Saturday, September 27, 2014

மதத்தின் நோக்கம் என்ன

மதத்தின் நோக்கம் என்ன என்பதை 
மனிதா உணர்ந்து கொள் இச்சைகளை களைந்து 
சுகத்தை துறந்து உண்மையான அன்பை 
உலகிற்கு காட்டு மதத்தின் வழியாக
மனித நேயம் அற்று உயிர்களை அழிக்க சொல்ல வில்லை 
மத உணர்வு கொண்டு உயிர்களை வதைக்க சொல்லவில்லை
மதத்தின் நோக்கம்
பொருளாதரத்தின் உயர்வைகாட்ட வேண்டும் 
பிற உயிர்களோடு அன்பை காட்ட வேண்டும் 
முத்தி என்னும் மார்க்கத்திற்கு வழி காட்ட வேண்டும் 
மரணத்தை மனித இனத்திற்கு உண்மையென்று புகட்ட வேண்டும்
இதுவே மதத்தின் நோக்கம்
மனித மதத்தோடு நீ கொண்ட அஞ்ஞானத்தை அகற்ற முற்படு 
மாற்றங்கள் என்பது இயற்கையானது 
மாறுதலை ஏற்படுத்துபவனே இறைவன் 
நேற்றைய நிலை இன்று நிலைக்காது 
சில வேளை இன்று நீடித்தாலும் நாளை நிச்சயம் 
மாறுதல் வரும்

காலநிலை யை பாருங்கள் காலத்தின் மாற்றத்தை யாவரும் ஏற்க வேண்டும் 
மனிதனின் எழுச்சியும் வீழ்ச்சியும் இயல்பானது

No comments:

Post a Comment