Thursday, February 17, 2022

மலையகத் தமிழர்கள் + ஈழத் தமிழர்

 மலையகத் தமிழர்கள் + ஈழத் தமிழர்

இலங்கைத் தமிழர்களில் ஈழத் தமிழர்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் என்ன வித்தியாசம்? இருவரில் யாருக்கு சிங்களர்களுடன் பிரச்சனை? யார் எண்ணிக்கையில் அதிகம் உள்ளனர்?

முதலில் `மலையகத் தமிழர்` என்றால் யார் என்று பார்த்துவிடுவோம். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பெருந் தோட்டப் பயிர்ச் செய்கைக்காக (தேயிலை, இரப்பர்...) தமிழகத்திலிருந்து அழைத்து வரப்பட்டு, இலங்கையின் மலையகப் பகுதிகளில் குடியேற்றப்பட்டவர்களே `மலையகத் தமிழர்` எனப்படுவார்கள். 1844 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்தியாவின் தமிழகத்திலிருந்து (மெட்ராசு மாகாணம்) இலங்கையின் கோப்பி தோட்டங்களில் வேலைச் செய்வதற்காக, லுதினன் கேர்னல் என்றி சீ. பேர்ட் என்பவர் 14 தொழிலாளர்களைக் கொண்டு வந்து குடியமர்த்தினார். இதுவே மலையக மக்களின் தொடக்க வரலாறு. சான்று வருமாறு.


A film on faceless plantation workers


மலையகத் தமிழர்கள் தவிர்ந்த பிற தமிழர்களை `ஈழத் தமிழர்` எனலாம். வரலாற்றுக்கு முந்திய காலம் முதல் ஈழத்தில் வாழும் தமிழர்கள் (நாகர்களின் வழித்தோன்றல்); இராச ராச சோழனின் படையெடுப்பு போன்ற பல்வேறு படையெடுப்புக் காரணங்களால்/ வணிகக் காரணங்களால் குடியேறியவர்கள் எனப் பல்வேறு வகைப்பட்ட தமிழர்கள் இதில் அடங்கும். இலங்கையில் சங்க காலத்திற்கு முன்னரே தமிழர்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகளைக் கீழுள்ள இணைப்பில் காணலாம்.


இலங்கையில் தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்வதாக கூறுகின்றனரே, அப்படியானால் ஒரு இலக்கியமோ அல்லது திருக்குறள் போன்ற நீதி நூல்களோ தோன்றியதாக கேள்விப்பட்டதில்லை. அப்படி இருந்தால் இந்தியாவில் ஏன் கற்பிக்கப்படவில்லை? கேள்விக்கு Elanganathan Kuganathan-இன் பதில் - Quora


அடுத்தாக இவர்களில் யார் எண்ணிக்கையில் அதிகம் எனப் பார்ப்போம். 1953 ம் ஆண்டு குடித்தொகை மதிப்பீட்டின்படி ஈழத்தமிழர்களின் (இலங்கைத் தமிழர்) எண்ணிக்கை 908 705 பேர், அதே வேளை மலையகத் தமிழர்களின் (பிரசைகளல்லாத இந்தியர்கள் ) எண்ணிக்கை 983 304 பேர். எனவே 1953 இல் மலையகத் தமிழர்களின் எண்ணிக்கையே அதிகம். ஆனால் பின்னர் பெருமளவான மலையகத் தமிழர்கள் சிங்கள அரசால் நாடற்றவர்களாக்கப்பட்டுத் துரத்தியடிக்கப்பட்டார்கள். இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்காகக் குறைந்த கூலியில் தமது குருதியினைக் கொட்டி நாட்டினை வளப்படுத்திய மலையகத் தமிழர்களை இலங்கையரசு வெறுங்கையுடன் துரத்தியடித்தது. இதன் போது இந்தியரசும் (நடுவண் அரசு) மாற்றாந்தாய் மனப்பாங்குடனேயே தமிழர் சிக்கலில் நடந்து கொண்டது. இதன் பின்பு ஈழத் தமிழர் எண்ணிக்கை மலையகத் தமிழரின் எண்ணிக்கையினை விடக் கூடி விட்டது. இறுதியாக நடைபெற்ற 2011 குடித்தொகை மதிப்பீட்டின் படி ஈழத்தமிழர் 2,269,266 பேர், மலையத் தமிழர் 839,504.


Demographics of Sri Lanka - Wikipedia.



இறுதியாக இவர்கள் இருவர்களில் (மலையகத் தமிழர், ஈழத் தமிழர்) யாருக்குச் சிங்களவர்களுடன் சிக்கல் எனப் பார்ப்போம். சிங்களவருக்குத்தான்(எளிய சிங்கள மக்களல்ல, சிங்கள அரசுக்கு) இவர்கள் இரு பிரிவினரையும் கண்டாலே ஆகாது. சிங்கள அரசு இரு பிரிவினரையுமே வெறுக்கின்றது. முதலில் சிங்கள அரசு மலையகத் தமிழர்களின் உழைப்பினை உறுஞ்சிவிட்டு, எவ்வாறு நாடற்றவர்களாகத் துரத்தியடித்தது என ஏற்கனவே பார்த்தோம். அதே போன்று மலையகத் தமிழர்களுக்கு எதிராகவே சிங்களப் பேரினவாதம் முதன் முதலில் வன்முறையிலீடுபட்டுமிருந்தது. 1939 ம் ஆண்டு நாவலப்பிட்டி என்ற இடத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிரான வன்முறையே இலங்கையின் வரலாற்றில் தமிழருக்கு எதிரான முதல் வன்முறையாகும். பின்னர் ஈழத் தமிழருக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலை உலகறிந்ததே



No comments:

Post a Comment