Wednesday, June 3, 2015

சிகரெட்டை சில்லறையாக விற்றால் ரூ.5000 அபராதம்

சிகரெட்டை சில்லறையாக விற்றால் ரூ.5000 அபராதம், 2 ஆண்டு சிறை தண்டனை

கருத்துகள்


Make your own Baked Taco shells
மும்பை: சண்டிகர் மாநிலத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் சிகரெட்டை சில்லறையாக விற்பதற்கு தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரண்டொரு நாளில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என அதிகாரிகள் கூறினர். சில்லறையாக சிகரெட்டை விற்பவருக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும். மேலும் ரூ.5000 அபராதமும் விதிக்கப்படும். இரண்டாவது முறை சில்லறையாக சிகரெட்டை விற்பனை செய்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். மேலும் ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படும். சில்லறையாக சிகரெட் விற்பனை செய்வதை தடை செய்வதற்கு மகாராஷ்டிரா மாநில முதல் அமைச்சர் தேவேந்திர பட்நவிசும் ஒப்புதல் தந்துவிட்டார். இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு இரண்டொரு நாளில் வெளியிடப்படும். அதன் பின்னர் சில்லறையாக சிகரெட் விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்ட தடை அமல் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர். சிகரெட் பெட்டிகளில் சிகரெட் புகைப்பது உடல் நலத்துக்கு கேடு என்று படத்துடன் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் சில்லறையாக விற்கப்படும் சிகரெட்டில் இந்த எச்சரிக்கை இல்லை. எனவே சில்லறையாக சிகரெட்டை விற்பனை செய்வதற்கு தடை செய்ய முடிவு செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர். சிகரெட் புகைப்பவர்களில் 90 சதவீதமானோர் டீன் ஏஜ் வயதில்(17,18 போன்ற இளம் வயது) சிகரெட் புகைக்க கற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் சில்லறையாகத்தான் சிகரெட் வாங்குகிறார்கள். இதனால் சில்லறையாக சிகரெட் விற்பதை தடை செய்தால் புகைப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தடையை சுகாதார துறை நிபுணர்கள் வரவேற்றுள்ளனர். முன்பே இந்த தடையை கொண்டு வந்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் பொது தலைநகராக இருக்கும் சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் தான் முதலில் சில்லறையாக சிகரெட் விற்க தடை செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் இடையே பொது இடங்களில் புகையிலையை மெள்வதற்கு தடைவிதிக்கவும் மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment