இனச்சுத்திகரிப்பின் எழுவதாவது ஆண்டு:முத்தன் யோன்சன்
இரண்டாம் உலகப் போரின் போது, யேர்மனிய நாசிப் படைகளால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என அறுபது இலட்சத்திற்கும் மேற்பட்ட யூத மற்றும் நாடோடிக்கூட்டத்தைச் சார்ந்த மக்கள் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் கிறித்தவத்தைத் தழுவியிருக்காததன் காரணத்தாலேயே மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.
யூத வம்சத்தில், இய்ரேலில் பிறந்த ஏசு நாதரை இறைவனின் குமாரனாக ஏற்றுக்கொண்ட யூதர்களே கிறித்துவத்தை ஐரோப்பாவிற்கு கொண்டு வந்தார்கள். இதன் காரணமாகவே யேர்மனியர்கள் கிறித்துவத்தைத் தழுவ வேண்டிய நிலை ஏற்பட்டது. மற்றைய யூதர்கள் ரோமானிய பேரரசின் படைகளால் சிதறடிக்கப்பட்டதன் விளைவாக உலகெங்கும் சிந்தப்பட்டு, வாழ்ந்து வருகிறார்கள். இப்படியாக யேர்மனியில் வாழ்ந்த அப்பாவிகளே கொல்லப்பட்டார்கள்.
பௌத்தராகத் தன்னை உருமாற்றிக்கொண்ட ரசியோ யேர்மனிய பெண்ணான எலேனா பிளவாசுக்கி என்பவரின் ஆரிய வம்சமே உலகில் உயர்ந்தது என்ற கருத்தை விதைத்தார். சிங்கள பௌத்தர்கள் ஆரியர்களின் வழியைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்தை அவர்கள் மத்தியில் விதைத்து சிங்கள மக்களை நச்சூட்டினார். அதனைப் பயன்படுத்திக்கொண்ட இலங்கை அதிகாரவர்க்கம் அப்பாவிச் சிங்கள மக்களை ஏமாற்றி தாம் அதிகாரத்தில் அமர்ந்துகொள்ள பேரினவாதத்தைப் பயன்படுத்திற்று.இவரின் இதே சிந்தனையால் ஈர்க்கப்பட்டு அதில் மூழ்கியவரே யேர்மனிய அடேல்ப் கிட்லர்.
அப்பெண்ணின் வழிகாட்டலில் டேவிட் ஹேவிதாரண என்ற கிறீத்தவர் அனகாரிக எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதிபயங்கரமான இனவாதியாக மாற்றப்படுகிறார். இலங்கையில் சிங்கள கடும் தேசியவாதத்தை சிங்கள மக்கள் மத்தியில் ஊட்டுதல் எனும் இலட்சியத்துடன், புனைகதை பிணையப்பட்ட நூல்களையும் பிரசுரங்களையும் சிங்களத்தில் தயார் செய்தார்.
இப்படியான கற்கையுடனும் துணை ஆவணங்களுடனும் மீண்டும் இலங்கையில் அநகாரிக தர்மபால வந்திறங்குகின்றார். வந்திறங்கிய அவர் துரித கதியில் சிங்கள தேசியவாதத்தை தமிழ் இனத்தை அழிக்கும் சிங்கள பௌத்த பயங்கரவாதமாக தொடர்ந்து இயங்கும் சக்தியாக மாற்றுகின்றார். அதாவது இன்றும் என்றும் தழிழர்களை இலங்கையில் இருந்து அழித்தல் மற்றும் வெளியேற்றல் என்பதாகும்.
யூதர்கள் ரோமானிய பேரரசின் படைகளால் சிதறடிக்கப்பட்டதன் விளைவாக ஐரோப்பாவில் குடியேறினார்கள். இந்தியாவில் ஏற்பட்ட இந்து ஆதிக்கம் காரணமாக காரணமாக பல பாகங்களில் இருந்து பௌத்தர்கள் இலங்கையில் வந்து குடியேறி மதத்தால் ஒருங்கிணைந்து சிங்களவர்களானார்கள் யூதக் கிறித்தவர்களே யேர்மனியர்களுக்கு கிறித்தவம் கிடைக்கும் படியாகச் செய்தார்கள். இந்திய தழிழ் பௌத்த துறவிகள் இலங்கையில் பௌத்தம் அழியாது பாதுகாத்து வந்தார்கள். யாருடைய நூல் யேர்மனிய நாசிப்படையை உருவாக்கி இனவழிப்பைச் செய்ததோ, அவரின் பாசறையிலிருந்து நேரடியாக கிளம்பிய சிங்கள பௌத்த இனவாத பூதம் தழிழ் மக்கள் மீதான இனவழிப்பை இன்று வரை மிக நிதானமாகவும், நேர்த்தியாகவும் செய்து வருகிறது.
ஆச்விட்ச் என்னும் இடத்தில், யேர்மனிய நாசிப்படைகளால் யூதர்கள் அடைத்து வைத்து படு பயங்கரமாக கொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த நெரிசல் முகாம் விடுவிக்கப்பட்ட நாளை, உலகில் இனவழிப்பு தினமாக நினைவு கூருகிறார்கள். தமிழர்கள் முள்ளிவாய்க்கால் படுகொலையின் இறுதி நாளை புதிய இனவழிப்பின் ஆரம்ப நாளாக நினைவு கூருகிறார்கள்.
இதிலிருந்து தமிழர்களாகிய நாம் யூதர்கள் இனவழிப்புக்குள்ளான தினத்தை நினைவு கூருவது மட்டுமல்லாது, அவர்களையும் எமது துயரில் பங்கு கொள்ள வைக்க வேண்டும். யூதர்கள் மத்தியிலுள்ள முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்குப் புதிய இனப்படுகொலைகளின் கோரம் குறித்து புரியவைக்க வேண்டும். மற்றும் இனவழிப்புக்குள்ளான அனைத்து இனங்களின் துயரில் பங்கு கொண்டு மனித நேயத்துடன் வாழ வேண்டும்.
No comments:
Post a Comment