நேபாள நிலநடுக்கம்… மனதை பதறச் செய்யும் சோகக் காட்சிகள்!
நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்… மனதை பதறச் செய்யும் சோகக் காட்சிகள்!
நேபாளத்தில் இன்று ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் காரணமாக 400 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலைநகர் காட்மாண்டுவில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள லாம்ஜங் என்ற இடத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவானது. இதன் பாதிப்பு இந்தியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டன.
நேபாளத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்காரா டவர் உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்கள், வீடுகள் இடிந்து தரை மட்டமாகின. பல வீடுகளின் சுவர்கள் விரிசல் அடைந்து இடியும் நிலையில் உள்ளன. மேலும் தர்காரா டவர் இடிபாடுகளில் பலர் சிக்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

No comments:
Post a Comment