உலகம் 'இப்படித்தான்' அழியுமாம்... விஞ்ஞானிகளின் ஷாக்கான விளக்கம்..!
Published:Thursday, 20 August 2015, 16:58 GMTUnder:General
ஆம். நீங்கள் உச்சரித்தது சரி தான், உலகம் அழியப்போகிறது..! உலகத்திற்கு 'குட்பை' சொல்லும் நேரம் நெருங்கி விட்டது, என்றுதான் கூற வேண்டும் என்கிறது சமீபத்தில் நடத்தப்பட்ட வானவியல் சார்ந்த ஆய்வு ஒன்று, அது மட்டுமின்றி அதற்கான காரணங்களையும் வழங்கியுள்ளது.
அதுவும் நாம் நினைப்பது போல அல்லது திரைப்படங்களில் பார்ப்பது போல, உலகத்தின் அழிவு 10 நிமிடங்களில் நடந்து விடாதாம், மெல்ல மெல்ல மரணிக்கப் போகிறதாம் உலகம்..!
ஏற்படக்கூடிய ஒன்று:
உலகத்தின் அழிவு என்பதை பல வானவியல் மற்றும் அண்டவியல் விஞ்ஞானிகள், "ஏற்படக்கூடிய ஒன்று" என்று பல ஆண்டுகளாக நம்பிக்கொண்டு தான் இருக்கின்றனர்.
ஆய்வு:
அதை நிரூபிக்கும் வகையில், இதற்கு முன் சம்பவிக்காத, அதாவது நடக்காத விடயங்கள்/ துல்லியங்களை ஆதாரமாய் கொண்டே, இந்த ஆய்வு உலகத்தின் அழிவு பற்றி தெரிவித்துள்ளது..!
100 விஞ்ஞானிகள்:
உலகத்தின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 100 விஞ்ஞானிகளை கொண்ட குழு ஒன்று இந்த ஆய்வை நடத்தியுள்ளது..!
சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள்:
இந்த ஆய்வில் மிக துல்லியமான தகவல்களை பெற உலகின் மிக சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள் பயன்ப்படுத்தபட்டதாம்..!
பிரம்மாண்டம்:
அதாவது உலகம் முழுக்க மிக பிரம்மாண்டமான 7 தொலை நோக்கிகளை பயன்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டதாம்..!
தொலைநோக்கிகள்:
அந்த தொலைநோக்கிகள் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சிலி மற்றும் உலகத்தின் வட்ட பாதை ஆகியவைகளுக்கு இடையே நிறுவப்பட்டுள்ளதாம்.!
தகவல்கள்:
அதாவது 2 லட்சத்திற்க்கும் மேலான பால்வெளி மண்டலங்களில் இருந்து தகவல்கள் பெறப்பட்டதாம்..!
வலிமை இழக்கும் பிரபஞ்சம்:
அந்த கூர்மையான ஆய்வில் இருந்து பிரபஞ்சம் ஆனது, 2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உற்பத்தி செய்த கதிர் ஒளி சக்தியை விட குறைவாகத்தான் உற்பத்தி செய்கிறதாம்..!
குறைவு:
அதாவது கதிர் ஒளி சக்தியானது 50% வரை குறைந்துள்ளதாம்..!
அழிந்து விடும்:
உலகத்தின் அழிவு என்றால் உலகம் ஒட்டுமொத்தமாக அப்படியே அழிந்து விடும் என்று அர்த்தமில்லையாம்.
ஒளி சக்தி:
அதாவது நட்சத்திரங்கள் மற்றும் ஒளி தரக்கூடிய இதர கிரகங்களின் ஒளி சக்தி குறையும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்..!
உலகம் தனித்து விடப்படும்:
தற்போது கிடைக்கப்பெறும் எல்லா ஒளியும் இல்லாத நிலையில், உலகம் மிகவும் குளுமையாகவும், இருள் சூழ்ந்தும், தனித்து விடப்பட்டது போன்று இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்..!
விஞ்ஞானிகள் விளக்கம்:
"உடனே உலகத்தின் அழிவிற்கு தயாராகி விடாதீர்கள் இது நடக்க ஒரு லட்சம் கோடி ஆண்டுகள் ஆகும், அதாவது ட்ரில்லியன் ஆண்டுகள் ஆகும்" என்றும் விளக்கம் அளித்துள்ளனர் விஞ்ஞானிகள்..!
No comments:
Post a Comment