்கிரக வாசிகளுக்கான அறிகுறியென்றால், அவர்களிடம் எவ்வாறு பேசுவது என்று ஆழமாக யோசித்து வருகிறோம். ஆகவே நாங்கள் வெற்றிட முறையில் தகவல்களை அனுப்பத் தொடங்கி இருக்கிறோம். அதை அங்குள்ள ஒவ்வொருவரும் கேட்கலாம். ஆனால் பதில் ஏதும் கிடைப்பதில்லை. பதில் வரும்வரை நாமாக ஒன்றை கற்பித்துக் கொள்வது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன் என்றார்.
ஸ்ரீலங்காவில் வேற்றுக் கிரக வாசிகளின் நடமாட்டம்?
பல வருடங்களுக்கு முன்பே வேற்றுக்கிரகவாசிகள் இலங்கைக்கு வந்து செல்வதற்கான ஆதாரங்கள் தனக்கு கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ள இங்கிலாந்து விமானப்படை அதிகாரியொருவர் அதற்கு ஆதாரமாக புகைப்படம் ஒன்றையும் காட்டி உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கையில் கடமையாற்றிய ஓய்வுபெற்ற இங்கிலாந்து விமானப்படை அதிகாரியொருவரே அவ்வாறு தெரிவித்துள்ளார். அதற்கு ஆதாரமாக 2004ம் ஆண்டில் அவர் இலங்கையில் எடுத்த புகைப்படமொன்றை சமர்ப்பித்துள்ளார்.
அவர் சமர்ப்பித்துள்ள புகைப்படத்தில் வட்டவடிவிலான பறக்கும் தட்டொன்று தென்படுவதுடன், இளஞ்சிவப்பு, வெள்ளை மற்றும் கிறீம் வர்ணங்களைக் கொண்டதாக அது தென்படுகின்றது. அதன் மேற்புறப்பரப்பு இளஞ்சிவப்பு வர்ணத்தில் பளபளத்ததாக பிரஸ்தாப அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
தனது சேவை முடிந்து இங்கிலாந்து திரும்பிய பின் தான் எடுத்திருந்த பறக்கும் தட்டின் புகைப்படத்தை தனது முன்னைய விமானப்படை அதிகாரிகளுக்கு அனுப்பியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு இங்கிலாந்தின் டெயிலி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்காவில் வேற்றுக் கிரக வாசிகளின் நடமாட்டம் காணப்பட்தாக இலங்கைப் பத்திரிகையும் செய்தி வெளியிட்டுள்ளது.  நாட்டின் பல பாகங்களிலும் இந்த அதிசமான நிகழ்வுகள் நடைபெற்றதாக பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
வேற்றுக் கிரகவாசிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக பல பாகங்களில் தகவல்கள் வெளியானதாகத் தெரிவிக்கப்படுகிறது. பறக்கும் தட்டுகளை சிலர் நேரடியாக பார்த்ததாக பத்திரிகைக்கு தகவல் அளித்துள்ளனர். பறக்கும் தட்டுகள் நாட்டின் பல பாகங்களிலும் தரையிறங்கியிருக்கலாம் என்று ஊடகம் வெளியிடப்பட்டுள்ளது.
பச்சை நிற உடலுடைய குள்ள மனிதர்கள் பறக்கும் தட்டிலிருந்து இறங்கியதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

2031 ஆம் ஆண்டளவில் மனித குலமானது வேற்றுக் கிரக வாசிகளை சந்திக்க முடியும் என ரஸ்ய விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் 
மனித குலமானது 2031 ஆம் ஆண்டளவில் வேற்றுக் கிரக வாசிகளை சந்திக்க முடியும் என ரஸ்ய விஞ்ஞானி ஒருவர் எதிர்வுகூறியுள்ளார். இதனை எதிர்வு கூறியுள்ளவர் ‘ரஸ்யன் எக்கடமி ஒப் சயன்ஸ் எப்ளையிட் அஸ்ட்ரோனோமி இன்ஸ்டிடூட்’ இன் இயக்குனர் பின்கில்ஸ்டீன் ஆவார். வேற்றுக் கிரக வாசிகள் தொடர்பில் ஆய்வினை மேற்கொள்ளும் சர்வதேச மன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“உயிர்களின் தோற்றமானது அணுக்கள் உருவாகுவதை போல தவிர்க்க முடியாதது. வேற்றுக்கிரகங்களிலும் உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றை நாம் 20 வருடங்களுக்குள் கண்டு பிடிப்போம்” என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதன் போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர் நட்சத்திர மண்டலத்தில் நாம் அறிந்த வகையில் சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் 10 % பூமியை ஒத்தவை. இவற்றில் நீரைக் கண்டுபிடிக்க முடிந்தால் ஏன் உயிர்களைக் கண்டு பிடிக்க முடியாதென கேள்வியும் எழுப்பியுள்ளார். வேற்றுக் கிரக வாசிகளும் உருவத்தில் மனிதர்களை ஒத்ததாக காணப்படலாம் எனவும், வேறு வகையான தோல் நிறத்தினை உடையவர்களாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன் எச்சரிக்கை
"வேற்றுக் கிரகவாசிகள் (ஏலியன்) பூமிக்கு வந்து மனிதர்களுடன் சண்டையிடுவது போல், ஹாலிவுட் திரைப்படங்களில் நாம் பார்ப்பது விரைவில் நிஜமாக வாய்ப்பு உண்டு,'' என, அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க விண்வெளி அமைதி நடவடிக்கைகள் கமிட்டி சார்பில் "ஏலியன்கள் பூமியை தாக்கினால் என்ன செய்வது' என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படி பூமிக்கு வரும் ஏலியன்கள் வன்முறை வெறியர்களாக இருப்பர் எனவும், இங்குள்ள இயற்கை வளங்களை சுயநலம் காரணமாக சுரண்டுவர் எனவும் அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

அறிவியல் முதல் மதம் வரையில் உள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்தி, பூமியை தாண்டியுள்ள கிரகங்களில் ஏலியன் போன்ற உயிரினங்கள் ஏதேனும் இருக்கிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்படி ஏலியன் அல்லது பிற உயிரினங்கள் இருந்தால், அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான சாத்தியக்கூறுகளையும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

அவ்வாறு ஏலியன்கள் பூமிக்கு வரும்போது, நாம் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் அவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பூமிக்கு வரும் ஏலியன்கள் வன்முறையில் ஈடுபட்டால், அவர்களை விண்வெளி அமைதி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, அமெரிக்கா சார்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பிரிவினர் சமாளிப்பர் எனவும்; உலக நாடுகள் அனைத்தும் இந்த விஷயத்தில் அரசியல் மற்றும் ஜாதி மதபேதம் ஏதும் இல்லாமல் ஒருங்கிணைந்து செயல்படுவதோடு, இதற்காக சர்வதேச கண்காணிப்புக் குழு ஒன்றையும் ஏற்படுத்த வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்க விஞ்ஞானிகளின் கருத்து, அறிவியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கேம்பிரிட்ஜ் பல்கலை விஞ்ஞானிகள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பரிணாமவியல் பேராசிரியர் சைமன் கான்வே மோரிஸ் கூறும்போது, "பூமியை தாண்டியுள்ள இந்த பிரபஞ்சத்தில் "ஏலியன்' என குறிப்பிட்ட யாரும் இருக்க வாய்ப்பில்லை.

மற்ற கிரகங்களில் உயிரினங்கள் இருந்தால், அது டார்வின் கொள்கை அடிப்படையில் தான் தோன்றி வளர்ச்சி பெற்றிருக்க முடியும். ஹாலிவுட் படங்களில் வருவது போல், விகாரமான தோற்றங்களில் இருக்க வாய்ப்பில்லை. மேலும், அவர்கள் வன்முறையில் ஈடுபட்டு, பூமியில் உள்ள வளங்களை ஒருபோதும் சுரண்டவும் வாய்ப்பில்லை. ஏலியன் குறித்த அச்சம் தேவையற்றது' என்றார்.


பூமியில் வாழும் வேற்றுக் கிரகவாசிகள்:- வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

 
வேற்றுக் கிரகவாசிகள் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறது.
வேற்றுக் கிரகவாசிகள் இருக்கிறார்களா? அல்லது இல்லையா? என்று உறுதியான தகவல்கள் ஏதும் இல்லை. ஆனால் வேற்று வாசிகள் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்று பதிலளித்துள்ளனர்.
வேற்றுக் கிரகவாசிகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் முன்னணி நிபுணர்கள் இது வேற்றுக் கிரகவாசிகளை தொடர்பு கொள்ள ஏற்ற நேரம் என தெரிவித்துள்ளனர்.
மேலும், பிரபஞ்சத்தில் புத்தி கூர்மை உள்ள வேற்று கிரகவாசிகளை கண்டறிய சீனா மிகபெரிய ரேடியோ தொலை நோக்கியை அமைக்க திட்டமிட்டுள்ளது.
தென் மேற்கு சீனாவின் குயிசு மாகாணத்தில் இந்த தொலை நோக்கியை அமைக்கிறது. உலகில் இது போன்ற தொலை நோக்கி புர்டோ ரிகோவில் அமைக்கபட்டு உள்ளது.
தாமஸ் ஹேர் என்ற விஞ்ஞானி கூறுகையில், ”வேற்று கிரக வாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு கூட்டமாக வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது.
அப்படி யாராவது எங்காவது இருந்தால் நம்மை கண்டுபிடிப்பது ஒன்றும் சிரமமான விடயம் கிடையாது.
அவர்கள் உணவு, தண்ணீர் என நம்மை போலவே இருப்பார்களா? என்பது சந்தேகம் தான். வேறு மாதிரியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
அவர்களது இடத்தில் இருந்து பயணிக்க தொடங்கியிருந்தால் 500 ஆண்டுகளிலேயே நம்மை அடைந்திருக்கலாம்” என கூறியுள்ளார்.
மேலும், இங்கிலாந்தை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், வேற்றுக் கிரகவாசிகள் இருக்கிறார்களா என்பதை ஆராய புதிய திட்டம் ஒன்றை லண்டனில் தொடங்கியுள்ளார்.
இந்த திட்டத்துக்காக அடுத்த 10 ஆண்டுகளூக்கு ரூ.640 கோடி செலவிடப்படும். ரஷ்யாவை சேர்ந்த சிலிகான் வேலி தொழிலதிபர் யூரி மில்னர் இந்த திட்டத்துக்கு நிதி உதவி அளிக்கிறார்.
இதற்கிடையில் பிலெய்டன் என அழைக்கப்படும் வேற்றுக் கிரகவாசிகள் வடமேற்கு அர்ஜென்டினாவில் இருந்து 70 மைல் தூரத்தில் இருக்கும் மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பறக்கும் தட்டுகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் யுஎப்ஓ சார்ந்த பத்திரிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.
பிலெய்டன் பேஸ் காச்சி, லா போமா, ரூட் 40 இடையே இருக்கலாம் என்றும், இதன் மற்ற பிரிவினர் பிரபஞ்சத்தின் மூலைகளில் இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
இது குறித்து யுஎப்ஓ ஆய்வாளர் ஸ்காட் வாரிங் கூறுகையில், பிலெய்டன்கள் நார்டிக் வேற்றுகிரகவாசிகள் என கூறப்படுவதாகவும், இவை பார்க்க மனிதர்களை போன்றிருக்கும் வேற்றுகிரகவாசிகள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வகை ஏலியன்கள் உலகம் மற்றும் நமது எதிர்காலத்தில் அதிக அக்கறை கொண்டிருப்பவை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்கான்டிநாவியன் மற்றும் கருப்பு தோல் கொண்ட பிலெய்டன்கள் உயரமாகவும், ஒல்லியாகவும், பார்க்க அழகாகவும் இருக்கலாம் என்று கூறும் யுஎப்ஓ நிபுணர்கள், அவை பால் வழியின் வெளியே இருக்கும் லைரா எனும் கிரகத்தில் இறங்கி வந்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment