Sunday, July 24, 2016

உலகை உலுக்கிய விமான விபத்துக்கள்!

advertisement
அண்மைய சில ஆண்டுகளாக உலக நாடுகளில் விமான விபத்துக்கள் அதிகமாகவே இடம்பெறுகின்றன.
இவ்வாறான விமான விபத்துக்களானது விமானத்தில் பயணம் செய்வதற்கு மக்கள் அஞ்சும் அளவுக்கு மாறிபோயுள்ளது என்றே கூறலாம்.
அந்த வகையில் 2005ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலும், ஆண்டுக்கு குறைந்தது இரண்டு விமான விபத்துக்களாவது இடம்பெற்றுள்ளன.
இதில் 2014ஆம் ஆண்டு காணமல் போன மலேசிய விமானம் மற்றும் அண்மையில் காணமல் போன இந்திய போர் விமானம் குறித்த தகவல்கள் மர்மமாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அண்மைய காலமாக உலகை உலுக்கிய சில முக்கியமான விமான விபத்துக்கள் குறித்த தகவல்கள் இவை.
2005ஆம் ஆண்டு கிரீஸ் நாட்டில், போயிங் 737-300 ரக விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 121 பேர் உயிரிழந்தனர்.
ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி மேற்கிந்திய கரீபியன் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று மேற்கு வெனிசுவேலாவில் வைத்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 160 பேர் உயிரிழந்துள்ளனர்.
2005ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி நைஜீரிய சர்வதேச விமான நிலையத்தில், விமானம் பயணிக்கும் போது விபத்துக்குள்ளான நிலையில் 117 பேர் உயிரிழந்தனர்.
டிசம்பர் மாதம் 10ஆம் திகதி நைஜீரியாவில் சோசோலிசோ ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 108 பேர் உயிரிழந்தனர்.
2006ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் திகதி கருங்கடலில், அர்மாவியா ஏர்பஸ் ஏ320 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 113 பேர் உயிரிழந்தனர்.

ஜூலை மாதம் 9ஆம் திகதி ரஷ்யாவில் எஸ்7 ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் 128 பேர் உயிரிழந்தனர்.
advertisement
2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி துபோலெவ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் உக்ரைனின் டொனெட்ஸ்க் நகரில் விபத்துக்குள்ளானதில் 170 பேர் உயிரிழந்தனர்.
2007ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி கென்ய ஏர்லைன்ஸ் விமானம், கேமரூன் நாட்டில் விபத்துக்குள்ளானதில் 114 பேர் உயிரிழந்தனர்.
advertisement
2007ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி பிரேசில் நாட்டில், டி.ஏ.எம். ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியதில் 199 பேர் உயிரிழந்தனர்.
advertisement
2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி ஸ்பெயின் நாட்டின் பரஜஸ் விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 154 பேர் உயிரிழந்தனர்.
2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி பிரேசிலில் இருந்து பிரான்ஸ் சென்ற ஏர்பிரான்ஸ் விமானம் அட்லாண்டிக் கடலில் விழ்ந்து விபத்துக்குள்ளானதில் 228 பேர் உயிரிழந்தனர்.
2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் திகதி ஈரானில் காஸ்பியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 153 பேர் உயிரிழந்தனர்.
2010ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி லிபியா தலைநகர் திரிபோலியில் ஏர்பஸ் ஏ330யில் விபத்துக்குள்ளனதில் 103 பேர் உயிரிழந்தனர்.
மே மாதம் 22ஆம் திகதி ஏர் இந்தியாவின் போயிங் 737-800 ரக விமானம், மங்களூர் விமான நிலைய ஓடு பாதையை கடந்த நிலையில் விபத்துக்குள்ளானதில் 158 பேர் உயிரிழந்தனர்.
advertisement
2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் திகதி சீரற்ற வானிலை காரணமாக, பாகிஸ்தானின் எயார் ப்ளு விமானம், இஸ்லாமாபாத்துக்கு வடகிழக்கு மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானிதில் 152 பேர் உயிரிழந்தனர்.
advertisement
2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி கோலாலம்பூரிலிருந்து சீனா பீஜிங் நோக்கி பயணித்த மலேசிய விமானம் காணமல் போன நிலையில் அதில் பயணித்த 239 பயணிகளின் நிலை என்னவென்றே தெரியவில்லை.
2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி ஹாந்து தலைநகர், ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு சென்ற விமானம், ரஷ்ய எல்லையருகே சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த விபத்தின் போது விமானத்தில் பயணித்த 298 பேரும் உயிரிழந்துள்ளனர்.
advertisement
2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் திகதி அல்ஜீரியாவிலிருந்து பயணித்த விமானம் மாலி பாலைவலைத்தின் வடக்கு பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 118 பேர் உயிரிழந்தனர்.
2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் திகதி இந்தோனேசியாவின் சுரபயா விமானநிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு பயணித்த ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளாகி 162 பேர் உயிரிழந்தனர்.
advertisement
2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி தைவானில் "டிரான்ஸ் ஆசியா' நிறுவனத்தை சேர்ந்த பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 31 பேர் உயிரிழந்தனர்.
2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி இந்தோனேசியாவின் ஏர் ஆசியா விமானம் நடு வானில் சென்ற போது தொடர்பு துண்டிக்கப்பட்டு விபத்துக்குள்ளானதில் 162 பேர் உயிரிழந்தனர்.
advertisement
2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் திகதி ஸ்பெயினில் இருந்து ஜேர்மனிக்கு சென்ற பயணிகள் விமானம் பிரான்சின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் விபத்துக்குள்ளானதில் 150 பேர் உயிரிழந்தனர்.
2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி ரஷ்ய நாடுக்கு சொந்தமான விமானம், எகிப்தில் வைத்து விபத்துக்குள்ளானதில் 224 பேர் உயிரிழந்தனர்.
advertisement

No comments:

Post a Comment