Thursday, March 17, 2016

மகிந்த அணியின் கூட்டம்

இராணுவம் குவிக்கப்பட்ட நிலையில் மகிந்த அணியின் கூட்டம்! மகிந்தவும் பங்கேற்பு
[ வியாழக்கிழமை, 17 மார்ச் 2016, 11:48.34 AM GMT ]
இராணுவம் குவிக்கப்பட்டுள்ள நிலையில், மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் தமது பொதுக் கூட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
கூட்டத்தில் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகள் பெருமளவில் கலந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த மாபெரும் கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது, கட்சியின் உறுப்பினர்கள் தமது கருத்துக்களையும் வெளியிட்டுள்ளனர்.
தற்போதைய நல்லாட்சிக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய கட்சி நேற்று முன்தினம் பாரிய பேரணி ஒன்றை நடத்தியது. குறித்த பேரணிக்கு எதிரான இந்த கூட்டத்திற்கு மக்கள் அணி திரண்டு வருகை தந்துள்ளதாக கூறப்படுகிறது. 
இக்கூட்டத்தில் மகிந்த ராஜபக்சவும் பங்கேற்றுள்ளார்.  அதேவேளை மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
 

No comments:

Post a Comment