வவுனியாவில் இடி விழுந்ததில் முற்றாக எரிந்த வீடு
வவுனியா, பொன்னாவரசன்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இடி விழுந்து வீடும் உடமைகளும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, பொன்னாவரசன்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணியளவில் இடி விழுந்துள்ளது.
குறித்த வீட்டில் பேர்த்தியாரும் சிறுவன் ஒருவனும் வசித்து வந்திருந்தனர். சம்பவ தினத்தன்று பேர்த்தியார் வேறு வீடொன்றில் சமையல் வேலைக்கு சென்றிருந்ததால் சிறுவனும் அருகில் உள்ள உறவினர் வீட்டிலேயே தங்கியிருந்தான்.
இதனால் வீடும் உடமைகளும் நாசமாகிய போதும் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை. அயலவர்கள் வீட்டுத் தீயை அணைக்க முற்பட்ட போதும் மின்சார ஒழுக்கு காரணமாக அதனை அணைக்க முடியவில்லை என தெரிவித்தனர்.
No comments:
Post a Comment