Tuesday, May 26, 2015

வித்தியாவின் கொலை




சம்பவ தினம் வித்தியாவை கடத்திய “விதம் மற்றும் நேரம்” வெளியானது….

Related











வித்தியா கொலை சம்பவம்! -இதோ அனைத்தும் அம்பலம் (வீடியோ இணைப்பு)

வித்தியா கொலை சம்பவம்! -இதோ அனைத்தும் அம்பலம் (வீடியோ இணைப்பு)
வித்தியாவின் கொலைக்கு வேலணைப் பிரதேசசபைத் தலைவர் போல் (சிவராசா) வும் சம்மந்தப்பட்டுள்ளதாகவும் குற்றவாளிகளைக் காப்பாற்ற பெரும் முயற்சி எடுத்ததாகவும், குறித்த கற்பழிப்புக் கொலையை அவர்கள் எவ்வாறு செய்தார்கள் என்ற அதிர்ச்சித் தகவல்கள் காணொலியாக வெளியாகியுள்ளது. தமிழ் இனத்திற்கே கேவலமான வேலை செய்த குறித்த ஈனப்பிறவிகளைக் காப்பாற்றுவதற்காக தமிழ்மாறன் என்னும்.................. எவ்வாறு தொழிற்பட்டது என்பன தொடர்பான அதிர்ச்சித் தகவல்களும் இது தொடர்பாக யாழ் மாவட்ட ஐ.தே.க அமைப்பாளர் துவாரகேஸ்வரன் தெரிவிக்கும் அதிர்ச்சித் தகவல்களை முழுமையாக கேளுங்கள் வாசகர்களே!

இந்நிலையில், சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், புங்குடுதீவு பொலிஸ் நிலைய பெண் கான்ஷ்டபிள் ஒருவரை அடுத்த மாதம் திருமணம் செய்ய இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. புங்குடுதீவு வேலனை பிரதேச சபையில் தண்ணீர் பவுஸர் ஓட்டுநராக இருந்த தாக கூறப்படும் குறித்த நபர், புங்குடுதீவு பொலிஸ் நிலைய தண்ணீர் தாங்கிக்கு நீர் நிரப்பும் பொருட்டு அடிக்கடி அங்கு சென்று வந்துள்ளார். இதன்போது பொலிஸ் அதிகாரிகளுடன் நல்ல தொடர்பைப் பேணி வந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கொலைசெய்யப்பட்ட மாணவியின் தாயார் சில காலங்களுக்கு முன்னர் 3 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சியளித்துள்ளமையே கொலைக்கான பிரதான காரணியாக அமைந்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர்களால் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொலையின் பிரதான சந்தேகநபரும், அவரின் சகாக்களும் குற்றத்தை புரிந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. குற்றத்தை புரிவதற்காக 50,000 ரூபா தருவதாக இணக்கம் காணப்பட்டிருந்த தாகவும், இதன்படி முதலில் 10,000 ரூபா வழங்கப்பட்டிருந்த தாகவும் குற்றத்தின் பின்னர் மிகுதிப் பணத்தை தருவதற்கு ஒப்பந்தத்தை வழங்கியிருந்தவர் இணங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
- See more at: http://seithyulagam.com/fullview-post-2908-cat-1.html#sthash.RLfSYl1o.dpuf

வித்தியாவுக்கு நீதிகேட்டு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் "உங்கட ஆம்புளைகளை நீங்கதான் பார்த்துக்கொள்ளணும் - அதட்டலாக கூறிய பொலிஸ் அதிகாரி
[ வெள்ளிக்கிழமை, 22 மே 2015, 01:11.06 PM GMT ]
மாணவி வித்தியாவின் படுகொலைக்கு நீதி கேட்டு வடக்கு, கிழக்குப் பகுதியில் தொடர் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் யாழில் வித்தியாவுக்கு நீதிகேட்டு வயோதிப தாயொருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
அந்த வயோதிப தாயிடம் மூத்த பொலிஸ் அதிகாரியொருவர் முறைகேடான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான காணொளி இணையங்களில் பரவி வருகிறது.
சிரேஷ்ட் பொலிஸ் அதிகாரி ஒருவர் வயோதிப தாயை நோக்கி, � உங்கட ஆம்புளைகளை நீங்கதான் பார்த்துக்கொள்ளணும்� என அதட்டலாக கூறியுள்ளமை காணொளியில் பதிவாகியுள்ளது.



(3ம் இணைப்பு)
PhotoVideo
வித்தியாவின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறிய ஜனாதிபதி!
[ செவ்வாய்க்கிழமை, 26 மே 2015, 10:53.07 AM GMT ]
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதுடன் தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
வித்தியாவின் கொலை மற்றும் அதனையடுத்து ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில் நேரடியாக ஆராய்வதற்கு இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி வடக்கு மாகாண ஆளுநர் பளிகக்காரவை சந்தித்துக் கலந்துரையாடியதுடன் வேம்படி பெண்கள் உயர்தரப்பாடசாலையில் வடக்கில் தெரிவுசெய்யப்பட்ட 17 பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
அதன்பின்னர் வடக்கு ஆளுநரின் அலுவலகத்திற்கு வித்தியாவின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
அதன்போது குற்றவாளிகளை விரைவில் அடையாளம் கண்டு தண்டனையினை வழங்குவதாகவும் வித்தியாவின் கொலைக்கு நீதியை பெற்றுத் தருவதாகவும் பெற்றோரிடம் அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும் வித்தியாவின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை வடக்கு முதல்வரின் ஊடாக தெரியப்படுத்துமாறும் அவற்றை பெற்றுத்தர தான் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment