January 14th, 2015 அன்று பிரசுரிக்கப்பட்டது.
மத்திய சீனாவின் ஹெனான் மாகாணம் சாங்குயி நகரை சேர்ந்தவர் பேன் லுங் (வயது 32) இவருடைய மனைவி பெங் (வயது 30). இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். பேன் லுங் தனது மனைவியின் மொபைல் போனை பயன்படுத்தி தன்னுடைய காதலி ஜாங் ஹங், (வயது 21) என்பவருக்கு காதல் மெயில் அனுப்பி உள்ளார். பின்னர் தனது கணக்கை மூட மறந்து விட்டார்.
பெங் மொபைல் போனை பார்க்கும் போது தனது கணவர் காதலி ஒருவருக்கு மெயில் அனுப்பி இருப்பதை கண்டு கோபம் அடைந்தார்.
கோபத்துடன் படுக்கையறைக்குள் நுழைந்த மனைவி கணவருடன் சண்டையிட்டார் பின்னர் ஆவேசத்தில் கத்திரிகோலால் கணவரின் மர்ம உறுப்பை வெட்டினார்.
இதில் காயம் அடைந்த பேன் லுங் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் மருத்துவமனையில் பேன் லுங் ஓய்வு எடுத்து கொண்டு இருந்தார்.
மனைவி பெங்குக்கு ஆத்திரம் அடங்கவில்லை மருத்துவமனைக்கு வந்த பெங் கணவருடன் மீண்டும் சண்டையிட்டார். இருவருக்கும் மருத்துவமனைக்கு வெளியே நீண்ட நேரம் சண்டை நடந்து உள்ளது.
சிகிச்சை அளித்து கொண்டு இருந்ததால் லுங் தன் நிர்வாண நிலையிலேயே மனைவியை அடித்து உதைத்து உள்ளார்.. இதனால் பெங் காயம் அடைந்தார் உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் அவரை வேறு ஒரு அறைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில் காயம் அடைந்த கணவர் பென் லுங்குவை பார்க்க அவரது காதலி ஜாங்ட் ஹங் வந்து உள்ளார்.
இதை கண்ட மனைவி பெங்குக்கு மேலும் ஆத்திரம் ஏற்பட்டது. கணவரின் அறைக்குள் புகுந்த அவர் கத்தியால் கணவனின் மர்ம உறுப்பை வெட்டி ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறிந்தார்.இதனால் மிகுந்த ரத்த போக்கு ஏற்பட்ட கணவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து மருத்துவமனை செய்தி தொடர்பாளர் கூறும் போது,
மருத்துவமனைக்கு வெளியே ஒரு நிர்வாண மனிதன் ஒரு பெண்ணை தாக்கி கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவமனையின் ஊழியர்கள் தலையிட்டு அந்த பெண்ணை மற்றொரு அறையில் சிகிச்சை அளித்தனர் அப்போது. இந்த சமபவம் நிகழ்ந்து உள்ளது. தற்போது அந்த ம்னிதன் நல்ல நிலையில் உள்ளார் ஆனால் மிகவும் கலக்கமடைந்து உள்ளார்.
ஜன்னலுக்கு வெளியே எறியப்பட்ட அவரது உறுப்பு கிடைக்கவில்லை அதை நாயோ பூனையோ தின்று இருக்கலாம் அந்த மனிதனின் காதலி வந்தார் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து உள்ளனர்என்று கூறினார்.
இது குறித்து பெங் கூறியதாவது,
அவர்கள் திருமணம் செய்து கொள்வது பெரிய விஷயமில்லை. அவர் ஆண்மையை இழந்து விட்டார் ஏற்கனவே அவருக்கு 5 குழந்தைகள் உள்ளது. என்று கூறினார்.
லுங் மனைவி கொடூர தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டி போலீசார் கைது செய்து உள்ளனர்.
No comments:
Post a Comment