உலகத்தை கர்த்தர் படைத்து,
அதை மனிதனுக்கு கொடுத்தார்.
ஆனால் சாத்தான், தந்திரமாக
அதை மனிதனிடத்திலிருந்து பிடுங்கிக்
கொண்டான். முதல் மனிதனாகிய
ஆதாம், சாத்தானின் வார்த்தைகளுக்குச்
செவிக்கொடுத்து, தேவனுடைய
வார்த்தைக்குக் கிழ்படியாமல் போனதினால்,
உலகம் சாத்தானின் கையில் போனது.
அகவேதான், இயேசுவை சாத்தான் சோதித்த
சமயத்தில், "இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள
அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத்
தருவேன், இவைகள்
எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது;
எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக்
கொடுக்கிறேன்." (லூக்கா 4:6)என்றான்
"இந்த உலகம் எனக்கு ஒப்புக்
கொடுக்கப்பட்டிருக்கிறது !"
என்று சாத்தான் சொல்கிறான்.
யார் உலகத்தை சாத்தான் கையில்
ஒப்புக்கொடுத்தது? கர்த்தர்
உலகத்தை படைத்து, மனிதனிடத்தில்
கொடுத்தார். மனிதன்தான்
அதை சாத்தானிடத்தில் ஒப்புக்
கொடுத்து விட்டான். அகவேதான்,
"சாத்தான் உலகத்தின் அதிபதி!"(யோவான்
12:31) என்று அழைக்கப்படுகிறான். இப்படியாக,
இந்த உலகம் சாத்தானின் ஆளுகைக்குள்
சென்றபடியினால், கர்த்தரால்
தானாக இந்த உலகத்தில் கிரியை நடபிக்க
முடியாது. இந்த உலகத்திற்குச்
சொந்தக்காரர்களாகிய மனிதர்கள் ஜெபம் பண்ணும்போதுதான், கர்த்தர் இந்த
உலகத்தில் கிரியை செய்ய முடியும்.
அகவேதான், ஜெபம் பண்ணும்
மனிதர்களைக் கர்த்தர் தேடுகிறார்.
இயேசு கிறிஸ்து சர்வ வல்லமையுள்ள
தேவனாயிருந்த போதிலும், அவர் இந்த உலகத்தில்
உலாவிய நாட்களில், ஒரு பூரணமான
மனுஷனாக இருந்தபடியால், அவர் எந்த
அளவிற்கு ஜெபம் பண்ணினாரோ, அந்த
அளவிற்குத்தான், அவரால் இந்த உலகத்தில்
அற்புதங்களைச் செய்ய முடிந்தது! அதனால்
தான், அவர் பகலெல்லாம் ஊழியம்
செய்தபோதிலும், இரவெல்லாம்
ஜெபித்து கொண்டிருந்தார்.
No comments:
Post a Comment