தேவனுடைய பிள்ளையாக மாறுவதற்கு என்ன செய்யவேண்டும்?
1. நான் ஒரு பாவி என்று முதலில் ஒத்துகொள்ள வேண்டும்
பாவஞ்செய்யாத மனுஷன் இல்லையே;
எல்லாரும் பாவஞ்செய்து,
தேவமகிமையற்றவர்களாகிAs;shh;fs;
(Eccl 7:20
ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை.
(1John 1:8
நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.
2. தேவனுடைய குமாரனான, பாவமற்ற கிறிஸ்து என் பாவத்தைப் போக்கவும் எனக்கு நித்திய வாழ்வு தருவதற்கும் இந்த உலகத்திற்கு வந்து, தன் உயிரை எனக்காகத் தந்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்றும் நம்ப வேண்டும்
·
(Rom 10:9
·
என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
·
(Rom 10:10
·
நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.
3.
நம் பாவங்களை அறிக்கையிட்டு பரிசுத்தரான இயேசு கிறிஸ்துவை நம் வாழ்கையின் நாயகராக ஏற்றுக் கொள்ளவேண்டும்.
·
(1John 1:9
·
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
4. தேவனுடன் உறவாடி. அவருடைய சித்தத்தை அறிந்து வாழவும், அவருக்குள் வளரவும் அவர் நமக்குத் தந்த வேதத்தை தினமும் தியானித்தும், அவரிடம் நம் தொடர்பு கொள்ள ஜெபம் செய்தும் நாம் வாழவேண்டும்.
o (Rev 3:20
o
இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
o
(1Pet 2:3
o நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.
o (Matt 21:22 [Tamil])
o மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.
5.
உலக பாவ வாழ்கையிலிருந்து விலகி இதே விசுவாசத்தைப் பின்பற்றும் மக்களோடு இணைந்திருக்க வேண்டும்.
o (Acts 2:40 [Tamil])
o இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான்.
wonderful
ReplyDelete