பழைய சோறுதானேன்னு இளக்காரம் வேண்டாம்!இன்று
- கடந்த வாரம்
- கடந்த மாதம்
- இன்று
- கடந்த வாரம்
- கடந்த மாதம்
- கூட்டணிக்கு அவசரமில்லை: கருணாநிதி 'அட்வைஸ்' ஜூலை 06,2015
- கடும் நிதி நெருக்கடியால் காங்கிரஸ் கட்சி திவால்? உறுப்பினர்களிடம் நிதி வசூலிக்க திட்டம் ஜூலை 06,2015
- ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முறைகேடு: உயர் நீதிமன்றம் விசாரிக்க விஜயகாந்த் கோரிக்கைஜூலை 06,2015
- தலைமறைவாக இருந்த ஆம்பூர் பவித்ரா கிடைத்தார்: சென்னையில் பதுங்கியவரை கைது செய்தது போலீஸ் ஜூலை 06,2015
- 6 நாடுகளுக்கு மோடி இன்று பயணம் ஜூலை 06,2015
- இன்று
- கடந்த வாரம்
- கடந்த ம
கருத்துகள் (1) கருத
Advertisement
பதிவு செய்த நாள்
28ஜூன்2015
00:இன்று நமது உணவு முறைகள் மாறி விட்டன. நமது முன்னோர் சாப்பிட்ட பழைய சோறு, வெங்காயம் காம்பினேஷன்தான் இன்றளவும் அவர்களை திடகாத்திரமாக வைத்திருக்கிறது. துரித உணவு சாப்பிட்டு வரும் இன்றைய இளையமுறையினர், 30 வயதிலேயே சர்க்கரை, இதய நோய்களால் பாதிக்கப்படுவதை பார்க்க முடிகிறது. ஆகவே, பழைய சோறு சாப்பிடுவதை இனி வழக்கமாக்கிக் கொண்டால் ஆரோக்கியம் நம்மை தேடி வரும். பழைய சோறு என்றால் கேவலமாக நினைக்கும் நாம், அதிலுள்ள நன்மைகள் குறித்து அறிந்து கொண்டால், நிச்சயம் வாயை பிளப்போம்.
பழைய சோற்றில் தான், வைட்டமின் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. தவிர, சிறு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் ட்ரில்லியன் கணக்கில் இருக்கின்றன. இது நமது உணவுப்பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம். இதனுடன் இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து உண்டால், அபரிமிதமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. காலை உணவாக பழைய சாதத்தை உண்டால், உடல் லேசாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்.
சோற்றில் இரவிலே தண்ணீர் ஊற்றி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் உருவாகிறது. மறு நாள் இதை குடிப்பதால், உடல் சூட்டை தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவை குணமாகும். அதுவுமில்லாமல் இதில் இருக்கும், நார்ச்சத்து
மலச்சிக்கல் இல்லாமல் காலையில் ப்ரீயாக போகலாம்.
இதனை தொடர்ந்து சாப்பிட்டால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து, உடல் எடையும் குறைந்து விடுவதாக, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், உடலுக்கு அதிகமான சக்தியை தந்து, உடலை
சோர்வின்றி வைக்க உதவுகிறது.
அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சரியாகி விடுகிறது. அல்சர் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் குணமாகிவிடும். எல்லாவற்றுக்கும் மேலாக, நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால், எந்த நோயும் வராமல் உடல் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும். அதனால்தான் நம் ஆட்கள், ஒரு சட்டி பழைய சாதம் சாப்பிட்டு விட்டு மாலை வரை வயலில் வேலை செய்ய முடிந்திருக்கிறது போலும். இதற்கு கைகுத்தல் அரிசி சிறந்தது. நம் வீடுகளில் கைகுத்தல் அரிசி கிடைக்கவில்லை என்றால், சாதாரண அரிசியே போதுமானது.
சூடான சாதத்தில் தண்ணீர் ஊற்றக் கூடாது. ஆறிய பின்பு மண் சட்டியில் போட்டு தண்ணீர் ஊற்றி, மறுநாள் காலையில் சிறிது மோர் கலந்து சின்ன வெங்காயத்துடன் சாப்பிட்டால் ஜில்லென்று இருக்கும். மதியம் வரை பசிக்காது.