Wednesday, October 29, 2014

ஒர் பள்ளியின் ஆசிரியர் தனது மாணவர்களுக்கு ஒரு முக்கியமான பாடம் கற்றுத்தர விரும்பினார். அவர் அனைத்து மாணவர்களையும் ஒரு பிளாஸ்டிக் பையை வாங்கச்சொன்னார்.
அந்த மாணவர்களிடம்... உங்களுக்கு எத்தனை மாணவர்களின் மீது வெறுப்பு உள்ளதோ அத்தனை உருளைக் கிழங்குகளை போடச் சொன்னார்.
மாணவர்களும் அப்படியே செய்தனர். சில மாணவர்கள்
இரண்டு உருளைக்கிழங்குகளும் ஒரு சிலர் 3 முதல் 5 உருளைக் கிழங்குகளைப் போட்டனர்.
அந்த உருளைக்கிழங்கு பையை நீங்கள் எங்கு சென்றாலும் ஒரு வாரம் உங்களிடமே வைத்துக்கொள்ள வேண்டும் என்றார், மாணவர்களும் அப்படியே உற்சாகமாக செய்ய
ஆரம்பித்தனர். முதல் இரண்டு நாட்கள் ஆர்வமாகச் செய்ய ஆரம்பித்த மாணவர்கள், பிறகு அவர்களுக்கு அதை எடுத்துச் செல்வது சிரமமாக எண்ணினர். மேலும் உருளைக்கிழங்கு அழுக ஆரம்பித்ததால் துர்நாற்றமும்
ஏற்ப்பட்டது. எப்படியோ ஒருவாரம் உருளைக் கிழங்குகளுடன் கழித்து விட்டனர்.
ஆசிரியர் அனைத்து மாணவர்களிடத்தும் கருத்தைக் கேட்டார். அனைவர்களும் ஒரே பதில் தான், நாங்கள் இதனால் சிரமத்துக்குள்ளா னோம் இதனுடைய துர்நாற்றமும், சுமந்துகொண்டு செல்வதும் மிகவும் சிரமமாக இருந்தது ஐயா என்று தெரிவித்தனர்.
அதற்கு ஆசிரியர் இப்படித்தான் நாம் பிறர் மீது வைத்திருக்கும் வெறுப்பும் நம் மனபாரத்தை அதிகரிக்கும், நம் மனதை கெடுத்துவிடும் (துர்நாற்றம்)
இது நம்மை நாமே கெடுத்துக் கொள்ளும் ஒரு செயல். எனவே இந்தப் பையைத் தூக்கிக் குப்பையில் வீசி எறிவது போல் பிறர் மிது வைத்திருக்கும் வெறுப்பை மனதிலிருந்து தூக்கி எறிவோம். மனதைச் சந்தோசமாக வைத்து அனைத்து செயல்களிலும் வெற்றியும் காணுவோம் என்றார் அசிரியர்.
(Eph 4:31 [Tamil])
சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. Bible.

No comments:

Post a Comment