Sunday, May 11, 2025

Tamil

  නෑ හැම දෙමළ මිනිසුන් අතරේ කුල භේදය තියෙනවා එයද ඒ දේ කඳුරට දෙමළ මිනිස්සු අතර තියෙනවා කුලය කියලා එකක් නෑ හැමෝම එකම මිනිස්සු ජාති වර්ගය මේ කඳුරට දෙමළ අය කියන්නේ තේ වතු වගා කිරිම වැඩවලවලට යෙදී සිටින නිසා ඔවුන් කම්කරු කියන නමින් කතා කරා හෙබේ මේ අයව කම්කරු ලෙස තියාගන්නට දේශපාලකයන් සහ ආණ්ඩුව සැලසුම් කරගෙනම හිටියා හේතුව ඔවුන් ඉගෙන ගත්තොත් එළියට යයි උසස් රස්සාවන් කරයි ඊට පසුව තේ වත්තට කම්කරු නැතිවෙයි කියලා ඔවුන් හිතුවා ඒ නිසා හොඳ පාසල් නැතුව ආර්ථික වර්ධනයට ඉඩ දෙන්නැතුව වහල් වශයෙන්ම සමහර දේශපාලකයන් උදාහරණයට තොණ්ඩ මල්ලත් තියාගෙන හිටියා ආ ලෝකය එක්සත් රාජය හැම එකනාටම අධ්‍යාපනය අවශ්‍යයි ඒ නිසා අධ්‍යාපනය වතු කම්කරුවන්ගේ ළමයින්ට දෙන්ඩ ඕනෙන් නිසා ඒ දේ සූදානම් කරලා දෙන්න සිද්ධ වුණා අවස්ථාව නැති නිසා අත දෙන්ඩ කවුරුත් නැති හින්දා ඔවුන් කම්කරු වශයෙන් සිටියා ඔවුන්ට අවස්ථාව ලැබුණා එවිට ඔවුන් දැන් කෝටි අධිපතිනුත් ලොකු ලොකු දේශපාලකයන් වශයෙනුත් ඉන්නවා අපි ගමේ දෙමළ අය කියලාත් කඳුරට දෙමළ අය වත්තේ වැඩ කරන අය කියලත් ඔවුන්ට එච්චර පාසුකම් දෙන්නේ නැහැ කියලා, මේ වගේ උතුර නැගෙනහිර මිනිස්සු පහත් මට මට ඕන සැලකුවා හෙබේ ඒ පැත්තෙනුත් මීටත් වඩා කම්කරුන් ඉන්න එක ඔවුන් කතා කරන්නේ නැත උතුරු නැගෙනහිර පැත්තෑත් දකුණු පැත්ත ඉතාම දුෂ්කර පළාතේ ඉන්න දුප්පත් මිනිස්සු දැනුත් ඉන්නවා ආර්ථික වර්ධනය සහ අධ්‍යාපනය වර්ධනය ඔවුන්ට දුන්නේ නැති හින්දා ඔවුන් හිටියා හෙබය දැන් කාලය වෙනස් වෙලා කාටවත් වහලුනුත් නොවේ දුප්පතුන් නොවේ we are respectful people කියන තැනකට හැමෝම ඇවිල්ලා

Tuesday, November 1, 2022

மார்ட்டின் லூத்தர் 95 சட்டங்களை, Martin

 🎀   கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபைக்கு எதிராக

 சீர்திருத்த கிறிஸ்தவ முன்னோடி மார்ட்டின் லூத்தர் 95 சட்டங்களை 31.10.2022 அன்று நள்ளிரவு விட்டன்பர்க்  தேவாலய முன்கதவில்  வைத்தார் என்பதுஅனைவருக்கும் தெரியும்

ஆனால் அவை என்னவென்று தெரியாத நிலையில் அநேகன் உள்ளனர். 


இதோ அவர்களுக்காக..🎀


1️⃣.மனிதன் தினமும் செய்யும் பாவத்திற்கு தேவன் அனுதினமும் மனஸ்தாப படுகிறார்.


2️⃣.பாதிரியார்கள் பாவமன்னிப்பு அளிக்க அனுமதி இல்லை. 


3️⃣.பாவமன்னிப்பு உடலை வருத்திக் கொள்வதால் பெறமுடியாது.


4️⃣.உள்ளான மனம் வருந்துதல் நம்முடைய வெளிப்படையான மாறுதலுக்கு வழி வகுக்கும். 


5️⃣.போப்பானவருக்கு பாவங்களை மன்னிக்க அதிகாரம் இல்லை. 


6️⃣.தேவன் மன்னித்தால் ஒழிய போப்பானவருக்கு மன்னிக்க அதிகாரம் இல்லை. தேவ மன்னிப்பை பற்றி அறிவிக்கவே அதிகாரம் உண்டு. 


7️⃣.தன்னை தாழ்த்தி மனம் திருந்தாதவனுக்கு தேவன் பாவ மன்னிப்பை அருளுவதில்லை.


8️⃣.மரித்தவர்களுக்கு தேவ வெளிபடுத்துதல் (வேதம்) எவ்வித பயனும் இருக்காது.


9️⃣.போப் மரணம்,ஆபத்து என்று யாருக்கு தீர்ப்பளித்தாலும் தேவன் நம்மீது அன்புள்ளவராகவே இருக்கிறார். 


1️⃣0️⃣.#அறியாமையினாலே குருமார்கள் உத்தரிப்பு ஸ்தலம் உண்டு என்று மரிக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கு கூறுகின்றனர். 


1️⃣1️⃣.உத்தரிப்பு ஸ்தலம் என்பது திருச்சபைக்கும் 

அதன் சட்டத்திற்கும் எதிராக விதைக்கபட்டது.


1️⃣2️⃣.மெய் மனம்திரும்புதலை கண்டறியவே தேவன் தண்டனைகளை அனுமதித்தார்.


1️⃣3️⃣.சபை மரித்தவர்கள் என்று தீர்ப்பு கூறினாலும் அவர்கள் மரணத்தின் வாயிலாக எல்லா தீர்ப்பு களிலிருந்து விடுதலை ஆவார்கள். 


1️⃣4️⃣.தேவபக்தி அற்று வாழ்ந்தால் உடல் நலம் குறையும்போது பயம் மேலோங்குகிறது.


1️⃣5️⃣.அந்த பயமே உத்தரிப்பு ஸ்தலம் உண்டு என்று நமக்கு போதிக்கிறது வேறொன்று மில்லை. 


1️⃣6️⃣.பாவமன்னிப்பின் நிச்சயம் இல்லாததால் தான் நமக்கு நரகம்,உத்தரிப்பு ஸ்தலம்,மோட்சம் என்பதை குறித்து பயம் உண்டாக்கிறது.


1️⃣7️⃣.உத்தரிப்பு ஸ்தலத்தில் ஆன்மாக்களின் துன்பங்கள் குறையும் என்பது பொய்யே.


1️⃣8️⃣.உத்தரிப்பு ஸ்தலம்  என்பது வேதவசனத்தால் நிரூபிக்கபடவில்லை.


1️⃣9️⃣.உத்தரிப்பு ஸ்தலத்தில் ஒரு ஆன்மா வாழும்பட்சத்தில் நம்மை (இரட்சிக்கபட்டவர்கள்)

போல் முழு இரட்சிப்பின் நிச்சயம் அவர்கள் அடைந்ததாக நிரூபிக்கபடவில்லை.


2️⃣0️⃣.பரிபூரண மன்னிப்பு என்னும் போப்பின் வார்த்தை செல்லுபடி ஆகாது.


2️⃣1️⃣.பாவமன்னிப்பு சீட்டு என்பது ஒரு மனிதனையும் இரட்சிக்காது.மன்னிக்காது.


2️⃣2️⃣.உத்தரிப்பு ஸ்தலத்தில் உள்ள மரித்த ஆத்துமாக்கள் போப்பாண்டவராலோ அவரது பூசையாலோ பாதர்களின் பூசையாலோ மன்னிக்கபட்டு நித்திய வாழ்வை அடை வதில்லை.அவர்கள் இந்த பூமியில் வாழும்போது பாவ மன்னிப்பு பெறவேண்டும். 


2️⃣3️⃣.பூரணமாக்கபட்ட(மனம்திறும்பிய)பரிசுத்தவான்களுக்கு பாவமன்னிப்பு அளிக்க நமக்கு அதிகாரம் உண்டு என்று கூறுவது. 


2️⃣4️⃣.இப்படிபட்ட பொய் பாவமன்னிப்பால் அனேகர் ஏமாற்றபடுகிறார்கள்.


2️⃣5️⃣.போப்பாண்டவருக்கு  உத்தரிப்பு ஸ்தலம் மீது எந்த அதிகாரமும் இல்லை. 


2️⃣6️⃣.நல்லெண்ணத்தின் அடிபடையில் போப்பாண்டவர் உத்தரிப்பு ஸ்தலத்தில் உள்ள ஆத்துமாக்களுக்காக வேண்டுதல் ஏறெடுக்கிறார். ஆனால் அந்த வேண்டுதலை கடவுள் கேட்பதில்லை. 


2️⃣7️⃣.காணிக்கை பெட்டியில் பணம் விழுகிற சத்தத்தின் அடிப்படையில் உத்தரிப்பு ஸ்தலத்தில் உள்ள ஆத்துமாக்கள் விண்ணகம் செல்வதில்லை  


2️⃣8️⃣. #காணிக்கை பொருளாசையை பெருக வைக்கும்,பாவமன்னிப்பு தேவனால் அருளப்பட வேண்டும்.


2️⃣9️⃣.புனித செவரினு,புனித பாஸ்கல் உத்தரிப்பு ஸ்தலத்தில் நீண்ட காலமாக இருக்க விரும்பினார்களா ? விலை கொடுத்து விண்ணேர.அவர்கள்  விரும்பினார்கள் என்பது தவறு.


3️⃣0️⃣.மனஸ்தாபம் என்பது உண்மையாது என்று எவராலும் நிச்சயமாக கூற இயலாது முழு பாவமன்னிப்பு மனஸ்தாபம் அளித்ததாக கூறவும் இயலாது. 


3️⃣1️⃣.பாவமன்னிப்பு பத்திரத்தை புரிந்து கொண்டு வாங்குகிறவனை அறிவது அறிது,உண்மையான மனஸ்தாப படுகிறவனை காண்பது அறிது.


3️⃣2️⃣.இப்படிபட்ட உறுதி அளிப்பவர்கள் (மன்னிப்பு பத்திரத்தால் இரட்சிப்பு நிச்சயம்)ஆக்கினைக்கே உள்ளாவார்கள்.


3️⃣3️⃣.இப்போதனைகளை(மன்னிப்பு பத்திரத்தால் இரட்சிப்பு நிச்சயம் )போதிக்கின்றவர்களை குறித்து அனைவரும்  எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். 


3️⃣4️⃣. மன்னிப்பு சீட்டு, சாத்திர மெந்துகள், பிரயா சித்தங்கள் இவை அனைத்தும் மனித ஏற்பாடுகளே.


3️⃣5️⃣. மன்னிப்பு பத்திரத்தால் இரட்சிப்பு நிச்சயம் என்று போதிக்கிறவர்கள் மாறுபட்ட கிறிஸ்தவர்கள்.


3️⃣6️⃣.மெய் மனஸ்தாபம் உடைய எந்த கிருஸ்தவனும் இவை (பாவமன்னிப்பு சீட்டு) இல்லாமல் பூரண மன்னிப்பை கிறிஸ்துவினால் பெற்றிட உரிமை உண்டு. 


3️⃣7️⃣.இயேசுவின் மீட்பால் மட்டுமே இறந்தவர்களும் உயிரோடு உள்ளவர்களும் பாவமன்னிப்பு சீட்டு இல்லாமலே எல்லா இறையருள் பாக்கியங்கள் பெற முடியும்.


3️⃣8️⃣. இந்த உண்மையை கூறுவதால் போப்பானவர் கூறும் பாவ மன்னிப்பை கேவலப் படுத்த அல்ல. அதை விட தேவவார்த்தை முக்கியம் அல்லவா.


3️⃣9️⃣. மன்னிப்பு பத்திரங்களின் மகத்துவத்தை மெய் மனஸ் தாபத்தின் அவசியத்தையும் எந்த பண்டிதர்களாலும் (ஒரே நேரத்தில்) விளக்க முடியாது.


4️⃣0️⃣. மெய் மனஸ்தாபம் பாவத்தின் தண்டனையில் இருந்த நம்மை காப்பாற்றவும் அப் பாவத்தை வெறுக்கவும் வழிவகை செய்கிறது.


4️⃣1️⃣. மன்னிப்பு சீட்டை எதிர்க்க நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் காரணம்.ஏனெனில் நற்செயல்கள் மூலம் விண் பாக்கியம் பெற முடியும் என்கிற தவறை அவர்கள் செய்திட நேரிடும்.


4️⃣2️⃣. மன்னிப்பு சீட்டு ஒருபோதும் அறசெயலுக்கு நிகராகாது நாம் மக்களுக்கு போதிக்க வேண்டும். 


4️⃣3️⃣. பக்குவமாக ஏழைகளுக்கு இறங்குவதும் தேவை பட்டவர் களுக்கு கடன் தந்து உதவுவதும் ஏற்று செயல்கள் எனவும் பணம் கொடுத்து பாவ மன்னிப்பு சீட்டு வாங்குவது தவறு என்று புரிய வைக்க வேண்டும். 


4️⃣4️⃣. பாவ மன்னிப்பு சீட்டு அடிப்படையில் எவரும் சிறப்படைவதில்லை.மாறாக அன்பின் அடிப்படையிலேயே சிறப்படைகின்றனர்.


4️⃣5️⃣. இக் கட்டில் உள்ளவர்களுக்கு உதவி செய்யாமல் பாவமன்னிப்பு சீட்டுக்கு பணம் செலுத்து கிறவர்கள் மேல் தேவ கோபம் வரும்  என நம் விசுவாசிகளுக்கு போதிக்க வேண்டும்.


4️⃣6️⃣. பணம் படைத்தவர்கள் தங்கள் குடும்ப நலனுக்காக சேமிக்க வேண்டுமே ஒழிய பாவமன்னிப்பு சீட்டுக்காக செலவழிக்க கூடாது என உபதேசிக்க வேண்டும். 


4️⃣7️⃣. பாவமன்னிப்பு சீட்டு வாங்குவது அவரவர் விருப்பம் அதை வாங்க யாரையும் கட்டாயப்படுத்த கூடாது.


4️⃣8️⃣. போப்பானவர் மக்களின் பணத்தை அல்ல அவர்களின் மெய்யான மனந் திரும்பு தலையே விரும்பவேண்டும்.


4️⃣9️⃣. பாவமன்னிப்பு சீட்டின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் அதிக நன்மை அடைவார்கள். பாவமன்னிப்பு சீட்டை நிராகரித்து கடவுள் பயம் அற்றவர்கள் அதிக மோசத்திற்கு ஆளாவார்கள் என்று போதிக்கவேண்டும்.


5️⃣0️⃣. இபபத்திர முறை  கேடுகளை போப்பரசர் அறிய நேர்ந்தால் பேதுரு ஆலயம் எரிந்து சாம்பலாகட்டும் என்பாரே அன்றி வேறு எந்த வகையிலும் ஆலயத்தை கட்ட முன்வரமாட்டார் என்று போதிக்க வேண்டும். 


5️⃣1️⃣.புனித பேதுருவின் ஆலயத்தை விற்றாவது அந்த மக்களுக்கு பணம் தந்து  அவர்கள் சுறண்டபடுவதை தடுப்பது போப்பரசரின் கடமை என்று மக்கள் அறிய வேண்டும். 


5️⃣2️⃣.போப் அரசரோ அல்லது அவரது பிரதிநிதிகளே உத்தரவாதம் தந்தாலும் பாவமன்னிப்பு சீட்டு இரட்சிப்பு தறாது என்று போதிக்க வேண்டும். 


5️⃣3️⃣. பாவச் சீட்டை முன்நிறுத்தி பிரசங்கத்தை தடை செய்பவர்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிரிகள்.


5️⃣4️⃣.பிரசங்கம் முக்கியமானது. அந்த நேரத்தை பாவமன்னிப்பு பத்திரத்தை பற்றி போதிக்க கூடாது.அப்படி செய்தால் ஆண்டவருடைய வார்த்தையை அவமதிப்பதுபோல ஆகும்.


5️⃣5️⃣.ஒருமுறை மணியடித்தால் ஒரு ஊர்வலம் ஒரு ஆராதனை என பாவமன்னிப்புக்காக செய்யபடும் பிரயாசங்கள் ஒழிந்து நூறுமுறை சுவிஷேசம் ஆராதனை என்னும் மணியோசை முழங்குவதை நாம் பிரபலபடுத்தவேண்டும் இதுவே போப் அரசரின் கருத்தாக இருக்க வேண்டும். 


5️⃣6️⃣.போப் அரசர் தானகவே பாவமன்னிப்பு தருகிறார் என்று மக்கள் புரிந்து கொள்ள வில்லை.


5️⃣7️⃣.பாவமன்னிப்பு பத்திர விற்பனையாளர்கள் விற்று தங்களுடைய பண வருவாயை பெருக்கிகொண்டுள்ளார்கள்.


5️⃣8️⃣.மன்னிப்பு சீட்டு எந்த பலனையும் அளிப்பதில்லை. இயேசுவின் சிலுவை மரணம் உயிர்தெழுதல் மனிதனுக்கு பாவமன்னிப்பை தருகிறது.


5️⃣9️⃣.புனித லாரன்ஸ் என்பவர் அக்கால கருத்துக்கு இசைய திருச்சபையின் ஏழைகளே திருச்சபையின் செல்வங்கள் என மொழிந்தார்.


6️⃣0️⃣.கிறிஸ்துவால் அருளபட்ட திறவுகோல் திருச்சபையின்  செல்வம் என்று அதிகார பூர்வமாக சந்தேகமின்றி துணிந்து கூறுகிறோம்.


6️⃣1️⃣.போப் அரசரால் தீர்ப்பிடபட்ட ஆக்கிணைகளை மன்னிதிட அன்னாரின் அதிகாரமே போதுமானது. 


6️⃣2️⃣.கடவுளின் மகிமை, கடவுளின் கிருபை ஆகிய வற்றிலான அதி பரிசுத்த சுவிஷேசமே மெய் செல்வம் ஆகும்.


6️⃣3️⃣.எனினும் இச்செல்வம் மனிதனின் இயல்புபடி வெறுக்கபடுகிறது.


6️⃣4️⃣.ஆனால் இச்செல்வங் களுக்கு மாறாக மன்னிப்பு பத்திரங்கள் முதல் நிலைக்கு மாற்றபட்டுள்ளது.


6️⃣5️⃣.எனவே சுவிஷேசமாகிய செல்வத்தை வலையாக பயன்படுத்தி முற்காலத்தில்  செல்வந்தர்களை பிடித்தனர்.


6️⃣6️⃣.தற்போது மன்னிப்பு பத்திரத்தின் வலையால் மக்களின் செல்வத்தை வாரி  கொள்கிறார்கள்.


6️⃣7️⃣.மன்னிப்பு பத்திரங்களை யெல்லாம் மகா உன்னத கிருபை என்று குதர்க்கவாதிகள் உளறுகிறார்கள்.


6️⃣8️⃣.ஆயினும் அவற்றை கடவுளின் கிருபையோடும் சிலுவையின் பக்தியோடு ஒப்பிடுகையில் அவை மிகமிக மலிவான கிருபையே ஆகும்.


6️⃣9️⃣.மன்னிப்பு பத்திர பிரச்சாரம் செய்பவர்களை வரவேற்க அத்தி யட்சர்களும்,குருக்களுக்கும் கடமை உள்ளதுதான்


7️⃣0️⃣.ஆயினும் இப்படி பிரசங்கம் பண்ண வருகிறவர்கள் தங்களுடைய சுயகதைகளை எண்ணங்களை பிரசங்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.


7️⃣1️⃣.பாவமன்னிப்பு பத்திரத்தின் எதார்த்தத்தின் உண்மை தன்மைக்கு மாறாக வசனிப்பவர்கள் புறம் பார்க்கப் படனும் சபிக்கபட்டவனுமாவான்


7️⃣2️⃣.இப்படி பிரசங்கிப்பவர்கள் கொண்டுள்ள வரம்புக்கு மீறிய அதிகாரம் மற்றும் அவர்களின் பொருளாசை ஆகியவற்றை எதிர்த்து நிற்பவன் ஆசீவதிக்கபட்டவன்.


7️⃣3️⃣.பாவமன்னிப்பு பத்திர வியாபாரம் பாதிப்படையும்படி சூழ்ச்சி செய்கிறார்கள் என்று கூறி அத்தகையோருக்கு எதிராக போப் அரசர் முழங்குகிறார்.


7️⃣4️⃣.ஆனால் தூய இறையன்பு வாய்மை ஆகியவை பாதிப்பு உள்ளாகும் என்பவற்களுக்கு எதிராகத்தான் போப் அரசர் இடியென முழங்கவேண்டும்.


7️⃣5️⃣.ஆண்டவரின் தாயாருக்கு அவபெயர் வரும்வகையில் நிந்தனை செய்வது பெரும் குற்றம் அதை மன்னிக்கும் ஆற்றல் மன்னிப்பு பத்திரத்திற்கு உண்டு என்று என்னுவது பைத்திய காரதனமானது.


7️⃣6️⃣.சுலபமாக நம் பாவங்களை மன்னிப்பு பத்திரம் மன்னித் திடாது என்பது தான் உண்மை. 


7️⃣7️⃣.தற்போதைய போப் அரசராக பேதுரு பதவி வகுத்தாலும் பெரிதான கிருபைகளை அவரால் அருள முடியாது என கூறுவது பேதுருக்கும் போப் அரசருக்கு எதிரான நிபந்தனையாகும்.


7️⃣8️⃣.1கொரிந்தியர் 12:28ன்படி பெரிதான ஈவுகளுக்காக சுவிஷேசம் ஆன்மீக ஆற்றல் மற்றும் குணபடுத்தும் வரங்கள் ஆகியவை போப்பின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை தான். 


7️⃣9️⃣.போப்பரசரின் இலட்சினையிள் பொரிக்கபட்டுள்ள சிலுவை சின்னம் கிறிஸ்துவின் சிலுவை சின்னம் ஒப்பு உம்மை யுடையதே என்று சொல்வது #தெய்வ_நிந்தனையாகும்.


8️⃣0️⃣.இத்தகைய நிந்தனைகள் மக்கள் மத்தியில் பரப்பும் அத்தி யட்சர்கள் குருமார்கள் வேத விற்பனர்கள் தேவனுக்கு பதில் கூறியே ஆக வேண்டும். 


8️⃣1️⃣.தான்தோன்றிதனமான  மன்னிப்பு பிரச்சார பத்திரத்தின் விளைவாக போப்பின் மீதுள்ள மதிப்பும் மரியாதைம் குறைந்து போகிறது.


8️⃣2️⃣.உதாரணமாக ஆலயத்தை கட்டும் பணிக் கென பெறப்பட்டு பணத்தால் உத்தரிப்பு ஸ்தலத்தில் உள்ள ஆன் மாக்களை போப்பரசரால் வெளியே கொண்டுவர கூடு மானால் எல்லா ஆன் மாக்களையும் ஏன் வெளியே கொண்டுவர இயலாது.


8️⃣3️⃣.மீட்கபட்டவர் களுக்காக ஜெபம் தேவையில்லை என்றால்,அது தவறு என்றால் இறந்த வருக்காக சடங்குகள் ஆண்டு இறுதி நினைவு கூறல் பூசைகள் ஏன் நிரூபிக்க படவில்லை.


8️⃣4️⃣.அவபக்தி உள்ள ஒரு ஆத்துமாவை உத்தரிப்பு ஸ்தலத்தில் பணத்தால் வெளிகொணர முடியுமாகில் நல்ல ஒரு ஆத்துமாவை அன்பின் பெயரால் உத்தரிப்பு ஸ்தலத்தில் நின்று வெளிகொணர கூடாதா?


8️⃣5️⃣.வேதவசனம் இப்போது செயல்படவில்லை என்றார் எப்படி பாவமன்னிப்பு பத்திரம் உயிர்பெற்றதும் செயலாற்றுவதுமாய் இருக்கும். 


8️⃣6️⃣.சீசரைவி பெரும் செல்வந்தரான போப் ஏன் தன் சொந்த பணத்தை செலவிட்டு ஆலயம் கட்டாமல் ஏழை பாமர விசுவாசிகளின் பணத்தை செலவிட்டு ஆலயம் கட்ட முயற்சிக்கிறார். 


8️⃣7️⃣.மெய் மனஸ்தாபத்தால் பூரண மன்னிப்பையும் பெரும் வாழ்வையும் பெற்றிடும் உரிமையாளருக்கு வேறு எதனை கொடுக்க விலைகிறார்.


8️⃣8️⃣.ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே போப் அரசரால் தரப்படுகிற மன்னிப்பும் ஆசிகளும் ஒரே நாளில் நூருமுறை தரப்படுமானால் திருச்சபைக்கு இதைவிட சிறந்த சிலாக்கியம் இருக்கமுடியாது. 


8️⃣9️⃣.பண வருவாயை எதிர்பார்க்காமல் ஆத்து  மாக்களின் மீட்பை போப் நாடுகிறார் என்றால் எனில் சரிநிகர் திராணி யுள்ளவர் களுக்கு மன்னிப்பு சீட்டைகளை ஏன் நிருத்திவைக்கிறார்.


9️⃣0️⃣.தனி அதிகாரத்தை பயன்படுத்தி திருச்சபைக்கு அடக்குவது கிறிஸ்தவர்களை துக்கபடுத்துவதாகும்.


9️⃣1️⃣.போப்பின் விருப்பமாகவே மன்னிப்பு பத்திரம் வழங்கப்பட்டதாக அறிவித்தால் மட்டுமே அனைத்தும் சுமூக முடிவுக்கு வரும். 


9️⃣2️⃣.சமாதானம் சமாதானம் எனக் கூறியும் சமாதானம் கொடுக்க முடியாத போலி தீர்க்கதரிகள் ஒழியட்டும்.


9️⃣3️⃣.சிலுவை சிலுவை என்று சொல்லி கிறிஸ்தவர்களின் துன்பம் ஒழிய செய்யும் மெய் தீர்க்கதரிகள் வாழட்டும்.


9️⃣4️⃣.தண்டனை மரணம் நரகம் ஆகியவற்றையே அறிந்து கிறிஸ்துவுக்கு பின் செல்ல நாம் வழிகாட்ட வேண்டும். 


9️⃣5️⃣.பல உபவத்திரவங் களோடே நாம் மோட்சத்திற்குள் பிரவேசிக்க வேண்டுமே தவிர போலி உத்திர வாதத்தினால் பிரவேசிக்க முடியாது என நாம் உறுதி கொள்ள வேண்டும்.

Thursday, February 17, 2022

மலையகத் தமிழர்கள் + ஈழத் தமிழர்

 மலையகத் தமிழர்கள் + ஈழத் தமிழர்

இலங்கைத் தமிழர்களில் ஈழத் தமிழர்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் என்ன வித்தியாசம்? இருவரில் யாருக்கு சிங்களர்களுடன் பிரச்சனை? யார் எண்ணிக்கையில் அதிகம் உள்ளனர்?

முதலில் `மலையகத் தமிழர்` என்றால் யார் என்று பார்த்துவிடுவோம். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பெருந் தோட்டப் பயிர்ச் செய்கைக்காக (தேயிலை, இரப்பர்...) தமிழகத்திலிருந்து அழைத்து வரப்பட்டு, இலங்கையின் மலையகப் பகுதிகளில் குடியேற்றப்பட்டவர்களே `மலையகத் தமிழர்` எனப்படுவார்கள். 1844 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்தியாவின் தமிழகத்திலிருந்து (மெட்ராசு மாகாணம்) இலங்கையின் கோப்பி தோட்டங்களில் வேலைச் செய்வதற்காக, லுதினன் கேர்னல் என்றி சீ. பேர்ட் என்பவர் 14 தொழிலாளர்களைக் கொண்டு வந்து குடியமர்த்தினார். இதுவே மலையக மக்களின் தொடக்க வரலாறு. சான்று வருமாறு.


A film on faceless plantation workers


மலையகத் தமிழர்கள் தவிர்ந்த பிற தமிழர்களை `ஈழத் தமிழர்` எனலாம். வரலாற்றுக்கு முந்திய காலம் முதல் ஈழத்தில் வாழும் தமிழர்கள் (நாகர்களின் வழித்தோன்றல்); இராச ராச சோழனின் படையெடுப்பு போன்ற பல்வேறு படையெடுப்புக் காரணங்களால்/ வணிகக் காரணங்களால் குடியேறியவர்கள் எனப் பல்வேறு வகைப்பட்ட தமிழர்கள் இதில் அடங்கும். இலங்கையில் சங்க காலத்திற்கு முன்னரே தமிழர்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகளைக் கீழுள்ள இணைப்பில் காணலாம்.


இலங்கையில் தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்வதாக கூறுகின்றனரே, அப்படியானால் ஒரு இலக்கியமோ அல்லது திருக்குறள் போன்ற நீதி நூல்களோ தோன்றியதாக கேள்விப்பட்டதில்லை. அப்படி இருந்தால் இந்தியாவில் ஏன் கற்பிக்கப்படவில்லை? கேள்விக்கு Elanganathan Kuganathan-இன் பதில் - Quora


அடுத்தாக இவர்களில் யார் எண்ணிக்கையில் அதிகம் எனப் பார்ப்போம். 1953 ம் ஆண்டு குடித்தொகை மதிப்பீட்டின்படி ஈழத்தமிழர்களின் (இலங்கைத் தமிழர்) எண்ணிக்கை 908 705 பேர், அதே வேளை மலையகத் தமிழர்களின் (பிரசைகளல்லாத இந்தியர்கள் ) எண்ணிக்கை 983 304 பேர். எனவே 1953 இல் மலையகத் தமிழர்களின் எண்ணிக்கையே அதிகம். ஆனால் பின்னர் பெருமளவான மலையகத் தமிழர்கள் சிங்கள அரசால் நாடற்றவர்களாக்கப்பட்டுத் துரத்தியடிக்கப்பட்டார்கள். இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்காகக் குறைந்த கூலியில் தமது குருதியினைக் கொட்டி நாட்டினை வளப்படுத்திய மலையகத் தமிழர்களை இலங்கையரசு வெறுங்கையுடன் துரத்தியடித்தது. இதன் போது இந்தியரசும் (நடுவண் அரசு) மாற்றாந்தாய் மனப்பாங்குடனேயே தமிழர் சிக்கலில் நடந்து கொண்டது. இதன் பின்பு ஈழத் தமிழர் எண்ணிக்கை மலையகத் தமிழரின் எண்ணிக்கையினை விடக் கூடி விட்டது. இறுதியாக நடைபெற்ற 2011 குடித்தொகை மதிப்பீட்டின் படி ஈழத்தமிழர் 2,269,266 பேர், மலையத் தமிழர் 839,504.


Demographics of Sri Lanka - Wikipedia.



இறுதியாக இவர்கள் இருவர்களில் (மலையகத் தமிழர், ஈழத் தமிழர்) யாருக்குச் சிங்களவர்களுடன் சிக்கல் எனப் பார்ப்போம். சிங்களவருக்குத்தான்(எளிய சிங்கள மக்களல்ல, சிங்கள அரசுக்கு) இவர்கள் இரு பிரிவினரையும் கண்டாலே ஆகாது. சிங்கள அரசு இரு பிரிவினரையுமே வெறுக்கின்றது. முதலில் சிங்கள அரசு மலையகத் தமிழர்களின் உழைப்பினை உறுஞ்சிவிட்டு, எவ்வாறு நாடற்றவர்களாகத் துரத்தியடித்தது என ஏற்கனவே பார்த்தோம். அதே போன்று மலையகத் தமிழர்களுக்கு எதிராகவே சிங்களப் பேரினவாதம் முதன் முதலில் வன்முறையிலீடுபட்டுமிருந்தது. 1939 ம் ஆண்டு நாவலப்பிட்டி என்ற இடத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிரான வன்முறையே இலங்கையின் வரலாற்றில் தமிழருக்கு எதிரான முதல் வன்முறையாகும். பின்னர் ஈழத் தமிழருக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலை உலகறிந்ததே



Saturday, February 12, 2022

திருவிருந்து

 

கிறிஸ்தவக் கோட்பாடுகள்

கேள்வி 104: திருவிருந்து (கர்த்தருடைய பந்தி) என்றால் என்ன?

பதில்: புதிய உடன்படிக்கையின் திருநியமங்களில் ஒன்று திருவிருந்து. கிறிஸ்து ஏற்படுத்தியபடி அப்பத்தையும், திராட்சை இரசத்தையும் அளிப்பதன் மூலமும், அவற்றில் பங்குகொள்வதன் மூலமும் கிறிஸ்துவின் மரணம் திருவிருந்தில் எடுத்துக்காட்டப்படுகிறது. தகுதியோடு அதில் பங்குபெறுகிறவர்கள் சரீரப் பிரகாரமாகவோ, மாம்சப்பிரகாரமாகவோ அல்லாமல் விசுவாசத்தினால் கிறிஸ்துவின் சரீரத்திலும், திரு இரத்தத்திலும், அவருடைய சகல பலாபலன்களிலும் பங்காளர்களாகி ஆத்மீக போஷாக்கடைந்து கிருபையிலும் வளர்கிறார்கள்.

(1 கொரி. 11:23-26; 1 கொரி. 10:16).

கேள்வி 105: தகுதியோடு திருவிருந்தைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமானவை யாவை?

பதில்: திருவிருந்தைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுள்ளவர்கள் அபாத்திரமாய் திருவிருந்தில் பங்குகொண்டு ஆக்கினைத்தீர்ப்பை அடையாதபடிக்கு, கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறிந்துகொள்ளுகிறோமா என்று தங்களுடைய அறிவையும், திருவிருந்தைப் புசிக்கும்படியாக தங்களுடைய விசுவாசத்தையும், தங்களுடைய மனந்திரும்புதலையும், அன்பையும் சோதித்துப் பார்த்து புதிய கீழ்ப்படிதலோடு திருவிருந்தில் பங்குகொள்ள வேண்டும்.

(1 கொரி. 11:28-29; 2 கொரி. 13:5; 1 கொரி. 11:31; 1 கொரி. 11:16-17; 1 கொரி. 5:7-8).

விளக்கக்குறிப்பு: கர்த்தரின் வேதம் புதிய ஏற்பாட்டின் நான்கு பகுதிகளில் திருவிருந்தைப் பற்றிய விளக்கத்தைத் தருகிறது. மத்தேயு 26:26-29; மாற்கு 14:22-25; லூக்கா 22:17-20; 1 கொரி. 11:23-26. இந்நான்கு பகுதிகளிலும் திருவிருந்து பற்றிய தெளிவான விளக்கங்களைக் கர்த்தர் நமக்குத் தந்திருக்கிறார். இருந்தபோதும் இதுபற்றிய பல தவறான போதனைகளை உருவாக்கி சுவிசேஷத்தைப் பலர் குழப்பப் பார்த்திருக்கிறார்கள். திருவிருந்து பற்றிய இந்த வினாவிடைப் போதனை அத்தகைய தவறுகளில் இருந்து நம்மைக் காப்பாற்ற முனைகின்றது.

கத்தோலிக்க மதத்தின் போதனை

இந்த இரு வினாவிடைகளில் இருந்து திருவிருந்தின் இரண்டு வெளிப்புற அம்சங்களாகஇந்த இரு வினாவிடைகளில் இருந்து திருவிருந்தின் இரண்டு வெளிப்புற அம்சங்களாக அப்பமும், திராட்சை இரசமும் இருப்பதைக் கவனிக்கிறோம். சரீரபூர்வமாகவோ, உலகப்பிரகாரமாகவோ இவற்றில் கிறிஸ்துவின் சரீரமோ, இரத்தமோ இருக்கவில்லை என்கின்றன இந்த வினாவிடைகள். இவற்றின் மூலம் சரீரப்பிரகாரமாக கிறிஸ்து தன்னை ஒப்புக்கொடுப்பதில்லை. இவற்றை ஆத்துமாக்களுக்கு சபைப் போதகர் அளிக்கும்போது கண்கட்டி வித்தைபோல் இந்த இரண்டு அம்சங்களும் உருமாற்றமடைவது போன்ற எந்த அற்புதமும் அங்கே நிகழ்வதில்லை. ரோமன் கத்தோலிக்க மதம் இதைத்தான் போதித்து வருகிறது. இது பெருந்தவறு. கத்தோலிக்க மதம், மாஸ் ஆகிய அற்புதம் நிகழ்கிறபோது அப்பம் கிறிஸ்துவின் சரீரமாகவும், திராட்சை இரசம் கிறிஸ்துவின் இரத்தமாகவும் உடனடியாக மாறிவிடுகின்றன என்ற தவறான போதனையை அளிக்கின்றது. இதை ஆங்கிலத்தில் Transubstantiation என்று அழைக்கிறார்கள். இதன் மூலம் மாஸ் நிகழ்கிறபோது அப்பமும், இரசமும் அற்புதமாக உருமாறிவிடுகின்றன என்கிறது கத்தோலிக்க மதம். அப்பத்தையும், திராட்சை இரசத்தையும் பெற்றுக்கொள்கிறவர்கள் மெய்யாகவே கிறிஸ்துவின் சரீரத்தையும், இரத்தத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள் என்கிறது கத்தோலிக்க மதம். கத்தோலிக்க மதப்போதனை தவறானது. இருந்தபோதும் வேதத்தில் இத்தகைய அற்புதத்தை நம்மால் வாசிக்க முடிகிறது. இயேசு கானானில் நடந்த திருமண வைபவத்தில் தண்ணீரை மெய்யான திராட்சை இரசமாக மாற்றினார். அது உண்மையான Transubstantiation. இதை யோவான் 2:1-11ல் வாசிக்கலாம். அத்தினத்தில் வெறுந் தண்ணீரை இயேசு திராட்சை இரசமாக்கினார். அன்று இயேசு அற்புதம் செய்வதற்கு முன் தண்ணீர் தண்ணீராக மட்டுமே இருந்தது என்பதை எல்லோரும் அறிந்திருந்தார்கள். இயேசு அற்புதம் செய்த பிறகு தண்ணீர் திராட்சை இரசமாக மாறியதையும் எல்லோரும் உணர்ந்தார்கள். இந்த அற்புதத்திற்கு அன்று பெருந்தொகையான சாட்சிகள் இருந்தார்கள். இந்த அற்புதத்தை அவர்களுக்கு எவரும் விளக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஆனால், ரோமன் கத்தோலிக்க மதம் அப்பமும், திராட்சை இரசமும் கிறிஸ்துவின்

 சரீரமாகவும், இரத்தமாகவும் மாறுவதாக பொய்யைச் சொல்லி மனிதர்களை நம்பவைக்க முயல்கிறது. இயேசு கானானில் செய்த அற்புதத்தைப்போல மாஸின்போது அப்பமும், திரா ட்சை இரசமும்மாற்றமடைவதில்லை.


லூதரன் சபையின் போத


லூதரன் சபையினர் திருவிருந்து பற்றிய இன்னொருவித போதனையைக் கொடுக்கிறார்கள். இவர்களுடைய விளக்கத்துக்கு Consubstantiation என்று பெயர். இவர்களுடைய விளக்கத்தின்படி ஆரம்பத்தில் அப்பம் அப்பமாக வும், திராட்சை இரசம் திராட்சை இரசமாகவுமே இருக்கின்றன. ஆனால், திருவிருந்து கொடுக்கப்படுகின்ற நேரத்தில் திடீரென அப்பத்தில் கிறிஸ்துவின் சரீரம் வந்து இணைந்துகொள்வதாக அல்லது தங்கிவிடுவதாக அவர்கள் விளக்கமளிக்கிறார்கள். அதாவது அப்பம் அப்பமாகத்தான் இருக்கிறது; இருந்தபோதும் அதில் கிறிஸ்துவின் சரீரமும் புதிதாக சேர்ந்துகொள்கிறது என்பது அவர்களுடைய விளக்கம். உதாரணத்திற்கு, கொல்லனொருவன் இரும்பை உலையில் போட்டு சூடாக்குகிறான் என்று வைத்துக் கொள் வோம். அவன் அதை உலையில் இருந்து வெளியில் எடுக்கும்போது அந்த இரும்பு கொதிக்கும் சூட்டோடு இருப்பதைப் பார்க்கிறோம். இரும்பு இப்போதும் இரும்பாகத்தான் இருக்கிறது. இரும்பு தன் நிலையை இழந்து விடவில்லை. ஆனால், அதோடு தகிக்கும் வெப்பம் சேர்ந்திருப்பதால் இப்போது தகிக்கும் இரும்பாக அது இருக்கிறது. இந்தவிதமாகத்தான் லூதரன் சபையாரின் போதனை இருக்கிறது


சீர்திருத்த சபையாரின் போ


இதுவரை நாம் பார்த்த இந்த இரண்டு விளக்கங்களின்படியும் கிறிஸ்துவின் சரீரத்தையும், இரத்தத்தையும் திருவிருந்தில் பங்குபெறுகிறவர்கள் “சரீரப்பிரகாரமாகவும் உலகப்பிரகாரமாகவும்” அநுபவிக்கிறார்கள். அதாவது திருவிருந்தில் பங்குபெறுகிறவர்கள் நரமாமிசத்தை உண்கிறவர்கள் போல் கிறிஸ்துவின் சரீரத்தை உண்டு அவருடைய இரத்தத்தை அருந்துகிறார்கள். ஆனால், இந்த இரண்டு போதனைகளும் முற்றிலும் வேதத்துக்குப் புறம்பானவை. இப்போதனைகளுக்கு மாறாக சீர்திருத்த திருச்சபைப் போதனையாளர்களின் திருவிருந்து பற்றிய விளக்கம் அமைந்திருக்கின்றது.  சீர்திருத்தப் போதனையின்படி அப்பமும், திராட்சை இரசமும் திருவிருந்து கொடுக்கும்போது அதே நிலையிலேயே எந்தவித மாற்றத்தையும் அடையாமல் இருக்கின்றன. தனை.னை

அடையாமல் இருக்கின்றன. அவற்றைப் பெற்றுக்கொள்கிறவர்கள் கிறிஸ்துவின் சரீரத்தையும், இரத்தத்தையும் நினைப்பூட்டும் அம்சங்களாக மட்டுமே அவற்றைக் கருதி, தங்களுடைய விசுவாசத்தினால் ஒரே தடவை நிறை வேறிய கிறிஸ்துவின் கல்வாரி சிலுவைப் பலன்களை ஆத்மீகரீதியில் அடையும்படியாக அவற்றைப் பெற்றுப் புசிக்கிறார்கள். இதுவே சீர்திருத்தப் போதனை (Reformed Doctrine) திருவிருந்துக்கு தரும் விளக்கம். இந்த விளக்கமே வேதபூர்வமான விளக்கமாகும்.


இயேசு கிறிஸ்து தன்னுடைய சீஷர்கள் மத்தியில் திருவிருந்தை ஏற்படுத் தியபோது சீஷர்கள் அவருடைய சரீரத்தையும், இரத்தத்தையும் புசிக்கவில்லை. அப்போது அப்பமும், திராட்சை இரசமும் மாற்றமடையவில்லை. அவற்றில் இயேசு சரீரப்பிரகாரமாக இருக்கவில்லை. இயேசு அவர்களுக்கு தன்னுடைய சரீரத்தையோ, இரத்தத்தையோ கொடுக்கவில்லை. இயேசு அவர்கள் மத்தியில், அவர்களோடு இருந்து அப்பத்தையும், திராட்சை இரசத்தையும் மட்டுமே அவர்களுக்கு அளித்தார். இந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து பின்னால் பவுல் திருவிருந்து பற்றி 1 கொரி. 11ல் விளக்கம் கொடுக்கும்போது பின்வருமாறு கூறுகிறார்: “நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாக இருக்கிற தல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமா யிருக்கிறதல்லவா?” (1 கொரி 10:16). “ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்” (1 கொரி. 11:26). பவுலின் வார்த்தைகளில் இருந்து அப்பமும், இரசமும் கிறிஸ்துவின் மரணத் தின் மூலம் நாமடைந்திருக்கிற ஆத்மீகப் பலன்களைக் குறிப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. திருச்சபைத் தலைவர்களில் ஒருவரான ஆகஸ்டீன் (Augustine) ஒருமுறை சொன்னார்: “யூதாஸ் இயேசுவோடிருந்து அப்பத்தைச் சாப்பிட்டான், ஆனால், அப்பத்தோடு இயேசுவைச் சாப்பிடவில்லை”.

நம்மை நாமே சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் (Self Examination)

ருவிருந்தைப் பெற்றுக்கொள்ள வரும்போது ஆத்துமாக்கள் தங்களைத் தாங்களே நிதானித்து அறிய வேண்டு¢ம் என்று பவுல் சொல்லுகிறார். அதாவது, அவர்கள்தங்களை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது இதன் பொருள். திருவிருந்தின் மூலம் நாம் ஆத்மீக பலன்களை அடைவதால் சுயபரிசோதனை அவசியமாகிறது. இது திரு விருந்தெடுக்கும்போது மிகவும் அவசியமாகிறது. 1 கொரி. 11ல் பவுல் திருவிருந்து பற்றி விளக்கம் கொடுக்கும்போது, “அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசிக்கக்கூடாது” என்று சொன்னதன் பொருளை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். பொதுவாகவே அநேகர் திருவிருந்தெடுப்பதற்கு தாம் தகுதியற்றவர்கள் என்று எண்ணி இருந்து விடுகிறார்கள். நம்மில் எவருமே திருவிருந்தில் பங்குகொள்ளத் தகுதியற்றவர்கள்தான். நாமெல்லோருமே பாவிகளாக கர்த்தருக்கு முன் தேவ மகிமையை இழந்து நிற்கிறோம் (ரோமர் 3:23). திருவிருந்தெடுப்பதற்கு தகுதியுள்ளவர்களாய் இருப்பது அவசியம். ஆனால், அதற்குப் பொருள் கர்த்தருடைய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு நாம் தகுதியுள்ளவர்களாய் இருப்பது என்பதல்ல. கிறிஸ்துவின் மரணத்தை நினைவுறுத்தும் திருவிருந்தில் பங்குகொள்ள வருகிறோம் என்ற சிந்தனையோடும், செய்யப்போகிற காரியத்துக்குத் தகுந்த மனநிலையோடும், சிந்தனையோடும், இருதயத்தில் பரிசுத்தத்தோடும் வருவதையே அது குறிக்கிறது. இதன் மூலம் திருவிருந்து எடுக்க வருகிற வேளையில் ஏனோதானோவென்று அலட்சியமாக வந்து அதை அசட்டை செய்யக்கூடாது என்று விளக்குகிறார் பவுல். அதற்கு மாறாக திருவிருந்து எடுக்க வருகிறவர்கள் சுயபரிசோதனைக்கு தம்மை உட்படுத்தி கர்த்தருக்கு முன் நாம் பாவிகள் என்ற சிந்தனையோடு, அவருடைய எந்த ஆசீர்வாதத்துக்கும் நாம் தகுதியற்றவர்கள் என்ற தாழ்மையுணர்வோடு, கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் மூலம் மட்டுமே பரலோக பாக்கியம் தமக்குண்டு என்ற ஆத்மீக சிந்தனைகளோடும் தேவபயத்தோடும் அதில் பங்குகொள்ள வேண்டும்.

இந்த வினாவிடை “கர்த்தருடைய சரீரத்தை நிதானித்து அறிந்து கொள்ளுகிறோமா” என்று நம்முடைய அறிவை ஆராய்ந்து பார்க்கும்படி சொல்லுகிறது. இதற்கு அர்த்தம், கிறிஸ்துவின் மரணத்துக்கும் ஏனைய எல்லா மரணங்களுக்கு இடையில் உள்ள வேறுபாட்டை நாம் அறிந்திருக்கிறோமா என்று நம்மையே ஆராய்ந்து பார்க்க வேண்டும் 

மரணத்துக்கும் ஏனைய எல்லா மரணங்களுக்கு இடையில் உள்ள வேறுபாட்டை நாம் அறிந்திருக்கிறோமா என்று நம்மையே ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதுதான். இதன் மூலம் தன்னுடைய மக்களுக்காக அவர்களுடைய பாவங்களையும், தேவ கோபத்தையும் தன்மேல் தாங்கி மரித்திருக்கும் கிறிஸ்துவின் மரணத்தை நாம் உணர்ந்து மதித்து திருவிருந்தில் கலந்துகொள்ள வேண்டும் என்பது பொருள். சுருக்கமாக சொல்லப்போனால், கிறிஸ்து நமக்காக தம்மையே பலிகொடுத்து நமது இரட்சிப்புகுரிய அனைத்தையும் நிறை வேற்றி நம்மை இரட்சித்திருக்கிறார் என்பதை நாம் உணர்ந்து தாழ்மையோடு திருவிருந்தில் பங்குகொள்ள வேண்டுமென்பதுதான். ஆகவே, திருவிருந்தில் பங்குகொள்ள பாத்திரமான மனிதன் தான் எந்தளவுக்கு தகுதியற்றவன் என்பதை உணர்ந்து கர்த்தரிடம் மிகுந்த நன்றியறிதலோடு வருகிறவனாக இருக்க வேண்டும்.


திருவிருந்தில் கலந்துகொள்ள பாத்திரமுள்ளவனாக இருக்க கிறிஸ்து நமக்காக என்ன செய்திருக்கிறார் என்பதை அறிவுபூர்வமாக உணர்ந்திருப்பது மட்டும் போதாது. அதற்கும் மேலாக நம்முடைய இருதயத்தை நாம் சோதித்துப் பார்த்து கர்த்தரோடு நமக்கு நல்ல ஆத்மீக உறவும், ஐக்கியமும் இருக்கிறதா என்றும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். நொருங் குண்டதும், நறுங்குண்டதுமான இருதயத்தை நாம் கொண்டிருக்கிறோமா என்றும், கிறிஸ்துவில் நாம் தொடர்ந்து விசுவாசத்தோடு இருக்கிறோமா என்றும், அவரில் அன்பு தொடர்ந்து நிலையாக இருக்கிறதா என்றும், அந்த அன்பின் அடிப்படையில் அவருக்குக் கீழ்ப்படிந்து நடந்து வருகிறோமா என்றும் நம்மை நாம் ஆராய்ந்து பார்த்துக்கொள்ளும்படி வேதம் வற்புறுத்துகிறது. இந்த இடத்தில்தான் அநேக விசுவாசிகள் தங்களைப் பற்றிய சந்தேகத்துடன் வாழ்கிறார்கள். கர்த்தரில் இருக்க வேண்டிய அளவுக்கு விசுவாசம் இல்லையே, அன்பு இல்லையே, மனந்திரும்புதல் இல்லையே என்று எண்ணிப் பார்த்து தங்களைப் பற்றிய சந்தேகத்துடன் வாழ்கிறார்கள். இத்தகைய எண்ணப்போக்கைப் பொதுவாகவே பல விசுவாசிகளில் காணலாம். ஆனால், இந்த இடத்தில் விசுவாசிகள் கவனமாக நடந்துகொள்ள வேண்டியது அவசியம். நம்மை நாம் பரிசோதித்து மனந்திரும்புதலும், அன்பும், 

கீழ்ப்படிதலும் வெறும் ஆரம்ப நிலையில் இருந்ததையே உணர்ந்திருக்கிறார் என்று அறிந்துகொள்ளுகிறோம். அப்படியானால் பவுல் எப்படி திருவிருந்தில் கலந்துகொள்ள வந்தார்? ஏனென்றால், கிறிஸ்து பாவிகளை இரட்சிக்க இந்த உலகத்துக்கு வந்தார் என்பதை அவர் அறிந்திருந்தார். அத்தோடு தான் வெறும் அடிமட்டப்பாவியாக இருந்தபோதும் கிறிஸ்து மட்டுமே தனக்கு எல்லாம் என்பதையும், தன்னுடைய இருதயத்தின் ஆனந்தமும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். கர்த்தரின் கிருபையின் விளைவுகளுக் கான சாட்சியங்களைத் தன் இருதயத்தில் சிறிதளவாகவே அவர் கண்ட போதும், கிறிஸ்துவின் நிறைவேறிய சிலுவைத் தியாகமும், அவரும் இல்லாவிட்டால் தனக்கு பரலோகமில்லை என்பதை அவர் உணர்ந்திருந்தார். இன்னொருவிதமாக சொல்லப்போனால் எந்தளவுக்கு இந்தக் கிருபைகள் நம்மில் வளர்ந்திருக்கின்றன என்பதைப் பற்றியல்லாமல் அந்தக் கிருபைகள் நம்மில் தொடர்ந்திருக்கின்றனவா என்பதை அறிந்துணர்வதிலேயே நாம் அதிக அக்கறை காட்டவேண்டும். இந்தவிதமான எண்ணங்களோடு திருவிருந்தில் கலந்துகொள்ள வராதவர்களே ஆபத்தான நிலையிலிருக் கிறார்கள். அப்படிப்பட்டவர்களே இஸ்ரவேலின் பரிசேயர்கள். அவர்கள் தங்களைப் பற்றிய பெருமிதமான எண்ணங்களோடு கர்த்தரின் ஆலயத்துக்கு வந்தார்கள். கர்த்தரை ஆராதிக்கவும், அவர் முன் ஜெபிக்கவும் தங்களுக்கு எல்லாத் தகுதிகளும் இருக்கின்றன என்ற அகங்காரத்துடன் ஆலயத்துக்கு வந்தார்கள். பாவ உணர்வு துளியும் அவர்களுடைய இருதயங்களில் இருக்கவில்லை. ஆனால், புறஜாதியானோ, “கர்த்தாவே, என் பாவங்களை மன்னியும்” என்று கர்த்தரின் முன் மண்டியிட்டான் (லூக்கா 18:10-13). பாவத்தைத் தவிர தன்னில் வேறு எதுவுமில்லை என்ற உணர்வோடு அந்தப் பாவத்துக்கு கர்த்தர் மட்டுமே பரிகாரம் செய்ய முடியும் என்ற தூய உணர்வுகளோடு அவன் கர்த்தரின் முன் பணிந்தான். அவனையே நாம் பின்பற்ற வேண்டும்.


திருவிருந்தில் பங்குகொள்ள வரும்போது பாவமன்னிப்பைப் பெறவும், இயேசுவின் திருஇரத்தத்தால் நாம் கழுவப்பட வேண்டும் என்ற எண்ணத் தோடும், நாம் மேலும் மேலும் பரிசுத்தராக வாழ கர்த்தர் நமக்கு வல்லமையைத் தரவேண்டும் என்ற எண்ணத்தோடும் வந்து அதில் கலந்துகொண்டு கர்த்தரில் களிப்படைய வேண்டும். அப்படித் திருவிருந்தில் நாம் கலந்து கொள்ளுகிறபோது, அவ்வேளையில் அப்பம் பகிர்ந்து

 திராட்சை இரசம் எல்லோருக்கும் விநியோகிக்கப்படுகிறபோது, கிறிஸ்துவின் ஒரே தடவை நிறைவேறிய கல்வாரி சிலுவைத் தியாகத்தினால் மட்டுமே நமக்கு இரட்சிப்பு கிடைத்திருக்கிறது, வேறு எதனாலும் அல்ல என்று நாம் அவருக்கே சகல மகிமையையும் அளிக்கிறோம். திருவிருந்தின் மூலம் அவர் மட்டுமே சகல மகிமையையும் அடைய வேண்டும்