Friday, August 21, 2015

பிள்ளையார்

பிள்ளையார்
1.சிவமகாபுராணத்தில் பார்வதியார் குளிக்க போன போது உள்ளே யாரும் வராது இருக்க, தனது உடலில் இருந்த ஊத்தையை விறாண்டி அதற்கு உயிர் கொடுத்து, அந்த பிள்ளையாரை காவல் வைத்துவிட்டு சென்றார். சிவபெருமான் வந்து உள்ளே போக முற்பட்ட போது மோதல் சிவபெருமானுக்கும், பிள்ளையாருக்கும் ஏற்பட, அதில் பிள்ளையாரின் தலை வெட்டப்படுகின்றது. உமாதேவியார் தனது குழந்தையை வெட்டியதைக் கண்டு புலம்ப, சிவபெருமான் யானைத் தலையை வெட்டி பொருத்தியதாக பிள்ளையார் வரலாறு கூறுகின்றது. இங்கு இறைவியான உமாதேவியாரின் குளிக்கும் அறைக்குள் போகும் அளவுக்கு துணிவுள்ளவர்கள் யார்? இவை ஆணாதிக்க ஆண் கடவுள்கள் என்பதும் தெளிவாகின்றது. எனவே கடவுள்கள் ஆணாதிக்கம் கொண்டவை என்பதும், பெண் தெய்வங்கள் பாதுகாப்பற்ற எல்லையில் வாழ்ந்ததைக் காட்டுகின்றது. பெண்கள் தமது கற்புரிமையை பாதுகாக்க ஆண்கடவுள்களுடன் போராடவேண்டியிருந்ததை அம்பலப்படுத்துவதுடன், கடவுளின் பொய்மை, நீதி அம்பலமாகின்றது. இந்த ஆணாதிக்க ஆண் தெய்வங்களிடம் தமது பாதுகாப்பை வேண்டி வழிபடும் பெண்கள் எப்படி பாதுகாப்பை பெறமுடியும். ஏனெனின் அந்த தெய்வங்களே பல வக்கிரத்தில் பிறந்ததுடன் கற்பழிப்புகள் கூடிய வன்முறைகளில் ஈடுபட்டவர்கள். பெண்கள் தமது உடுப்பை மாற்றும் அறையில் வைத்திருக்கும் ஆண் தெய்வங்கள் சரி, தூண்துரும்பில் இருக்கும் தெய்வங்கள் சரி பெண்களின் நிர்வாணத்தை, ஆணாதிக்க இரசனையில் ரசிக்கின்றனவா அல்லவா. இதைத்தான் பிள்ளையார் கதை தெளிவாக்கின்றது. கடவுள்கள் கற்பழிப்பு முதல் அவற்றின் வக்கிரங்கள் எல்லையற்றவை. அவைகள் பல இக்கட்டுரையில் தொடர்ந்து பார்ப்போம்.
2.ஒரு நாள் ஆண் யானையும் பெண் யானையும் புணர்வதைக் கண்ட சிவனும் பார்வதியும், அதன் நினைவில் அவர்கள் புணர்ந்ததால் யானை முகத்துடன் பிள்ளையார் பிறந்தாராம். இதுபோல் மற்றொரு கதையில் சுவரில் ஆண் பெண் யானை புணர்வதை போன்று கீறியிருந்த காட்சியைக் கண்டு, அதுபோல் புணர்ந்ததால் பிள்ளையார் பிறந்தாராம். அருவருக்கத்தக்க புணர்ச்சி வக்கிரத்தில் தெய்வங்கள் திரிந்தன என்பதை கூறும் போது, இந்த மாதிரி கற்பனைகளை உருவாக்கிய நபர்களின் பிம்பம் பிரதிபலிக்கின்றது. மிருகங்களின் புணர்ச்சிகளை ரசிக்கும் மனித பண்புகள் மிருகத்தைவிட இழிவானவை. இதில் இருந்துதான் வக்கிரமான நீலப்படங்கள் (புளுபிலிம்) மனிதப் புணர்ச்சியையும் மிருகத்துடன் மனிதன் கலந்த புணர்ச்சியையும் சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் ஜனநாயக சந்தையில் மூலதனமாக்கி கொடிகட்டி நிற்கின்றது.
3.பார்வதி கருவுற்று இருக்கையில் சித்துரா அசுரன் (இந்தியாவின் ஆதி மக்களைக் குறிக்கும் சொல்) ஒருவன் காற்றுவடிவில் கர்ப்பபைக்குள்; சென்று, பிள்ளையார் தலையை வெட்டி விட்டுவந்த நிலையில், பார்வதி யானைத் தலை கொண்ட கஜாசுரன் தலையை வெட்டி ஒட்டவைத்ததாக பிள்ளையார் வரலாறு. முட்டாள்களே நம்புங்கள்! இந்து புளுகு மூட்டை. இறைவன் வாழும் உலகில் அசுரர்கள் எப்படி வாழ முடியும்? இது எப்படி மனிதனுக்கு தெரிந்தது?
4.தக்கனுடைய யாகத்தை அழிக்க சிவன் தனது மூத்த மகனை அனுப்பியதாகவும், அங்கு தக்கன் பிள்ளையாரின் தலையை வெட்டி எறிந்த நிலையில், முருகன் சென்று பார்த்தபோது தலையைக் காணாததால், யானைத் தலை ஒன்றை வெட்டி பொருத்தியதாக பிள்ளையாரின் யானை முகம் பிறந்த கதை. பிறப்புகள் வக்கிரம்பிடித்து கிடப்பதைக் காட்டுகின்றது. யாரும் யாகம் செய்தால் அதை அழிப்பது அதர்மம் அல்லவா! என்ன சிவனுக்கு மட்டுமா யாகம் செய்யும் உரிமை உண்டு. இந்த உரிமையின் பிறப்பு எதன் அடிப்படையிலானது. யார் இந்த உரிமையை கொடுத்தது. எங்கு எப்போது இந்த பிறப்புகள் எல்லாம் நடந்தன.
5."பிடியதன் உருவுமை கொள மிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே"128
என்ற திருஞானசம்பந்தர் தேவாரம் பிள்ளையார் பிறப்பை சிவன் ஆண் யானையாகவும், உமாதேவியார் பெண் யானையாகவும் மாறி புணர்ந்து உருவானவரே பிள்ளையார் என்று தேவாரம் மூலம் விளக்குகின்றார். இதையே சுப்ரபேத ஆகமம் என்ற நூலும் கூறுகின்றது. இந்த திருஞானசம்பந்தப் பயல் உமாதேவியாரின் பெண் உறுப்புகளை தனது தேவாரத்தில் பாடிய விதங்கள் பல வக்கிரத்தை கொண்டவை. இதனால்தான் அந்த மூன்று வயது குழந்தைக்கு மார்பில் அல்லாது கிண்ணத்தில் பால் கொடுத்தாரோ. இந்த திருஞானசம்பந்தன் சமணப் பெண்களை கற்பழிக்க அருள் கோரி "பெண்ணகத்து எழில்சாக்கியப் பேய் அமன் தென்ணற் கற்பழிக்கத் திருவுள்;ளமே" என்று ஆணாதிக்க இறைவனை வேண்டிப பாடியவர் அல்லவா. இவர்தான் தனது சொந்த ஆணாதிக்க வக்கிரத்தை மிருக நிலையில் புணர்ந்து வெளிப்படுத்துகின்றார். மனிதப் புணர்ச்சியைவிட மிருகப்புணர்ச்சி தாழ் நிலை விலங்குக்குரிய தாழ்ந்த நிலையல்லவா. இதை இறைவன் செய்தான் என்பதும், அதை கற்பனை பண்ணி பாடுவதும் கேவலம்கெட்ட இழிந்த பண்பாடாகும்;. இந்த தேவாரத்தைச் சொல்லி நாம் பாடுவதும் எமது முட்டாள்தனத்துடன் கூடிய அறிவின்மையில்தான்.
6.பார்வதி தன் உடல் அழுக்கை கழுவி அதை கங்கா நதியின் முகத்துவாரத்தில் உள்ள ராட்சஷிமாலினியைக் குடிக்க வைத்ததாகவும், இதன் காரணமாக மாலினி கர்ப்பம் அடைந்து பிறந்த குழந்தையே பிள்ளையார் என்ற கதை. எவ்வளவு அருவருப்பை தரும் பிறப்புகள். இந்த மாதிரி உருவாக்கிய பிறப்புகள் எல்லாம் ஒரினச்சேர்க்கையில், அதாவது ஒரு பால் உறவில் பிறந்ததாக அல்லவா இருக்கின்றது. ஒரினச் சேர்க்கையாளர்கள் இறைவனில் இருந்தும், இயற்கைக்கு புறம்பான தமது வக்கிரத்தை நியாயப்படுத்தலாம். ஆனால் இந்த பிறப்புகளின் வக்கிரம் எல்லையற்ற இழிவுகளாக இருப்பது சகிக்கமுடியாதவை.
7.ஒருநாள் பார்வதி தனது உடல் ஊத்தையை விராண்டி உருட்டி விளையாடியதாகவும், அப்போது அன்பு சொரிந்து உயிருட்டியதாகவும் (சிறுபிள்ளைகள் போல்) அதுவே பிள்ளையாராம்;. எப்படி சிவபெருமான் அந்த உத்தைக்கு தந்தையாக முடியும்;. ஒருபால் உறவில் குழந்தை பிறக்க அதிசயம் உலகின் அதிசயங்களாக பதியாத குற்றத்தை இந்து ஆட்சி நிறைவு செய்யுமோ! மூக்கை தோண்டி ரசித்து உண்ணும் பண்பு போல் அல்லவா இந்த பிறப்புகள் அசிங்கம் நிறைந்து கிடக்கின்றது.
8.பிரம்மாவை வர்த்த புராணத்தில் கணபதி பிறப்பைப் பற்றி, சனிப்பார்வை தோஷத்தால் தலை இல்லாது பிறந்தால், துயரமுற்ற உமாதேவியாரின் துன்பத்தை துடைக்க விஷ்ணு யானைத்தலையை வெட்டி ஒட்டினாராம்;. இது போல் மற்றொரு கதையில் உமாதேவியாருக்கு குழந்தை பிறந்ததை அறிந்து, அவரை பார்க்க எல்லாத் தேவரும் வந்தனராம். அதில் சனிதேவனும் ஒருவராம்;. சனி தான் பாத்தால் குழந்தைக்கு தீது உண்டாகும் என்று எண்ணி பார்க்காது தவிர்தத்தாகவும், உமாதேவியார் அதை அவமதித்ததாக எண்ண, அதைத் தவிர்க்க குழந்தையைப் பார்க்க குழந்தையின் தலை எரிந்து போனதாம். இதனால் உமாதேவியார் சினம் கொள்ள, கான்முகள் போன்ற தேவர்கள் சமாதானப்படுத்தி சிவன் துணையுடன் யானை முகத்தை பொருத்தியதால் பிள்ளையாரானார். எப்படியிருக்கு இந்த பிறப்பின் பல்வேறு கற்பனை பிதற்றல்கள்.
இந்த பிள்ளையார் இன்று மதத்தின் ஆதிக்க சின்னமாகியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்யும் பலவிதமான கொண்டட்டங்களை தோற்றுவித்துள்ளது. இந்த கொண்டாட்டம் ஆணாதிக்க வெறியர்களின் காமப்பசியை தீர்க்கும் கற்பழிப்புகளை செய்யும் ஊடாகமாகியுள்ளது. பிள்ளையாரின் பெயரில் செய்யும் சதுர்த்தி இன்று மதக்கலவரத்தின் ஊடகமாக மாறியுள்ளது. சதுர்த்தி நான்காவது திதி (நாலாம் சடங்கு) என்ற மணமகனும் மணமகளும் திருமணத்தின் பின் உடலுறவைக் குறித்து கூடும் நாளைக் குறித்து உருவானது. ஆனால் அன்று, மதத்தின் பெயரில் நடக்கும் கலவரத்தில் நிகழும் கற்பழிப்புகள் பிள்ளையாரின் பிறப்பை போல் வக்கரித்த நிகழ்கின்றது.
இந்தியாவில் சிதம்பரம் கோயிலிலும், தேர் சிற்பங்களிலும் பிள்ளையார் தனது தும்பிக்கையை ஒரு பெண்ணின் பெண் உறுப்பினுள் விட்டு தூக்கி வைத்திருப்பது போன்ற காட்சிகளின் பின் எழும் ஆணாதிக்க வக்கிரம், மனித பண்பாட்டையே வக்கரித்து கேலிசெய்கின்றது. இதற்கு ஒரு கதையாக அசுர ஸ்திரி அசுரர்களை அழிக்க அழிக்க தொடர்ந்து உற்பத்தி செய்ததால், அதைத் தடுக்க தும்பிக்கையை விட்டு உறுஞ்சி எடுத்ததாக பார்ப்பனிய வக்கிரம் கூறுகின்றது. இந்தியாவின் பழங்குடி மக்களை வந்தேறு குடிகளான பார்ப்பனர்கள் அழித்த போது, நடந்த ஈவிரக்கமற்ற கொலைகளை நியாயப்படுத்தவதே இந்தக் கதை. இன்று உலகில் வெள்ளையின மக்களின் எண்ணிக்கை குறைந்து செல்லும் எல்லையில், வறுமையைக் காரணம் காட்டி திட்டமிட்டு கருத்தடை, கருஅழிப்பு செய்வது எல்லாம் இந்தக் கோட்பாட்டில்தான்;. பெண்ணின் பெண் உறுப்புக்குள் புகுவதே ஆணாதிக்கத்தின் ஓரே நோக்கம் என்பதை, இந்த சிற்பங்கள் தனது சொந்த வக்கிரத்தினூடாக நிர்வாணப்படுத்துகின்றது.

No comments:

Post a Comment