Monday, September 14, 2015

அதிர்ச்சியளிக்கும் வகையில் ஐநா விசாரணை அறிக்கை: மனித உரிமை ஆணையர் அறிவிப்பு

அதிர்ச்சியளிக்கும் வகையில் ஐநா விசாரணை அறிக்கை: மனித உரிமை ஆணையர் அறிவிப்பு
[ திங்கட்கிழமை, 14 செப்ரெம்பர் 2015, 08:21.08 AM GMT ]
இலங்கை மீதான ஐநா விசாரணை அறிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாக ஐநா மனித உரிமை ஆணையர் அறிவித்துள்ளார்.
இன்று ஜெனீவாவில் தொடங்கிய மனித உரிமைப் பேரவையின் தொடக்கக் கூட்டத்தில் ஐநா மனித உரிமை ஆணையர் செயித் ராத் அல் உசைன் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையின் நீண்ட உள்நாட்டுப் போரின் கடைசி மாதங்களில் தீவிர மனித உரிமை மீறல்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழப்பை நாங்கள் எதிர்கொண்டோம்.
இந்த சபை ஆழமாக பொறுப்புக்கூறும் விசாரணை அவசியம் தேவை, என்று நாட்டில் நல்லிணக்கத்தை நோக்கிய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
நான் என் பரிந்துரைகள் உட்பட, மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தினால் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட்ட விரிவான விசாரணை அறிக்கையினை புதன்கிழமையன்று வழங்குவேன். அதன் முடிவுகள் மிகவும் தீவிர தன்மையிலானவைகள்.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நோக்கம் மற்றும் அவரது தலைமையின் கீழ் புதிய அரசு மேற்கொண்டுவரும் கடமைகளையும் நான் வரவேற்கின்றேன்.
ஆனால் இந்த சபை இலங்கையர்களுக்கும் கடமைப்பட்டுள்ளது. முடிவுகளின் பொறுப்புக்கூறல் செயல்முறையினை உறுதி செய்வது குறித்து சொந்த நம்பகத்தன்மையை கொண்டுள்ளது.
தீர்க்கமான முறையில் கடந்த தோல்விகளை தாண்டி நகர்கிறது, மற்றும் ஆழமான அமைப்பு ரீதியான மாற்றங்களை கொண்டுவருவதற்கு மீண்டும் தோன்றாமல் இருப்பதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என ஐநா மனித உரிமை ஆணையர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனிவா 30வது மனித உரிமைகள் கூட்டத்தொடர் பலத்த பாதுகாப்புக்கள் மத்தியில் ஆரம்பமாகியது.
கூட்டத்தொடரில் ஆரம்ப நிகழ்வில் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையை சமர்ப்பித்தார்.
அவ் அறிக்கையில் முக்கியமாக அண்மைய விடயமான சிரியா பிரச்சினை வெளீப்பட்டதுடன், இலங்கைப் போரின்போது இடம்பெற்ற சம்பவங்களையும் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என்ற வேண்டுகோளையும் தனது உரையில் வெளிப்படுத்தியிருந்தார்.
பலராலும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை விடயம் முக்கியத்துவம் பெறுவதில் சிரியாவின் உள்நாட்டுப் போர் தாக்கம் செலுத்தியிருப்பதாக கூறப்படுகின்றது.
இக் கூட்டத்தொடரில் பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் அரச தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சர்வதேச ஊடகவியலாளர்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்டுள்ளதுடன்,
இலங்கை தொடர்பான விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆர்வலர்கள் மத்தியில் பல எதிர்பார்ப்புக்கள் இருப்பதுடன் சர்வதேச நாடுகளின் நிலைப்பாடு தொடர்பில் ஐயப்பாட்டுடன் இருப்பதையும் அரங்கில் அவதானிக்க முடிகின்றது.


போர்க்குற்ற அறிக்கை – இலங்கை அரசைப் புனிதப்படுத்தும் அரசியல் நாடகம்

White_washing_war_crimesஐ.நா வின் போர்க்குற்ற அறிக்கை இலங்கை அரசின் பார்வைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கை அரசே போர்க்குற்ற விசாரணைகளை நடத்தும் பொறிமுறை ஒன்றை அமைப்பதற்காக ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றும் நோக்கில் நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அடிப்படையில் உலகம் முழுவதும் இன்று நடத்தப்படும் யுத்தங்களின் முடிவில் போர்க்குற்ற விசாரணை நடத்தி கொலைகாரர்களைத் தூய்மைப்படுத்தும் ஏகாதிபத்திய அரசியல் இன்று இலங்கையில் முன்னெடுக்கப்படுகிறது.
2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை நடத்தி முடிக்கப்பட்ட பின்னர், ஏகாதிபத்தியங்கள் ஈழத் தமிழர்களின் தலைவிதியை முழுமையாகக் கையகப்படுத்திக்கொண்டன. அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள் முதல் ஐந்து வருடங்கள் வரை மகிந்த ராஜபக்ச சுத்திகரிப்பில் ஈடுபட அனுமதித்தன. ஜனநாயகவாதிகள், முற்போக்கு சக்திகள், ஏகாதிபத்திய எதிப்பாளர்கள், இடதுசாரிகள் போன்ற மக்கள் நலனில் அகறை கொண்ட அனைவரையும் அழித்துச் சுத்திகரித்த மகிந்த ராஜபக்ச அரசிற்கு ஆயுதங்களும் ஆலோசனைகளும் வழங்கிய ஏகாதிபத்தியங்கள் பின்னதாக மைத்திரிபால சிரிசேனவிற்கு ஆதரவு வழங்கின.
போரின் பின்னதாக அதன் வெற்றிகளைத் தூய்மைப்படுத்தும் அரசியல் மைத்திரி – ரனில் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன் மறுபக்க்த்தில் போர்க்குற்ற விசாரணையை அமெரிக்காவே நடத்தி தமிழர்களுக்கு நீதிபெற்றுத் தரும் என்ற போலிப் பிரச்சாரம் புலம்பெயர் அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்டது. இப் பிரச்சாரங்கள் ஊடாகக் கடந்த ஆறு வருடங்களில் மக்களை விரக்திக்குள்ளாக்கிய புலம்பெயர் அமைப்புக்கள் ஏகாத்பத்தியங்களுக்கு மக்களைக் காட்டிக்கொடுத்தன.
இன்று அழித்த சர்வதேச நாடுகளிடமே சர்வதேசப் போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்று கோரி பத்து அப்பாவிகள் புடைசூழ சிவஜிலிங்கமும் அனந்தி சசீதரனும் நடைப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குழு கையெழுத்துத் திருவிழா நடத்திக்கொண்டிருக்கின்றது. இவை அனைத்திலுமிருந்து அன்னியப்படுத்தப்பட்ட மக்கள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர்.
சிரியாவிலிருந்து புலம்பெயர்ந்து வரும் அகதிகளுக்கு ஆதரவாக ஐரோப்பா முழுவதும் பெருந்திரளாக மக்கள் போராடுகின்றனர்.
தமிழ்ப் பேசும் மக்களின் நியாயமான போராட்டம் அதிகாரவர்க்கம் சார்ந்த போராட்டமாகக் முன்னெடுக்கப்பட்டதால் உலகம் முழுவதிலுமுள்ள மனிதாபிமான, ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஒதுக்கி ஓரம்கட்டப்பட்டன.
அமெரிக்கா போன்ற வரலாற்று வழிவந்த கொலைகார அரசுகளின் நலன்களுக்காகவே தமிழர்கள் போராடுகிறார்கள் என்ற விம்பம் உலக மக்களுக்கு வழங்கப்பட்டு போராட்டத்தை துடைத்துச் சுத்திகரித்த தமிழர் தலைமைகள் ஏற்படுத்திய அழிவுலிருந்து மீள்வதற்கான அரசியல் முன்வைக்கப்படும் வரை நாம் ஒரு படி கூட முனோக்கிச் செல்ல முடியாது.

ஐ.நாவுக்கு இணையாக இரு ஆணைக்குழு அறிக்கைகளை இலங்கை அரசு பாராளுமன்றில் சமர்ப்பிக்க ஏற்பாடு
[ திங்கட்கிழமை, 14 செப்ரெம்பர் 2015, 12:20.38 AM GMT ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளுக்கு இணையாக இலங்கை அரசாங்கம் இரு முக்கிய ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணாமற் போனவர்கள் தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு இதனை இம் மாத இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமென உயர்மட்ட அரச வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆணைக்குழுவின் தலைவரும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசருமான மெக்ஸ்வெல் பரணகம ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்த அறிக்கையை இரு வாரங்களுக்கு முன்னர் கையளித்தார்.
சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல் அல்லது இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்கள். அவை மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான சிபார்சுகள் போன்றவற்றை இந்த ஆணைக்குழு அறிக்கை முக்கியமாகத் தொட்டுக் காட்டியுள்ளது.
இளைப்பாறிய நீதிபதி நிஸ்ஸங்க உடலகம தலைமையிலான ஆணைக்குழு அறிக்கையும் பிரசுரமாக உள்ளது.
17 அரச சார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக இந்த ஆணைக்குழு விசாரணை மேற்கொண்டது.
ஜனாதிபதியிடம் இது தொடர்பான இடைக்கால அறிக்கை ஏற்கனவே கையளித்திருந்தது. இக்குழுவின் அறிக்கை ஒரு போதும் வெளியிடப்படவில்லை.
மகிந்த ராஜபக்ச ஆட்சியினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இந்த அறிக்கையை பிரசுரிக்க சிபார்சு செய்திருந்தது.
எழுத்து மூலம் ஐந்து நாட்களுக்குள் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசு அறிவிக்க வேண்டும்.
ஐ. நா. மனித உரிமைகள் பேரவைக்குச் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கை கடந்த வெள்ளியன்று வெளி விவகார அமைச்சுக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று (14/09) தமது உரைக்கு முன்னர் இந்த அறிக்கையின் பிரதியை வாசிப்பார்.
இளவரசர் ஸயிட் ராட் அல் ஹுஸைனை அமைச்சர் ஞாயிறன்று சந்திப்பார்.

சர்வதேச விசாரணையா, உள்ளக பொறிமுறையா? ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!
[ திங்கட்கிழமை, 14 செப்ரெம்பர் 2015, 12:01.00 AM GMT ]
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 30-வது அமர்வு அதன் ஆணையர் செயித் அல் ஹுசெய்ன் தலைமையில் இன்று திங்கட்கிழமை ஜெனீவாவில் தொடங்குகின்றது.
அமர்வின் முதல் நாளான இன்று இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
இதில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ‘இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்கச் செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல்’ என்னும் தலைப்பில் உரை நிகழ்த்துவார்.
ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் 30 வது அமர்வு இன்று முதல் எதிர்வரும் அக்டோபர் மாதம் 02 ம் திகதி வரை நடைபெறும்.
இந்த அமர்வில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தலைமையிலான குழுவொன்று ஜெனீவா சென்றுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன் தலைமையில் சட்டத்தரணிகள் குழுவொன்றும் ஜெனீவா பயணமாகியுள்ளது.
ஐ. நாவுக்கான இலங்கையின் வதி விடப்பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க அமர்வின் ஏனைய செயற்பாடுகளை பொறுப்பேற்று முன்னெடுத்துச் செல்வார்.
ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை எதிர்வரும் 30ம் திகதியன்று மனித உரிமைகள் பேரவையில் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்படும்.
மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் சம்பிரதாயப்படி இலங்கை மீதான அறிக்கையின் பிரதி, அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் அதற்கு எழுத்து மூலமான பதிலை வழங்குவதற்காக வெளிவிவகார அமைச்சு ஐந்து நாட்கள் கால அவகாசம் கோரியிருப்பதாகவும் ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனாலும் இது குறித்து வெளிவிவகார அமைச்சின் தொடர்பாடல் பிரிவைச் சேர்ந்த அதிகாரியான சத்யா ரொட்ரிக்காவை தொடர்புகொண்டு கேட்டபோது அவர் அதனை முற்றாக மறுத்தார்.
அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர் பெயர் குறிப்பிடாத நிலையில் படை வீரர்கள் பயங்கரவாதிகள் மற்றும் முன்னாள் அரசாங்கம் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருப்பதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், இலங்கையின் உள்ளக விசாரணைக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா இந்த அமர்வில் பிரேரணயொன்றை முன்வைக்கப் போவதாக அண்மையில் இலங்கை வந்திருந்த தெற்காசிய பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் கூறிச் சென்றார்.
அந்தவகையில், அமெரிக்கா, இலங்கைக்கு சாதகமாகவே இம்முறை செயற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டால் நிகழ்ச்சி நிரலின்படி ஒக்டோபர் 01 மற்றும் 02 ஆகிய தினங்களில் அது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
சுவிட்சர்லாந்து நேரப்படி இன்று காலை 9 மணிக்கு இந்த அமர்வு ஆரம்பமாகும். மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஜோச்சிம் ரூக்கர் சிறு குறிப்புரையுடன் அமர்வை தொடங்கி வைப்பார்.
அதனைத் தொடர்ந்து ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர் ஹெய்ட் அல் ஹுசைன் உரையாற்றுவார். இவரது உரையில் அனைத்து உலக நாடுகளினதும் மனித உரிமை விவகாரங்கள் குறித்து தெரிவிக்கப்படும்.
இதன்போது நிச்சயம் இலங்கை தொடர்பிலும் அவர் குறிப்பிடுவார். அதாவது உள்ளக விசாரணை நடத்தப்பட வேண்டுமா அல்லது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமா என்பது தொடர்பில் மனித உரிமை ஆணையாளர் இன்று அறிவிப்பார்.
பெரும்பாலும் இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் விவகாரம் தொடர்பில் அவர் சர்வதேச விசாரணை ஒன்றை கோரமாட்டார் என்றும் உள்ளக விசாரணை பொறிமுறையை முன்னெடுக்க இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்படவேண்டும் என்பதனையே வலியுறுத்துவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று நடக்கும் ஆரம்ப கூட்டத்தில் அமைச்சர் மங்கள சமரவீர, பிரிட்டன் மற்றும் பொதுநலவாய இராஜாங்க அமைச்சரான ஹியுகோஸ் வேயார் ஆகியோரும் உரையாற்றவுள்ளனர்.
அமைச்சர் மங்கள சமரவீரவின் உரை இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் அதன் முன்னெடுப்புக்களையும் பிரதிபலிப்பதாக அமையுமென நம்பப்படுகிறது.

தமிழர்களை மீண்டும் கைவிடும் ஐ.நாவும் தமிழர்களுக்கு முன்னுள்ள பணிகளும்
[ ஞாயிற்றுக்கிழமை, 13 செப்ரெம்பர் 2015, 06:24.56 PM GMT ]
வன்னி பெருநிலப்பரப்பில் மனிதாபிமான பணிகளை முன்னெடுத்து வந்த ஐ.நா உட்பட்ட சர்வதேச மனிதாபிமான அமைப்புகள், சிறீலங்கா அரசாங்கத்தின் பணிப்பின் பேரில் 2008 செப்டெம்பர் 16 ம் திகதி வன்னியை விட்டு வெளியேறின.
இந்த வெளியேற்றம் இடம்பெற்று ஏழு ஆண்டுகள் ஆகின்ற நிலையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முப்பதாவது கூட்டத்தொடர் நாளைய தினம் (செப்டெம்பம் 14) ஆரம்பமாகிறது.
தான் முன்னெடுக்கவிருக்கின்ற வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளின் போது மனிதப் பேரழிவுகள் இடம்பெறும் என்பதை சிறீலங்கா அரசாங்கம் தெளிவாக உணர்ந்திருந்தது. அதனாலேயே, சர்வதேச சாட்சிகளற்ற போரை நடாத்தும் முகமாக ஐ.நா உட்பட்ட சர்வதேச மனிதாபிமான அமைப்புகளை வன்னி பெருநிலப்பரப்பிலிருந்து வெளியேறுமாறு நிர்ப்பந்தித்தது. இதன் காரணமாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தவிர்ந்த ஏனைய அனைத்து சர்வதேச மனிதாபிமான அமைப்புகளும் வெளியேறின.
மாபெரும் மனிதப் பேரவலம் ஒன்றிற்கான ஒரு முன்னேற்பாடே இது என புரிந்து கொண்ட தமிழ் மக்கள், ஐ.நாவை வன்னிப் பெருநிலப்பரப்பை விட்டு வெளியேற வேண்டாம் என கெஞ்சினார்கள், கதறினார்கள். தம்மை போகவேண்டாமென கேட்டு, போர் வலயத்துக்குள் இருந்த தமிழ் மக்கள் சிந்திய கண்ணீரையும், தாம் வெளியேறுவதால் ஏற்படப் போகும் விளைவுகளையும் கருத்தில் கொண்டு சில  ஐ.நா பணியாளர்கள வெளியேறுவதற்கு தயக்கம் காட்டினார்கள். ஆனால், ஐ.நா. தலையகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய அவர்களும் வெளியேற வேண்டிய சூழல் உருவானது.
நடைபெற்றுக் கொண்டிருந்த போரின் கொடூரத்தையும், காத்திருக்கும் பேராபத்தையும், ஓடப்போகும் இரத்த ஆறையும் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும், மனியநேயப் பணியாளர்களும் தாயகத்திலிருந்தும் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் தொடர்ச்சியான வேண்டுகோள் விடுத்தனர். ஆயினும், அவர்களின் எச்சரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. சுமார் 7,500 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்திருக்கிறார்கள் என்ற தகவல் ஐ.நாவின் கசிந்த ஆவணம் ஒன்றினூடாக தெரியவந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த ஐ.நாவின் இலங்கைத் தீவுக்கான அன்றைய சிறப்பு தூதுவரான ஜோன் ஹொல்மெஸ், நாம் சடலங்களை எண்ணிக் கொண்டிருக்கவில்லை. இரத்த ஆறு ஒடுவதை தவிர்ப்பதற்காகவே பணியாற்றிக்கொண்டிருக்கிறோம் என்றார். சிறீலங்கா அரசாங்கத்தின் அழுத்தத்திற்கு அமைவாகவே, கொழும்பிலுள்ள ஐ.நா பணியகம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை உத்தியோகபூர்வமாக வெளியிடாமல் இருந்தது என்ற குற்றச்சாட்டுக்கள் பின்னர் வெளிவந்தது. ஐ.நாவின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் விசனமடைந்த ஐ.நாவின் இலங்கைக்கான பேச்சாளராக அன்றைய காலப்பகுதியில் பதவி வகித்த கோடன் வைஸ் அவர்கள் ஐ.நா பணியிலிருந்து போருக்குப் பின்னர் பதவி விலகினார்.
இனஅழிப்பு போரின் கொடூரத்தை அனுபவித்து கொண்டிருந்த மக்கள் சர்வதேச சமூகம் தம்மை காப்பாற்றும் என நம்பிக்கையோடு இருந்தனர். தாயகத்தில் வாழும் குரலற்ற மக்களின் குரலாக உலகின் பல்வேறு நாடுகளிலும் தொடர்ச்சியான போராட்டங்களில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் ஈடுபட்டனர். தமிழர்களின் அவலக்குரல் கணிசமானளவு சர்வதேசமயப்படுத்தப்பட்டாலும், இனஅழிப்பிலிருந்து தமிழர்களை காப்பாற்ற முடியாமற் போய்விட்டது.
முடிவு 146, 679 தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது என தெரியாமல் அவர்களின் உறவுகள் இன்றும் ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள். மார்ச் 2011 வெளியான ஐ.நா நிபுணர் குழு அறிக்கையின் பிரகாரம் சுமார் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் போரின் இறுதி காலப்பகுதியில் கொல்லப்பட்டுள்ளனர். நவம்பர் 2012 வெளியிடப்பட்ட ஐ.நாவின் இடைக்கால மீளாய்வு குழு அறிக்கையின் படி, அண்ணளவாக 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் தோல்வியென ஐ.நா செயலாளர் நாயகம் தொடக்கம் உலகின் பல தலைவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், அவர்கள் தோல்வியிலிருந்து பாடத்தை கற்கவில்லை என்பது மட்டுமல்ல அவர்களை நம்பியிருந்த தமிழ் மக்களை மீண்டும் கைவிட்டு விட்டார்கள் என்று பாதிக்கப்பட்ட மக்கள் குமுறத் தொடங்கியிருக்கிறார்கள்.
 
ஐ.நாவின் அறிக்கைகள் தமிழ் மக்களின் இழப்புகளை குறைத்தே வெளிக்காட்டுகின்றது என சுட்டிக்காட்டும் தமிழ் தரப்புகள், சுமார் ஒன்றரை இலட்சம் தமிழ் மக்கள் நான்காம் ஈழப்போரின் இறுதிக் காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டதை நிரூபிக்கும் முயற்சியில்  ஈடுபட்டுள்ளார்கள். அத்துடன், உண்மை தெரியவேண்டும் நீதி கிடைக்க வேண்டும் என்றால் அது சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றினூடாகவே சாத்தியப்படும் என கூறி தொடர்ந்தும் போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.
ஆனால், கடந்த சனவரி மாதம் சிறீலங்காவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் விளைவாக, மேற்குலகை மையமாகக் கொண்ட சர்வதேச சமூகமோ, ஐ.நாவோ சுதந்திரமான சர்வதேச விசாரணை என்ற நிலைப்பாட்டிலிருந்து தம்மை மாற்றுநிலையாக்கம் செய்திருக்கிறார்கள். ஆழமான அரசியல் பார்வை கொண்டவர்களுக்கு இது அதிர்ச்சியோ ஆச்சரியமோ அளிக்காவிட்டாலும், அவலத்தை சுமந்து கொண்டிருக்கும் மக்களுக்கு இது பேரதிர்ச்சியே. பூகோள அரசியலில் இலங்கைத் தீவின் முக்கியத்துவமும், அதற்கமைவாக தமிழ் அரசியல் தரப்புகள் எடுக்க வேண்டிய நிலைப்பாடுகளும் தொடர்ச்சியாகவும் நீண்டகாலமாகவும் வெளிப்படுத்தப்பட்டு வந்தது. ஆயினும் பொறுப்பானவர்கள் அதனை கருத்தில் எடுக்காததன் விளைவால், பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் ஏக்கத்தோடு வாழவேண்டிய நிர்ப்பந்தம் எழுந்துள்ளது.
ஐ.நா.மனித உரிமை பேரவையில் செப்டெம்பர் மாதம் 30ம் திகதி வெளிவர இருக்கிற அறிக்கை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களினதும் நீதிக்காக போராடிக் கொண்டிருப்போரினதும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யப் போவதில்லை. மாறாக, சிறீலங்கா அரசாங்கத்தினதும் அவர்களை பலப்படுத்துவதற்காக பணியாற்றுவோரினதும் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகவே அமையப் போகிறது. ஆதலால், உள்ளகப் பொறிமுறை உருவாக்கப்படுவது தடுக்கப்பட முடியாத விடயமாகியுள்ளது.
இத்தகைய சூழலில், தமிழர்கள் என்ன செய்யலாம்?
1. சிறீலங்காவின் உள்கப் பொறிமுறையை முற்றுமுழுதாக நிராகரிக்கிறோம் என்பதை தெளிவாகவும் உறுதியாகவும் தொடர்ச்சியாகவும் வெளிப்படுத்துவது நன்று. இதற்கமைவாக மக்கள் மயப்பட்ட அறவழிப் போராட்டங்களை தமிழர் தாயமெங்கும் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் நடாத்துதல்.
2. சிறீலங்காவின் உள்ளகப் பொறிமுறையென்பது நம்பகத்தன்மையற்றது என்பதை நிரூபித்தல்.
3. சாட்சிகளுக்கு பாதுகாப்பில்லை என்பதை வெளிப்படுத்தல்.
4. சிறீலங்கா அரசால் தமிழர்களின் சனநாயக ரீதியிலான போராட்டங்கள் தடுக்கப்படுவதையும், அவர்களின் சனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதையும் உடனுக்குடன் வெளிக்கொணரல்.
5. இனஅழிப்பில் ஈடுபட்ட இராணுவத்தினரை போரின் கதநாயகர்களாக கொண்டாடும் சிறீலங்கா அரசின் செயற்பாடுகளையும், குற்றவாளிகளே நீதிபதிகளாக மாற்;றப்பட்டுள்ளதையும் வெளிக்கொணர்தல்.
6. உள்நாட்டுப் பொறிமுறை மூலம் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதால், நீதிக்கும் பொறுப்புக் கூறலுக்குமான சர்வதேச பொறிமுறை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை செயற்பாடுகளின் மூலம் பலப்படுத்தல்.
7. சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற போராட்டத்தை வலுப்படுத்தல்.
மேற்கூறப்பட்ட விடயங்கள் அனைத்தும் விரைவாக சர்வதேசமயப்படுத்தப்பட வேண்டும். இதற்காக தாயகம், தமிழகம், புலம்பெயர் தேச மக்கள் பொதுத் தளத்தில் ஒன்றிணைய வேண்டும். தமிழர்களின் போராட்டம் சர்வதேசமயப்படுத்தப்படுகின்றமை அவர்களின் போராட்டத்துக்கு வலுச்சேர்ப்பதோடு, சிறீலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தத்தை உண்டு பண்ணும். இதன் காரணமாகவே, தமிழர் விவகாரத்தை உள்நாட்டு மயப்படுத்தும் செயற்பாடுகளுக்கு சிறீலங்காவின் புதிய அரசாங்கம் முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

நிர்மானுசன் பாலசுந்தரம்
bnirmanusan@gmail.com
ஐநா அறிக்கையை சர்வதேசம் ஆவலுடன் எதிர்பார்ப்பு
[ செவ்வாய்க்கிழமை, 15 செப்ரெம்பர் 2015, 12:26.03 AM GMT ]
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கையை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாடுகள் தெரிவித்துள்ளன.
நேற்றையதினம் ஜெனீவாவில் ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது கூட்டத் தொடரில் உரையாற்றிய அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்தனர்.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவை விசாரணை அறிக்கையில் முன்மொழியப்பட்டிருக்கும் விடயங்களை நிறைவேற்றுவதற்கும் நம்பத்தன்மையான பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதற்கும் ஏதுவாக இலங்கை அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பிரேரணையொன்றைக் கொண்டுவரவிருப்பதாக நேற்றைய அமர்வில் உரையாற்றிய அமெரிக்காவின் சர்வதேச அமைப்புக்களுக்குப் பொறுப்பான பிரதி உதவித் தூதுவர் எரின்.எம்.பார்க்கிளே தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிரான அறிக்கையை எதிர்பார்த்திருப்பதுடன், மனித உரிமை சூழலை முன்னேற்றுவதற்கும் நல்லிணக்க செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கைக்குத் தொடர்ந்தும் உதவி வழங்கத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியமும் அறிவித்துள்ளது.
அதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அதன் ஆணையாளர் முன்வைக்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இலங்கை அரசுக்கு தமது அரசாங்கம் ஆதரவளிக்கும் என்று பிரித்தானியாவும் அறிவித்துள்ளது.
ஐ.நாவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இலங்கைக்கு உதவ முடியும்! பிரித்தானியா
[ திங்கட்கிழமை, 14 செப்ரெம்பர் 2015, 04:35.52 PM GMT ]
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அதன் ஆணையாளர் முன்வைக்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இலங்கை அரசுக்கு தமது அரசாங்கம் ஆதரவளிக்கும் என்று பிரித்தானியா அறிவித்துள்ளது.
பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொதுநலவாயத்துறை பிரதியமைச்சர் ஹ கோ ஸ்வைரி இதனை இன்று ஜெனீவா 30வது மனித உரிமைகள் பேரவை அமர்வின்போது தெரிவித்துள்ளார்.
இதேவேளை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர  இன்று ஆற்றிய உரையை உன்னிப்பாக அவதானித்ததாக குறிப்பிட்ட அவர், இலங்கையின் இறுதி சமாதானத்துக்காக சர்வதேச ஊக்கம் அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதேவேளை புதிய அரசாங்கம் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளமையை அவர் பாராட்டினார்.
இந்தநிலையில் மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இலங்கை முன்வரவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் இலங்கை மீது கடும் அதிருப்தி
[ திங்கட்கிழமை, 14 செப்ரெம்பர் 2015, 04:18.54 PM GMT ]
சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் John Fisher மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் சுவிஸ் நாட்டின் தலைவர் ஆகியோர் இலங்கை மீது கடுமையான அதிருப்தியும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் உரையாற்றும் போதே அவர்கள் இவ்வாறு அதிருப்தியை வெளியிட்டனர்.

கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நாம்…

srilanka_war_crimeஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நடத்தப்பட்ட இலங்கை குறித்த விசாரணை அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை வெளியிடப்பட உள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் ஆற்றிய உரையைப் பாராட்டிய பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார் யுத்தத்தின் பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் முனைப்புக்களை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அறிக்கையின் அடிப்படையிலும் பரிந்துரைகளின் அடிப்படையிலும் நம்பகமான விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை உருவாக்கும் என நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியப் பழமைவாதக் கட்சி இவ்வாறு தெரிவிக்கும் அதே வேளை ‘பழமைவாதக் கட்சிக்கான தமிழர்கள்’ என்ற அமைப்பு ராஜபக்சவைத் தூக்கில் போடுவோம் எனக் கூறி வருகிறது.
அவர்களின் கேலிக்கூத்து அதற்கு மேலே சென்று லண்டன் நகரபிதா தேர்தலில் போட்டியிடும் பழமைவாதக் கட்சியின் உறுப்பினருக்கு தமிழ்த் தேசியத்தின் சார்பில் ஆதரிக்குமாறு தொலைபேசிக் குறுஞ் செய்திகளை அனுப்பி வருகின்றனர்.

No comments:

Post a Comment