Saturday, December 13, 2014

இன்று ஒரு தகவல்! ஆப்பிள் பழம் மேல் ஒட்டி இருக்கும் Sticker எதற்காக?

December 12th, 2014 அன்று பிரசுரிக்கப்பட்டது.

பழக்கடைக்கு போனேன். அங்குள்ள பழங்களில் ஆப்பிள்களின் மேல் Sticker ஒட்டப்பட்டிருப்பதை கண்டேன். எதற்காக Apple மேல் Sticker ஒட்டப்பட்டுள்ளது? அதில் Numbers உம் அச்சிடப்பட்டுள்ளதே. அந்த Sticker எதைக்குறிக்கின்றது? என்று யோசித்தேன்.
புரியவில்லை. ”Google Google பண்ணிப்பார்க்கணும்” என்று முணுமுணுத்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன். Google இல் தேடினேன். அதிர்ச்சியாக இருந்தது.
PLU code (Price look up number) இதனை வைத்து நாம் சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா /மரபணு மாற்று உற்பத்தியா / Chemical உரங்களில் விளைந்ததா? என அறிய முடியுமாம்.
எவ்வாறு அறிவது:
1. PLU code இல் 4 எண்கள் இருந்தால் – முழுக்க வேதி உரம் கலந்தது. (நான் அப்பிடியே Shock ஆகிட்டேன்)
2. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது “8” என ஆரம்பித்தால் – அது மரபணு மாற்றம் செய்யப்பட்டது.
3. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது “9” என ஆரம்பித்தால் – அது முழுக்க முழுக்க இயற்கையானது.
இப்போது புரிகிறதா? ஏன்? எதற்கு? Sticker ஒட்டியுள்ளார்கள் என்று? இனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்துப்பார்த்து வாங்கி சாப்பிட்டு நலம் பெறவும்.
அப்புறம் மிக முக்கியமாக ஒரு விசயம் சொல்ல மறந்திட்டன். எல்லாம் உங்க உடல் நலம் பற்றியது தான்!
அந்த Sticker ஆபத்தானது. அதை அப்பிடியே சாப்பிட்டுறாதீங்க! உரிச்சி எறிஞ்சிடுங்க. ப்ளீஸ்… ப்ளீஸ்…
நன்றி: தமிழ் இந்து
apple

No comments:

Post a Comment