Friday, October 30, 2015

விக்கினேஸ்வரன்

அரசாங்கம் தான் நினைத்ததை திணித்து இது தான் நல்லிணக்கம் என்று கூறுவதில் பயனில்லை! விக்கினேஸ்வரன்
[ புதன்கிழமை, 28 ஒக்ரோபர் 2015, 03:46.58 PM GMT ]
மத்திய அரசாங்கம் நினைத்ததைக் கொண்டு வந்து எமது மக்களிடம் திணித்து, இது தான் நல்லிணக்கம் இதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுவதில் எந்த பயனுமில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள, உலக நாடுகளின் பெண்கள் விடயம் குறித்து ஆராயும் அமெரிக்க அதிகாரியான கேத்தரின் ரஸ்ஸல் மற்றும் அமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் குழுவினர் யாழிற்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இந்த விஜயத்தின் போது, வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் வடமாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்கள்.
சுமார் ஒரு மணித்தியாலயங்களுக்கு மேலாக இடம்பெற்ற இந்த சந்திப்பில் வடமாகாண பெண்கள் மற்றும் விதவைப் பெண்கள் குறித்த தரவுகளை பெற்றுக்கொண்டதுடன், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆராய்ந்துள்ளதாக முதலமைச்சர் கூறினார்.
இதன்போது அமெரிக்க அதிகாரிகளிடம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததாவது,
வடமாகாணத்தில் சுமார் 80 ஆயிரத்திற்கு மேற்பட்ட விதவைகள் இருப்பதுடன், அவர்களில் 25 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்கள் அதிகமாக இருக்கின்றார்கள்.
சமுதாயத்தில் இருக்கின்ற பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றிற்குரிய நடவடிக்கைகளை எடுக்காமல் விட்டால், அது வரும் காலத்தில் நன்மைகளைப் பயக்காது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் மத்திய அரசாங்கம் நினைத்ததைக் கொண்டு வந்து எமது மக்களுக்கு திணித்து, இது தான் நல்லிணக்கம் இதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுவதில் எந்த பயனுமில்லை. உண்மைகளை அறிந்து, மக்களுக்கு என்னசெய்ய வேண்டு மென்று அறிந்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடல், மிக நன்மைகள் பயக்கும் கலந்துரையாடலாக அமைந்துள்ளதென்று, வடமாகாண முதலமைச்சர் மேலும் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
குறிப்பாக, வடமாகாண பெண்களுக்கு இதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Charity Sri Lanka.


we have a burden about the poor children and widows in the Sri Lanka, about 80000 widows are living northern province in the Sri Lanka.  and lot of poor children also living in the many remote areas, and they need help.

And the king will answer them, ‘I tell you the truth, just as you did it for one of the least of these brothers or sisters of mine, you did it for me.’ (St Matt 25:40 [NET])

He that giveth unto the poor shall not lack: Pro 28:27.

Please Contact Us
email: jfamily6866@gmail.com
Phone: 0094771012083

Our Bank Details.

ASSEMBLY  OF  GOD  CHURCH, PEOPLE'S   BANK .PASSARA  BRANCH, 
Sri Lanka.  ACC NO. 116200160053965




























Thursday, October 29, 2015

மூக்கு இல்லாமல், நெற்றியில் மட்டும் ஒரே ஒரு கண்ணுடன் காணப்படுகின்றது.

எகிப்து நாட்டின் எல்சென்பெல்லா வெய்ன் நகரில் உள்ள மருத்துவமனையில் ஒரு ஆண்குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு மூக்கு இல்லாமல், நெற்றியில் மட்டும் ஒரே ஒரு கண்ணுடன் காணப்படுகின்றது.
குழந்தை வயிற்றில் இருக்கும்போது, கருவுற்றிருக்கும் தாய் உட்கொள்ளும் மருந்துகள் மற்றும் கதிர்வீச்சு காரணமாக ஏற்படும் பாதிப்பால், கருவில் இருக்கும் இழந்தைக்கு இத்தகைய குறைபாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த குழந்தை இன்னும் ஒரு சில நாட்களே உயிர்வாழ வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், அந்த குழந்தையின் பெற்றோர்கள் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
6df121d9-2bb7-422e-88bc-89e032ef61b5_ORIGINAL

Monday, October 5, 2015

படையினரைக் காப்பாற்றவா போர்க்குற்ற விசாரணை?

படையினரைக் காப்பாற்றவா போர்க்குற்ற விசாரணை?
[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஒக்ரோபர் 2015, 02:48.51 AM GMT ]
மகிந்த ராஜபக்சவைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் சர்வதேச விசாரணையை எதிர்க்கவில்லை. படையினரைக் காப்பாற்றவே உள்நாட்டு விசாரணையைக் கோருகிறோம் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க அண்மையில் கூறியிருந்தார்.
இதுபோலத்தான் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் போருக்கு முழுமையாக பொறுப்புக்கூற வேண்டியது விடுதலைப் புலிகளும், பிரபாகரனும் தான் என்றும், அவர்கள் உயிரோடு இல்லாத நிலையில் ஒரு தரப்பினருக்கு எதிராக மட்டும் வழக்கு தொடர்வதில் என்ன நியாயம்? என்று கேள்வியெழுப்பியிருந்தார்.
இவ்வாறாக அரசாங்கத் தரப்பில் உள்ளவர்கள் ஒருபக்கத்தில் ஐநா விசாரணைக்குழுவின் பரிந்துரைகளையும் ஐநா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்வதாக கூறினாலும் இன்னொரு புறத்தில் அதற்கு முரணான கருத்துகளையே வெளியிட்டு வருகின்றனர்.
அதாவது நம்பகமான விசாரணைகள் நடத்தப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றெல்லாம் சர்வதேச அரங்கில் வாக்குறுதி கொடுக்கின்ற அரசாங்கம் தான் படையினரைக் காப்பாற்றவே விசாரணை நடத்தப் போகிறோம் என்று கூறி வருகிறது.
இவ்வாறானதொரு நிலையில் நடக்கப் போகும் விசாரணைகள் விடயத்தில் தமிழ் மக்கள் கவலை கொள்ளாமல் இருக்க முடியாது. ஏனென்றால் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையில் அரசபடைகளும் விடுதலைப் புலிகளும் போர்க்குற்றங்களையும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களையும் இழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த விசாரணையில் கண்டறியப்பட்டுள்ள விடயங்களை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும் போது போர்க்குற்றங்கள் அல்லது மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் என்று நிரூபிக்கக் கூடியதாக இருக்கும் என்று ஐநா மனித உரிமை ஆணையாளர் கூறியிருக்கிறார்.
அரச படையினர் மருத்துவமனைகள் மீதும், பாதுகாப்பு வலயப் பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்தியதைக் கண்டறிந்துள்ளதாகவும், நீதிக்குப் புறம்பான படுகொலைகள், பெண்களுக்கெதிரான வல்லுறவுகள், பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளதை விசாரணைகளில் கண்டறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும் ஐநா மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இராணுவத்தின் மீது ஐநா மனித உரிமை ஆணையாளர் பணியகம் தெளிவான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்ற நிலையிலும் கூட படையினரைக் காப்பாற்றவே உள்நாட்டு விசாரணையை நடத்தக் கோருகிறோம். படையினரைத் தண்டிக்க அனுமதியோம். ஒரு தரப்புக்கு மட்டும் தண்டனை கொடுக்கப்படுவது அநீதி என்றெல்லாம் அரசதரப்பு கூறுவது முரண்பாடாக உள்ளது.
கடந்த மாத நடுப்பகுதியில் ஐநா விசாரணை அறிக்கை வெளியான போது மகிந்த ராஜபக்ச அணியைச் சேர்ந்த பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரான உதய கம்மன்பில குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு தண்டனை விலக்குரிமை பெற்றுக்கொடுக்கும் தீர்மானத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவருவேன் என்று கூறினார்.
இலங்கையில் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட படையினர் மற்றும் பொலிஸாரைப் பாதுகாக்க இத்தகைய சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்ட வரலாறு உள்ளது.
அதையே தாம் மீண்டும் கொண்டுவரப் போவதாக கூறியிருந்தார் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.
அவ்வாறானதொரு சட்டத்தை கொண்டுவந்தால் சர்வதேச அரங்கில் ஏற்கனவே தண்டனையில் இருந்து தப்பிக்கும் போக்கு குறித்து கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் இலங்கை மேலும் நெருக்கடிகளுக்கு உள்ளாகும்.
அதைச் சுட்டிக்காட்டாத பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிலர் பொதுமன்னிப்புத் தீர்மானத்தை பாராளுமன்றில் கொண்டுவரப் போவதாக கூறுகின்றனர்.
நாங்களோ போர்க்குற்றம் நடந்தது என்று ஏற்கவேயில்லை, ஆனால் இவர்கள் போர்க்குற்றங்கள் நடந்தது. தாமே குற்றவாளிகள் என்று முட்டாள்தனமாக ஒப்புக்கொள்ள முனைகின்றனர் என்று விசனத்துடன் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனோபாவம் போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து படையினரை மட்டுமன்றி, முன்னைய அரசாங்கத்தையும் கூட பாதுகாக்க அரசாங்கம் முற்படுகிறது என்பதைத் தான் காட்டுகிறது.
இந்த விடயத்தில் அரசாங்கத்தில் உள்ளவர்களை விட அரசாங்கத்துக்கு வெளியில் உள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா போன்ற ஒரு சிலர் தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர்.
போர் நடந்த காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்தவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.
தாமே இராணுவத்துக்கு உத்தரவுகளைப் பிறப்பித்ததாகவும் போர்க்குற்றங்கள் ஏதும் நிகழவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ஆனாலும் இராணுவத்தில் உள்ள சிலர் தவறான வழிநடத்தல்களினால் குற்றங்களை இழைத்திருக்கலாம் என்றும் அவ்வாறானவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும் அவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
அதைவிட போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக எத்தகைய விசாரணைகள் எங்கு நடத்தப்பட்டாலும் அதற்கு ஒத்துழைக்கத் தயார் என்றும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் தண்டனையை அனுபவிக்கவும் தயார் என்றும் அவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
ஆனால் இத்தகைய தெளிவுடன் அரசாங்கத்தில் உள்ள அரசியல்வாதிகள் எவரும் கருத்து வெளியிடுவதை காண முடியவில்லை.
அவர்கள் ஒரு மறைமுக நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகின்றனர்.
இப்போதைய நிலையில் போர்க்குற்ற விசாரணை என்பது படையினரையோ முன்னைய ஆட்சியாளரையோ முன்வைத்து இடம்பெறவில்லை என்பதையும் அவர்களைத் தண்டிக்க இடமளியோம் என்பதையும் வெளிப்படுத்துவதில் தான் அரசாங்கம் கூடிய அக்கறை காட்டுகிறது.
ஏனென்றால் சிங்கள மக்களும், படையினரும், இந்த விசாரணைகளுக்கு எதிராக வீதியில் இறங்கும் நிலை ஏற்பட்டால் இப்போதைய அரசாங்கத்தினால் தாக்குப் பிடிக்க முடியாது.
எனவே தான் சிங்கள மக்களையும் படையினரையும் சமாளிக்கப் பார்க்கிறது.
வெளிநாட்டுத் தலையீட்டுடன் கூடிய விசாரணைக்கு இணங்கினாலும் அவ்வாறு நடக்காது என்று நம்ப வைக்க முயற்சிக்கிறது.
படையினரைத் தண்டிக்க விடமாட்டோம் என்றும் கூறுகிறது.
ஆனால் நம்பகமான, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டால் நிச்சயமாக படையினரைப் போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாக்க முடியாது.
ஏனென்றால் ஏராளமான குற்றங்களுக்கு சாட்சிகளும் இருக்கின்றனர், சான்றுகளும் இருக்கின்றன.
அவற்றை வைத்து குற்றங்களை நிரூபிக்க போதிய வாய்ப்புகளும் உள்ளன.
ஐநா மனித உரிமை ஆணையாளரின் உரையிலும் அவரது விசாரணைக்குழுவின் அறிக்கையிலும் இதுபற்றித் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.
அதேவேளை விசாரணைகளின் பின்னர் குற்றம் காணப்படுவோர் மீதும் இந்த அரசாங்கம் இதே கருணையை வெளிப்படுத்துமேயானால் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லியக்கச் செயற்பாடுகள் முழுமையேடையாது போகும்.
ஏனென்றால் பொறுப்புக்கூறல், நல்லிணக்கச் செயற்பாடுகளில் தனியே சிங்கள மக்களுக்கும், படை்யினருக்கும் நம்பிக்கையூட்ட வேண்டிய பொறுப்பு மட்டும் இந்த அரசாங்கத்துக்கு இருக்கவில்லை.
இவர்களுக்கும் அப்பால், இந்தப் போரினால் பெரும் பாதிப்பை எதிர்கொண்ட தமிழ் மக்களினதும் நம்பிக்கையையும் பெற வேண்டும்.
அரசாஙகத் தரப்பில் உள்ளவர்கள் வெளியிடுகின்ற கருத்துகள் சிங்கள மக்களை திருப்திப்படுத்துகிறதோ இல்லையோ தமிழ் மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கவில்லை என்பதே உண்மை.
இத்தகைய போக்கு தொடர்ந்து சென்றால் அது எதிர்வரும் காலத்தில் உருவாக்கப்படக் கூடிய எந்தவொரு பொறுப்புக்கூறல், நல்லிணக்கச் செயன்முறைகளாலும் முன்னேற்றத்தை எட்ட முடியாது போகும்.
அவ்வாறான நிலை ஏற்பட்டால் இன்னும் 18 மாதங்களில் அரசாங்கத்தை மீண்டும் ஜெனிவாவில் தலைகுனிந்து நிற்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சுபத்ரா

moon red

வானில் தோன்றிய அதிசய ”இரத்த” நிலா: அட்டகாசமான புகைப்படங்கள்

Published:Monday, 28 September 2015, 07:49 GMTUnder:General
33 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அதிசய இரத்த நிலா நேற்று உலகின் பெரும்பாலான இடங்களில் தென்பட்டது. அதன் அட்டகாசமான புகைப்படங்கள் இதோ,
- See more at: http://www.manithan.com/news/20150928116994#sthash.aBfajMPg.dpuf