கடுமையான பாலியல் வல்லுறவுக்கு பின்னரே கொட்டதெனியாவ சிறுமி படுகொலை : மரண பரிசோதனை அறிக்கை..(படங்கள் இணைப்பு)
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி தலைமையில் இன்று இடம்பெற்ற மரண பரிசோதனையின் போது, கொட்டதெனியாவ சேயா தேசிய சிறுமியின் மரணம் கொலை என்றும் சிறுமி கடுமையான பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த தகவலை பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
மேலும், துணித் துண்டு ஒன்றினால் சிறுமி கழுத்து இறுக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் விசாரணை குழுக்களை அமைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
கொடதெனியாவ சிறுமி கொலை – DNA அறிக்கை பொலிஸாரிடம் ஒப்படைப்பு
கம்பஹா, கொடதெனியாவயில், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 5 வயது சிறுமி சேயா சதெவ்மியின் மரபணு பரிசோதனை அறிக்கை இன்று வெள்ளிக்கிழமை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
ஜின்டெக் நிறுவனத்தினால் மரபணு பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மரபணு பரிசோதனை அறிக்கை கிடைத்தபின்னர் சிறுமியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை இலகுவில் கைது செய்து விடலாம் என பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் 3 விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
கொட்டதெனியாவ சிறுமி கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கம்பஹா கொட்டதெனியாவில் ஐந்து வயதான சிறுமியொருவர் வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்யப்பட்டமையை கண்டித்து, கம்பஹாவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளியை கைதுசெய்து மரண தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் உறக்கத்தில் இருந்தபோது கடத்தப்பட்டு காணாமல் போன சிறுமி, நேற்று முன்தினம் வீட்டினருகிலேயே சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
மரண விசாரணையில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கபட்டு, பின்னர் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டமை உறுதியாகியுள்ளது.
பிரதேசத்தை உலுக்கிய இச்சம்பவம் குறித்து, பொலிஸார் மூன்று விஷேட பொலிஸ் குழுக்களை நியமித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொட்டதெனியாவில் காணாமல் போன சிறுமி சடலமாக கண்டெடுப்பு
கம்பஹா-கொட்டதெனியாவ பிரதேசத்தில் காணாமல் போன ஐந்து வயதான சிறுமி, சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
ஷேயா சதெவ்மி என்ற குறித்த சிறுமி, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் காணாமல் போயிருந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறுமியின் வீட்டிற்கு அருகேயுள்ள வயலிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமி காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் நேற்றிலிருந்து நடத்திய தீவிர தேடுதலையடுத்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு தமது வீட்டில் உறங்கிய சிறுமி, உறக்கத்தின்போதே காணாமல் போயுள்ளார். அவர் உறங்கிய அறையின் யன்னல் வழியாகவே சிறுமி தூக்கிச்செல்லப்பட்டிருக்கலாமென தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment