Thursday, November 20, 2014

4 கால் 4 கையுடன் பிறந்த அதிசய குழந்தை.... பிரம்மனின் மறுபிறவியாக வழிபடும் மக்கள்!...

Published:Thursday, 20 November 2014, 11:58 GMTUnder:General
இந்தியாவில்மேற்குவங்க மாநிலத்தில் குழந்தை ஒன்று நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் பிறந்துள்ளது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தின் பரிபுர் என்ற கிராமத்தி சேர்ந்த தம்பதியினர் ஒருவருக்கு, நான்கு கால்கள் மற்றும் நான்கு கைகளுடன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
ஆனால், பெற்றோர் இக்குழந்தையை பிரம்மனின் மறுபிறவி என்று கூறிக்கொள்கின்றனர். மேலும், அந்த கிராமத்தில் வசிக்கும் மக்களும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த மக்களும், இது பிரம்மனின் மறுபிறவி என்று சூடம் ஏற்றி இக்குழந்தையை வழிபடுகின்றனர்.
ஆனால், இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், தாயின் வயிற்றில் இரட்டை குழந்தை உருவாகியதில் ஒரு குழந்தை இறந்துவிட்டதால், பிறந்த குழந்தைக்கு நான்கு கால்கள் மற்றும் கைகள் உள்ளன என்று கூறியுள்ளனர்.
மேலும், இக்குழந்தை நீண்ட நாள் வாழாது என்று கூறியுள்ளனர். தற்போது இந்த செய்தி காட்டுத் தீ போல் அப்பகுதிகளில் பரவி வருகிறது.

No comments:

Post a Comment