Friday, August 21, 2015

ஐயப்பன்

ஐயப்பனின் பிறப்பு விசித்திரமானது. இரண்டு ஆண் கடவுளுக்கிடையில் நடந்த ஆணாதிக்க ஓரினச் சேர்க்கையில் பிறந்த ஐயப்பனே, ஐயப்பன் ஆனான். கடவுகளின் ஓரினச் சேர்க்கை கூத்தை இன்றைய ஓரினச் சேர்க்கiயாளர்கள் ஜனநாயகம் சார்ந்த பெண்ணியக் கூறாக கொண்டாடலாம். ஆனால் அந்த ஆணாதிக்க வரலாற்றைப் பார்ப்போம்.
பத்மாசூரன் என்பவன் சிவனை நோக்கி கடும் தவமிருந்தால், சிவன் அவன் முன் தோன்றி என்ன வேண்டும் எனக் கேட்டாராம். அவன், யார் தலையிலும் நான் கைவைத்தால், அவர்கள் எரிந்து சம்பல் ஆகவேண்டும் என வேண்டினானராம். சிவன் ஆகட்டும் என்று வரத்தை வழங்கினாராம். உடனே வரம் பலிக்கின்றதா என்று சிவனின் தலையில் கைவைக்க போவதாக கூற, சிவன் ஒடத் தொடங்கினாராம். இதை தொடர்ந்து சிவன் அழிந்து விடுவாரா என்ற நிலையில், மைத்துனர் மகாவிஷ்ணு அழகிய பெண் மோகினி வடிவம் எடுத்து அவன் முன்தோன்றினாராம். மோகினியைக் கண்ட பத்மாசூரன் அவளை மோகித்து புணரத் துடித்தானாம். அதற்கு மகாவிஷ்ணு நீ சுத்தமாக இல்லை, குளித்துவிட்டு வா என்று கூற, அவன் குளிக்க தண்ணீர் தேடி அலைந்து தண்ணீர் அற்ற நிலையில், என்ன செய்ய என்று கேட்ட போது, சிறு குழியொன்றில் தண்ணீர் உள்ளது, அதை உன் தலையில் வைத்துவிட்டு வா என்று கூறினாராம். அவன் அப்படி செய்ய அவன் எரிந்து போனான்.
மகிழ்ச்சியடைந்த மோகினி அப்படியே சிவனிடம் செல்ல, ஆணாதிக்க சிவனுக்கு அவள் மேல் ஆசைப்பட்டு புணர துடித்தாராம். உடனே மகாவிஷ்ணு மோகினி வேஷத்தில் ஒடத் தொடங்க, சிவன் துரத்திச் சென்று விஷ்ணுவின் கையைப் பிடித்தாராம். விளைவு கையில் குழந்தை ஒன்று உருவானதாம். அதாவது வழக்கமான ஆணாதிக்க மொழியில் கையில் போட்டதால் கையப்பன் பிறந்து, அதுவே பின்னால் ஜயப்பன் ஆனான்.
இதையே வேறுவிதமாக கூறும் இந்துக் கதைகளில், ஹரியும் ஹரனும் ஓரினச் சேர்க்கையால் உருவான கடவுள்தான் ஐயப்பன். இது கேரளத்தில் நடந்த அருவருப்பான அற்புதம்.
ஆணாதிக்க வக்கிரத்தில் உருவான ஒரினப்புணர்ச்சியை அடிப்படையாக கொண்டு உருவான இந்துக் கதைகளும், கடவுள்களையும் சுய அறிவற்ற மனிதர்கள் போற்றி வழிபாடலாம். ஆனால் இந்த ஆணாதிக்க வக்கிரமான ஓரினச்சேர்க்கையின் பண்பாடுகள் ஈவிரக்கமற்ற வகையில் தோல்லுரித்து போராடவேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.
இங்கு சிவனின் ஆணாதிக்க வெறி கேள்விக்கு இடமின்றி இந்த வழிபாடு அங்கீகரிக்கின்றது. ஒருபெண்ணை புணர்வதற்கு பெண்ணின் அனுமதி அவசியமில்லை, ஆணாக இருந்தால் அதுவே அங்கீகாரமாகிவிடும் என்றளவுக்கு, இந்த வழிபாட்டுக் கோட்பாடு நிஜவிளக்கத்தை கொடுக்கின்றது. அத்துடன் அழகான பெண் தனது பாலியல் வடிவத்தைக் கொண்டு, எதையும் சாதிக்க முடியும் என்ற விபச்சாரப் பண்பாடு, ஆணாதிக்க பெண்ணியல் கண்ணோட்டத்தில் நியாயப்படுத்தப்படுகின்றது. இதை நாம் சகித்துக் கொண்டு வாழமுடியுமா?
இந்து மதமும் ஆண் பெண் உறவும்
இணையத்தில் படித்த நீண்ட கட்டுரை ஒன்றைப் பகுதி பகுதியாக கிழே தருகின்றேன். இந்து மதத்தில் உள்ள வக்கரித்த உறவுகளைப் பற்றி அறிய இது உதவும்.
கிருபன்
UK Internet.

No comments:

Post a Comment